தனித்திருக்கும் உரிமை ஓர் அடிப்படை உரிமையாகும் என்றும் ஒரு நபரை இரவு நேரத்தில் வீட்டின் கதவை தட்டி எழுப்பி போலீஸ் தொந்தரவு செய்வது ஒரு மனிதனின் தனித்திருக்கும் உரிமையை பறிப்பதாகும்
என உச்ச நீதிமன்றம் வழக்கு எண். AIR. 1975 SC 1399 கோவிந்த் எதிர் ம. பி. அரசு என்ற வழக்கில் அதிசய தீர்ப்பு.
வாழ்வுரிமை என்பது தொழில் செய்யும் உரிமையை உள்ளடக்கியது என உச்ச நீதிமன்றம் வழக்கு எண். ஓல்கா பெரிஸ் எதிர் பாம்பே மாநகராட்சி AIR 1986 SC 180 வழக்கில் தீர்ப்புரை வழங்கி உள்ளது.
தனி நபர் சுதந்திரம் என்பதன் பொருள் மிகவும் விரிவானது என்றும் அது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இன் 19 வது பிரிவை உள்ளடக்கியது என்றும் உச்ச நீதிமன்றம் வழக்கு எண். AIR 1963 SC 1925 காரக் சிங் எதிர் உ. பி. அரசு என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கைதிகளை சிறையில் இருந்து நீதிமன்றம் கொண்டு செல்லும் போதும் திரும்ப சிறையில் அடைக்க அழைத்து வரும் போதும் நீதிமன்ற நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கை விலங்கு போடக்கூடாது என உச்சநீதிமன்றம் வழக்கு எண். AIR 1995 (3) SCC 743 சுதந்திரத்திற்கான குடிமக்கள் எதிர் அசாம் அரசு என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிறை கைதிகள் மிருகங்கள் அல்ல அவர்களை மனித மதிப்புடன் நடத்த வேண்டும் அவர்களின் அடிப்படை உரிமையை பறிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வழக்கு எண். AIR 1980 SC 1579 சுனில் பத்ரா எதிர் டெல்லி நிர்வாகம் என்ற மகத்தான தீர்ப்புரையை நீதி அரசர் மாண்புமிகு கிருஷ்ணய்யர் அவர்கள் தீர்ப்புரை வழங்கி உள்ளார்.
ஒரு குற்ற வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர் நீதிமன்ற விசாரணை மூலம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் அதன் காரணங்களால் அவர் விடுதலை செய்யப்பட்டால் அந்த வழக்கை தொடுத்த காவல் அதிகாரி மற்றும் அந்த வழக்கை நடத்திய அரசு வழக்கறிஞர் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஒரு அதிசயமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழக்கு எண். CRL. APPEAL No. 1485/2008.நாள்.07.01.2014 இது தொடர்பான உள்துறை செயலகத்தின் அரசாணை Home (Pol. 12)Department Letter M. S. No. 956 தேதி : 23.12.2015.
ஒரு காவல் அதிகாரி தவறு செய்தால் அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் சட்டப்படி பாதுகாப்பு தர வேண்டியவர்களே ஒரு தவறு செய்வதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நியூ டெல்லி வழக்கு எண். Crl. A. No. 002047- 002049 of 2010 தீர்ப்புரை நாள்.25.10.2010.