GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் மேய்க்கால் புறம்போக்கு” என்றால் என்ன?

மேய்க்கால் புறம்போக்கு” என்றால் என்ன?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

1. “மேய்க்கால் புறம்போக்கு” என்றால் என்ன?

தமிழில் “மேய்க்கால்” என்றால் மாடுகள் மேய்ச்சலுக்கான இடம். “புறம்போக்கு” என்றால் பொதுப் பயன்பாட்டுக்கான நிலம், அதாவது தனிநபருக்குச் சொந்தமல்ல, அரசு உரிமையிலுள்ள நிலம். எனவே “மேய்க்கால் புறம்போக்கு” என்பது அரசு உரிமையிலுள்ள, பொதுப் பயன்பாட்டுக்கான மாடுகள் மேய்ச்சலுக்கான நிலமாகும்.

இந்த நிலம் கிராம மக்களின் மந்தை மற்றும் கால்நடைகள் மேய்ச்சலுக்கு பயன்படும் வகையில் வகைப்படுத்தப்பட்டு பொதுவாக உள்ளிடப்பட்ட நிலமாகும். இந்த நிலத்தில் வேலியிட்டு பயன்படுத்த முடியாது. அரசும் இந்த நிலத்தை தனிநபருக்கு விற்க முடியாது.

2. இந்த நில வகை எப்போ முதல் வரையறுக்கப்பட்டது?

மேய்க்கால் புறம்போக்கு என்பது புதிதாக உருவானது அல்ல இது பிரிட்டிஷ் கால கட்டத்தில் (1800களின் பிற்பகுதியில்) இருந்து நடைமுறையில் உள்ள வகைப்படுத்தல். ரெவினியூ துறையின் Board Standing Orders (BSO) எனப்படும் நில வகைப்படுத்தல் ஆவணங்களில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பொதுப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை, தனித்தனி வகைகளாக வகைப்படுத்தி பட்டியலிட்டு வைத்தனர். அதில்தான் மேய்க்கால், ஊர்வழி, பள்ளத்தாக்கு, குளம், ஓடை, மயானம் போன்ற வகைகள் வரிசையாக இடம் பெற்றன.

3. தனிநபர் சொத்து “மேய்க்கால் புறம்போக்கு” ஆக govt. records-ல் மாறிடுச்சு அப்படின்னா என்ன பண்றது ?

இதுவே பலருக்குள்ள மிக முக்கியமான குழப்பம். சில சமயங்களில், ஒருவருக்குச் சொந்தமான நிலம், அரசுத் தரவுகளில் மேய்க்கால் புறம்போக்குனு பதிவு செய்யப்பட்டிருக்கும். இது பிழையாக அல்லது தரவு மாற்றங்களின் போது ஏற்பட்டுள்ள தவறாக இருக்கலாம்.

*ஆனால் சட்டப்படி:*

தனிநபர் உரிமை உள்ள நிலத்தை அரசு தன்னிச்சையாக புறம்போக்கு நிலம்னு மாற்ற முடியாது.

தனி சொத்து என்றால், உரிமை ஆவணங்கள் (பத்திரம்), பட்டா, EC, வரி ரசீதுகள் போன்றவை இருந்தால் அது உரிமை நிலம்.

அரசு மாற்ற வேண்டுமென்றால், Land Acquisition Act படி முறையான அறிவிப்பு, பாக்கிப் பணம் மற்றும் உரிமைத் தரவுகளுக்கு வாய்ப்பு வழங்கி மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.

4. ஏற்கனவே உங்கள் சொத்து புறம்போக்கா மாறிட்டா – என்ன செய்யலாம்?

i. ஆவணங்களை சேகரிக்கவும்:

சொத்தின் உரிமையை காட்டும் ஆவணம், Registration deed (Sale deed),

வில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate),

நிலத்திற்கு தோழமா கடைசியாக கட்டிய தீர்வை வரி சம்பந்தமான ஆவணம் ( Latest property tax receipt )

*பட்டா (Patta copy)*

மின் ரசீது ,அல்லது தண்ணீர் வரி ( EB bill/water bill )

இந்த ஆவணங்கள் மூலம் நீங்கள் அந்த நிலத்தின் உரிமையாளராக இருக்கிறீர்கள் என்பதைக் காட்ட முடியும்.

ii. முதன்மையான முறையீடு – Revenue Officials (VAO/RI/Thasildar):

உங்கள் சொத்தை புறம்போக்கா தவறாக பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை எழுத்து மூலமாக புகார் தெரிவிக்கலாம்.

அதனுடன் சார்ந்த ஆவணங்கள் உடன் திருத்த மனு ( correction petition ) கொடுக்க வேண்டும்.

iii. மேல் அலுவலரிடம் முறையீடு:

மாவட்ட வருவாய் அலுவலர் ( DRO )அல்லது மண்டல உதவி ஆணையர் ( Sub collector ) கிட்ட மேல்முறையீடு செய்யலாம்.

கடந்த 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ் பட்டா உள்ளிட்ட ஆதாரங்கள் தேவைப்படும்.

iv. RTI மூலம் தகவல் கேட்கலாம்:

உங்கள் சொத்து எப்படி, எப்போ புறம்போக்கா மாற்றப்பட்டது என்பதை RTI வழியாக கேட்டு, அரசின் நடவடிக்கைகள் மற்றும் உரிமையை பெறலாம்.

v. சட்ட வழி தீர்வு (Legal Remedy):

எல்லா வழிகளும் முயற்சி செய்தும் தீர்வு கிடைக்கவில்லையெனில், உரிமையியல் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் ரிட் மனு (Writ Petition) வழியாக நீதிமன்றத்தின் உத்தரவை பெறலாம்.

5. ஏன் இது முக்கியம்?
மேய்க்கால் புறம்போக்கு என்கிற தவறான பதிவு:

சொத்து விற்பனை செய்ய முடியாமலாகச் செய்கிறது.

கடன் பெற முடியாது.

எதிர்காலத்தில் உரிமை மீட்பு கடினமாக்கும்.

அதனால்தான், உங்க சொத்துக்கான ஆவணங்கள் ஒழுங்கா இருக்குறதா, அரசுத் தரவுகளில் பிழை இருக்காதா என அடிக்கடி கவனிக்கணும். புறம்போக்கா பதிவாயிட்டா, உடனே சட்டப்படி வழி எடுக்கணும்.

*கடைசி வார்த்தை:*

சட்டமும் உங்க பக்கம் தான்!
உங்க கைவசம் உரிமை ஆவணங்கள் இருக்குற நிலம், எந்த ஆவணத்தில புறம்போக்கா போட்டாலும், அது உங்க சொத்து தான். அதை சரிசெய்ய முடியாதுனு பயப்பட வேண்டாம். சட்டத்தையும், உரிமையையும் நம்புங்க. சட்டப்படி முயற்சி செய்யுங்க.

“உங்க நிலத்தைப் பாதுகாக்க, உங்க உரிமையை நம்புங்க – புறம்போக்கா போனாலும்கூட, வழி இருக்கு!”

உங்க சொத்து புறம்போக்கா போச்சுனு நம்பாதீங்க!

“மேய்க்கால் புறம்போக்கு”னு அரசு சொல்றதால, உங்க சொத்து அரசுடைமையா போயிடும் அப்டின்னு இல்ல!
உங்க கையில் பத்திரம், பட்டா, வரி ரசீது, EC இருக்குறதுனா… சட்டம் உங்க பக்கம் தான்.

பட்டா இருக்கே, பத்திரம் இருக்கே… ஆனா govt record-ல புறம்போக்குனு போட்டுட்டாங்க! என்ன பண்றதுன்னு வருத்தப்படாதீங்க
சொத்து நம்மதுனு நம்புற மாதிரி, சட்டத்தையும் நம்புங்க!

மேய்க்கால் புறம்போக்கு”னு போட்டா சொத்து போயிடும்னு யாரும் பயப்பட வேண்டாம்.
உண்மை ஆவணங்கள் இருக்குனா, உரிமை உங்க பக்கம் தான்!

சொத்து சும்மா மண்ணல்ல… நம்ம குடும்பம், நம்ம நிம்மதி…!

💐 என்றும் அன்புடன் ஜாஹிர் உசேன் – சமூக ஆர்வலர்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Arrest is not mandatory within 2 months, even FIR filed in Dowry Act 398 cases | வரதட்சணை கொடுமை வழக்குகளில் புகாரை அடுத்து FIR போடப்பட்டாலும், 2 மாதங்களுக்குள்ளாக கைது தேவை இல்லை.Arrest is not mandatory within 2 months, even FIR filed in Dowry Act 398 cases | வரதட்சணை கொடுமை வழக்குகளில் புகாரை அடுத்து FIR போடப்பட்டாலும், 2 மாதங்களுக்குள்ளாக கைது தேவை இல்லை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 குறிப்புகள்: சாமானியனும் சட்டம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்திகாக இந்த சேவை வழங்கபடுகிறது. பெரும்பாலும் பெண்கள், கணவரையும், கணவர் குடும்பத்தார்களையும் பயமுறுத்தவேண்டும்

நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்க எந்த மாடலும் தேவையில்லை. உச்ச நீதிமன்றம்.நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்க எந்த மாடலும் தேவையில்லை. உச்ச நீதிமன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 நீதிமன்றத்தில் ஏதாவதொரு புகார் மனு அளிப்பதற்கு , எந்த மாடலும் தேவை இல்லை. நீதிபதிக்கு இவ்வாறு குற்றம் நிகழ்ந்தது என்று தெரிவித்து,

தனியார் வங்கிகள் கடனை வசூல் வீட்டிற்கு வந்தோ குண்டர்களை வைத்தோ மிரட்டினால் எவ்வாறு புகார் அளிக்கலாம்.தனியார் வங்கிகள் கடனை வசூல் வீட்டிற்கு வந்தோ குண்டர்களை வைத்தோ மிரட்டினால் எவ்வாறு புகார் அளிக்கலாம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 196 தனியார் வங்கிகள் பணம் வந்து வீட்டில் மிரட்டி வாங்குவது குண்டர்களை வைத்து மிரட்டுவது எவ்வாறு புகார் அளிப்பது மாதிரி மனு தனியார்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)