.
🟩 உயில் ஆவணம் (பகுதி 1)
Q1. உயில் ஆவணம் என்றால் என்ன?
A1. ஒரு நபர் தன் மரணத்திற்கு பிறகு சொத்துகளை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதி வைக்கும் ஆவணம் தான் உயில் (Will).
Q2. உயிலின் வரையறை எங்கு கொடுக்கப்பட்டுள்ளது?
A2. இந்திய வாரிசுரிமை சட்டம் (Indian Succession Act) பிரிவு **2(h)**ல்.
Q3. உயில் எத்தனை வகை?
A3. இரண்டு வகை –
1️⃣ Privileged Will
2️⃣ Unprivileged Will
Q4. உயில் எழுத யார் தகுதியுடையவர்?
A4. பிரிவு 59 & 61 படி, சவுண்ட் மைண்ட் (சரியான மனநிலை) உடைய, வயது வந்த நபர் எழுதலாம்.
Q5. உயில் எழுதும்போது எந்த விதிகள் பின்பற்ற வேண்டும்?
A5. பிரிவு 63ல் சொல்லப்பட்டுள்ளது – இரண்டு சாட்சிகள், டெஸ்டேட்டரின் கையெழுத்து, சரியான நடைமுறை.
Q6. உயிலை நீதிமன்றத்தில் யார் நிரூபிக்க வேண்டும்?
A6. உயிலை சார்ந்து உரிமை கோரும் நபரே (beneficiary) அதை நிரூபிக்க வேண்டும்.
Q7. நிரூபிக்க வேண்டிய முக்கிய இரண்டு அம்சங்கள்?
A7.
1️⃣ Will duly executed (சரியாக எழுதப்பட்டது)
2️⃣ Will is valid (சட்டப்படி செல்லுபடியாகும்)
Q8. உயிலில் டெஸ்டேட்டரின் கையெழுத்து என்ன அர்த்தம்?
A8. அவர் தானே கையொப்பம் போட்டிருக்க வேண்டும்; மற்றவர் போலியாக கையெழுத்து போடக்கூடாது.
Q9. டெஸ்டேட்டர் “sound disposing mind” என்றால் என்ன?
A9. உயில் எழுதும் நேரத்தில் அவர் முழுமையான அறிவும், புரிதலும் கொண்டிருக்க வேண்டும்.
Q10. டெஸ்டேட்டர் உயிலின் உள்ளடக்கத்தைப் புரிந்திருக்க வேண்டுமா?
A10. ஆம். அவர் எந்த சொத்துகள், யாருக்கு, எந்த விளைவுடன் கொடுக்கப்படுகின்றன என்பதை அறிந்திருக்க வேண்டும்.
Q11. டெஸ்டேட்டர் ஏமாற்றப்பட்டால் (misrepresentation) உயில் செல்லுமா?
A11. இல்லை. அவர் உண்மையில் எதற்காக கையெழுத்து போட்டார் என்று தெரியாமல் இருந்தால், உயில் செல்லாது.
Q12. உயிலில் சுய விருப்பம் அவசியமா?
A12. ஆம். அவர் கட்டாயம் இல்லாமல், சுய விருப்பத்தால் கையெழுத்து போட வேண்டும்.
Q13. வலுக்கட்டாயம் அல்லது மிரட்டல் இருந்தால் உயில் நிலை?
A13. அப்படி எழுதிய உயில் செல்லாது (Invalid Will).
Q14. உயிலை நீதிமன்றத்தில் நிரூபிப்பது ஏன் கடினம்?
A14. ஒவ்வொரு வழக்கிலும் மாறுபட்ட சூழ்நிலைகள்; பல சான்றுகள், சாட்சிகள் தேவைப்படுகின்றன.
Q15. இந்திய வாரிசுரிமை சட்டத்தில் இல்லஸ்ட்ரேஷன்கள் எதற்காக?
A15. ஒவ்வொரு பிரிவும் நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகள் (illustrations) மூலம் விளக்குகிறது.
Q16. பிரிவு 59 எடுத்துக்காட்டில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
A16. ஒருவருக்கு ஆவணத்தின் தன்மை, விளைவுகள் புரியாதால் – அவர் எழுதியது செல்லுபடியாகும் உயில் அல்ல.
Q17. “Instrument” என்றால் என்ன?
A17. ஒரு நபர் தன் சொத்து உரிமையை மற்றவருக்கு எழுதிக் கொடுக்கும் சட்ட ஆவணம். (Stamp Act, Sec 2(14))
Q18. “Document” என்றால் என்ன?
A18. எழுத்து, படம், குறி அல்லது வடிவம் மூலம் ஒரு விஷயத்தை பதிவு செய்யும் எந்தப் பொருளும்.
Q19. “Testament” என்றால் என்ன?
A19. ஒருவரின் மரணத்திற்கு பிறகு சொத்துகளைப் பகிரும் ஆவணம் – அதாவது உயில் ஆவணம்.
Q20. ஆவணங்களின் மூன்று முக்கிய வகைகள்?
A20.
1️⃣ Document
2️⃣ Instrument
3️⃣ Testament
Q21. டெஸ்டேட்டர் உடல்நிலை பலவீனமாக இருந்தால் உயில் செல்லுமா?
A21. ஆம், மனநலம் தெளிவாக இருந்தால் உயில் செல்லுபடியாகும்.
(Section 59 – Illustration 3)
Q22. Fraud, Coercion, Undue Influence என்றால்?
A22.
- Fraud = மோசடி
- Coercion = கட்டாயப்படுத்தல்
- Undue influence = நெருக்கடி/மன அழுத்தம்
Q23. Fraud மூலம் எழுதிய உயில் நிலை?
A23. அப்படி எழுதிய உயில் செல்லாது (void).
Q24. சிறையில் இருக்கும் நபர் உயில் எழுதலாமா?
A24. ஆம். அவர் மனநலம் தெளிவாக இருந்தால், சட்டப்படி உயில் செல்லுபடியாகும்.
Q25. நெருக்கடி (importunity) காரணமாக எழுதிய உயில் நிலை?
A25. ஒருவர் தொந்தரவு செய்து எழுதி வாங்கினால், அந்த உயில் சந்தேகத்திற்குரியது / செல்லாது.
Q26. ஒரு சாட்சி சுயநினைவு இல்லாமல் இருந்தால், அதை எப்படி நிரூபிக்க வேண்டும்?
A26. மருத்துவ சாட்சியத்தின் மூலம் நிரூபிக்க வேண்டும்.
Q27. உயில் எழுதப்பட்ட தேதியில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறும் தரப்பு யார்?
A27. அதை “defence” தரப்பே எடுத்துக்கொள்ள வேண்டும்.
Q28. மருத்துவ சான்று இல்லாமல் பக்கத்து வீட்டு அல்லது சொந்தக்காரர்களை விசாரிப்பது பயனுள்ளதா?
A28. இல்லை, அது போதுமான ஆதாரம் அல்ல.
Q29. சாட்சி சுயநினைவு இல்லாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
A29. மருத்துவ சாட்சியத்தின் மூலம் நிரூபிக்க வேண்டும், மேலும் பிரிவு 69ன் கீழ் கையெழுத்து தெரிந்த நபரை விசாரிக்க வேண்டும்.
Q30. ஸ்கிரைப் (Scribe) விசாரணை மட்டும் போதுமா?
A30. இல்லை, ஸ்கிரைப் மட்டும் போதாது (Easwaran v. Marimuthu – Madras HC, 3/2/2022).
Q31. உயில் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டாலும், சாட்சியை கண்டிப்பாக விசாரிக்க வேண்டுமா?
A31. சில வழக்குகளில் வேண்டியதில்லை, சில வழக்குகளில் கட்டாயம் வேண்டும் — வழக்கின் சூழ்நிலைப் பொருத்தம்.
Q32. சின்ன கவுண்டர் v. செல்லம்மாள் வழக்கில் என்ன தீர்ப்பு?
A32. உயில் ஆவணத்தில் சாட்சிகளை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை (Madras HC, 9/11/2010).
Q33. பி. ராதா v. இருதயதாஸ் (2022) வழக்கில் என்ன கூறப்பட்டது?
A33. எதிர் தரப்பு உயிலை ஒப்புக்கொண்டால் சாட்சியை விசாரிக்க தேவையில்லை.
Q34. ரமேஷ் வர்மா v. லாஜே சக்சேனா (2017 SC) என்ன சொல்கிறது?
A34. இரு தரப்பும் ஒப்புக்கொண்டாலும், குறைந்தது ஒரு சாட்சியை விசாரிக்க வேண்டியது கட்டாயம்.
Q35. உயில் பூர்வீக (ancestral) சொத்தைப் பற்றியதாக இருக்க முடியுமா?
A35. ஆம், ஆனால் அந்த நபருக்குச் சேர்ந்த பங்கை மட்டும் உயிலாக எழுதலாம்; முழு சொத்தை அல்ல.
Q36. பூர்வீகச் சொத்துக்கு உயில் எழுத முடியாதவர்கள் யார்?
A36. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் — ஏனெனில் “ancestral property” என்ற கருத்து ஹிந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Q37. தந்தை பூர்வீகச் சொத்துக்கு உயில் எழுத முடியுமா?
A37. தன்னுடைய பங்குக்கு மட்டுமே எழுதலாம் (Palanisamy v. Muthu – Madurai Bench, 19/6/2024).
Q38. உயிலும் செட்டில்மென்டும் இரண்டுமே நிரூபிக்கப்படவில்லை என்றால்?
A38. இரண்டுமே செல்லாது, சொத்து சட்டப்படி வாரிசுகளுக்குச் செல்லும்.
Q39. குடும்ப உறுப்பினர் அல்லாத மூன்றாம் தரப்பினர் உயிலை எதிர்க்க முடியுமா?
A39. முடியாது (Narasimha Bhattar v. Venkatesan – Madurai HC, 18/6/2024).
Q40. போலியான உயிலை நம்பி சொத்து வாங்கியவரின் நிலை?
A40. அவர் bona fide purchaser அல்ல; உரிமை கிடையாது (Vikram Singh v. Tunichand – SC, 10/7/2024).
Q41. சாட்சிகள் இல்லாதபோது என்ன பிரிவு பொருந்தும்?
A41. Evidence Act Section 69 – கையெழுத்து தெரிந்த நபரை விசாரிக்க வேண்டும்.
Q42. சாட்சி hostile ஆகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
A42. Section 45 Evidence Act – handwriting expert மூலம் நிரூபிக்க வேண்டும்.
Q43. ஸ்கிரைப் சாட்சியாக இருக்க முடியுமா?
A43. எழுதுவதோடு சாட்சியாக கையெழுத்து போட்டிருந்தால் மட்டுமே ஆம் (Matthew Oommen v. Suseela – SC 2006).
Q43. சட்டப்படி செல்லும் உயில் எந்த பிரிவுகளின் கீழ் வரும்?
A43. Indian Succession Act Section 63 (a)(b)(c).
Q44. டெஸ்டேட்டார் கையெழுத்து எப்போது செல்லும்?
A44. இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்து அல்லது குறியீடு செய்திருந்தால் மட்டுமே.
Q45. சாட்சி டெஸ்டேட்டாரின் கையெழுத்தை பார்த்திருக்க வேண்டுமா?
A45. ஆம், அல்லது டெஸ்டேட்டார் “இது என் கையெழுத்து” என வாய்மொழி உறுதிசெய்திருக்க வேண்டும்.
Q46. டெஸ்டேட்டார் நல்ல மனநிலையில் இருந்ததை நிரூபிக்க வேண்டியது யாருக்கு?
A46. எப்போதும் ப்ரோபௌண்டர் (beneficiary) தான்.
Q47. உயில் பதிவு செய்யப்பட்டதால் அது உண்மையானதா?
A47. இல்லை; பதிவு செய்தது உண்மைத்தன்மையை நிரூபிக்காது.
Q48. சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் அனைத்தும் “suspicious circumstances” ஆக கருதலாமா?
A48. இல்லை; சில முக்கிய சூழ்நிலைகள் மட்டுமே (Penta Kota Satyanarayana v. Seetharatnam – 2005 SC).
Q49. உயிலில் beneficiary பங்கெடுத்தது மட்டும் சந்தேகமா?
A49. இல்லை; அது தனித்து சந்தேகத்திற்குரிய சூழ்நிலை அல்ல.
Q50. burden of proof (சுமை) யாரிடம் உள்ளது?
A50. எப்போதும் உயிலை சார்ந்த பயனாளி (propounder) மேலே.
Q51. சாட்சிகள் இல்லாமல் ஸ்கிரைப் சாட்சி ஆகலாமா?
A51. இரட்டை பங்கு (dual role) வகித்தால் மட்டும் – 2010 SC 274 (S.R. Srinivasa v. Padmavathamma).
Q52. உயில் எழுதும்போது குறைந்தபட்சம் எத்தனை சாட்சிகள்?
A52. 2 அட்டெஸ்டிங் சாட்சிகள் கட்டாயம்.
Q53. சாட்சி அறிந்திருக்க வேண்டியது என்ன?
A53. உயிலின் உள்ளடக்கம் தேவையில்லை; டெஸ்டேட்டார் கையெழுத்து செய்தார் என்பதை மட்டும் தெரிந்திருக்க வேண்டும்.
Q54. டெஸ்டேட்டார் நல்ல மனநிலையிலா இருந்தார் என்பதை எப்படி நிரூபிப்பது?
A54. மருத்துவ ஆதாரம் அல்லது நம்பகமான சாட்சியங்களின் மூலம் (sound disposing mind).