GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Fundamental rights அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள்

Fundamental rights அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

அடிப்படை உரிமைகள் யாது?

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள்

  1. சமத்துவ உரிமை (பிரிவு 14-18)
  2. சுதந்திர உரிமை (பிரிவு 19-22)
  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24)
  4. சமய உரிமை (25-28)
  5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (29-30)
  6. தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25) சமத்துவ உரிமை பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டத்தின் முன்பு சமத்துவத்தையோ சம பாதுகாப்பை அரசு மறுக்கக் கூடாது. பிரிவு 15 – எந்த குடிமகனையும் மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதனையாவது காரணம் காட்டி அவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது. பிரிவு 16 – பொது வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். பிரிவு – 17 தீண்டாமை ஒழிப்பு: தீண்டாதோர் என்று யாரையும் ஒதுக்கி வைத்தல் இச்சட்டத்தின் மூலம் அழிக்கப்படுகிறது. தீண்டாமை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தடுக்கிறது. தீண்டாமையின் மூலம் தகுதியிண்மை கடைப்பிடிக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படும். சுதந்திர உரிமை பிரிவு 19 அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகள்

அ. பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்

ஆ. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம்

இ. குழுக்கள் – சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்

ஈ. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்

உ. நாட்டின் எந்தப்பகுதியிலும் சென்று தங்கி வாழ உரிமை.

ஊ. எந்தத்தொழில், வேலை, வணிகம் மற்றும் வியாபாரம் செய்யும் சுதந்திரம் (மேற்கண்ட சுதந்திர உரிமை சில கட்டுப்பாடுகளைக் கொண்டது அவைகள் பற்றி பிரிவு 19 (2) முதல் (6) வரையிலான பிரிவுகள் விளக்குகின்றன)

பிரிவு 20

அ. ஒரு குற்றமென குற்றம் சாட்டப்பட்ட செயல் செய்யப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தினை மீறிய குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றத்திற்காகவும் ஒரு நபர் தண்டிக்கப்படக்கூடாது.

ஆ. எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒரு முறைக்குமேல் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படக்கூடாது.

இ. எந்த நபரையும் அவருக்கு எதிரான வழக்கில் ஓர் சாட்சியாய் அவரை இருக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.

பிரிவு 21.

எந்த நபரின் வாழ்க்கையையோ அல்லது தனி நபர் சுதந்திரத்தையோ சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர பிற வழிகளில் மீறப் படக் கூடாது.

பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு

அ. கைது மற்றும் தடுப்புக் காவலுக்கான காரணங்களை உடனே தெரிவிக்க வேண்டும். வழக்கறிஞரை கலந்தாலோசிக்க அவருக்கு உரிமை உண்டு.

ஆ. 3 மாதத்திற்குள் அறிவுரைக்கு குழுமத்தின் முன், தடுப்புக் காவலை உறுதிப்படுத்த வேண்டும்.

இ. தடுப்புக் காவலை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உரிமை.

பிரிவு 23 சுரண்டலுக்கு எதிரான உரிமை.

மனித உடல் உறுப்புக்களை வியாபாரம் செய்வதையும், பிச்சை எடுக்க வைப்பதும் கட்டாய வேலை வாங்குவதையும் தண்டிக்கக் தக்க குற்றமாக சட்டம் கூறுகிறது.

பிரிவு 24: 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த நிறுவனத்திலும் அல்லது வேறு தொழிலகம் எதிலும் வேலைக்கு வைக்கக் கூடாது.

25) சொத்துரிமை – கல்வியுரிமை – அடிப்படை உரிமைகள்?

சொத்துரிமை ஓர் அடிப்படை உரிமையாக பிரிவு 19 (1)ல் வைக்கப்பட்டு பின் 44வது சட்டத்தின் கீழ் நீக்கம் செய்யப்பட்டது. பிரிவு 300 இன் கீழ் சொத்துரிமை ஓர் சாதாரண உரிமை என்ற அளவில் தற்பொழுது சட்டத்தால் கூறப்படுகிறது.

கல்வியுரிமை ஓர் அடிப்படை உரிமையாக இருந்தது. பின்னர் அது ஆரம்பக் கல்விக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டது.
இப்படிக்கு

  • தேசிய சட்ட நீதி இயக்கம்
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

சுய உதவிக்குழுவும், அதன் கடன்களும், பற்றிய விபரம்.சுய உதவிக்குழுவும், அதன் கடன்களும், பற்றிய விபரம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 15 கேள்வி:ஒரு மகளிர் குழுவில் செயல்பட்ட குழு உறுப்பினர் ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை கட்டாவிட்டால் குழவின் தலைவியின் சேமிப்பு பணத்தையோ அல்லது

பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு அறிவிப்பு.பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு அறிவிப்பு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு தமிழ்நாடு தகவல் ஆணையமானது தகவல் தர மறுக்கும் பொது

Contempt of Court Act 1971

Contempt of Court Act 1971| நீதி மன்ற அவமதிப்பு சட்டம் 1971.Contempt of Court Act 1971| நீதி மன்ற அவமதிப்பு சட்டம் 1971.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 18 Points / குறிப்புகள்: Contempt Act 1971 as follow கிழமை நீதி மன்றங்கள், உயர் நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதி

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)