மஞ்சள்நோட்டீஸ் எப்படி_வந்தது
கடனாளி மாகாண நொடிந்து போதல் சட்டம்_1929
கடனாளி திவாலாகிவிட்டால் கடன் கொடுத்தவர்களுக்கு அனுப்புவது மஞ்சள் நோட்டீஸ். பிரிட்டிஷ் ஆட்சியில் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க முடியாதவர்கள் ‘நான் திவால் பார்ட்டி’ என்று நோட்டீஸ் மூலம் அறிவிக்கும் முறை அமலுக்கு வந்தது. இப்படி நோட்டீஸ் அனுப்புபவரை நீதிமன்றம் இறந்துவிட்டவராகவே கருதும். இப்படி நோட்டீஸ் கொடுத்தவர் ‘புதிய வாழ்க்கையை மங்களகரமாகத் துவக்கட்டும்’ என்று அப்போது மஞ்சள் கலரைத் தேர்ந்தெடுத்தார்களாம். காலப்போக்கில் அது வெள்ளைஆகி விட்டது!.
கடனாளி மாகாண நொடிந்து போதல் சட்டம் 1929 முன்னுரை
ஒருவர் நிறைய பேரிடம் தன்னுடைய தொழிலிற்காக கடன் வாங்கி இருப்பார்.ஆனால் தொழில் நினைத்தது போல இல்லாமல் தோல்வியடைந்து போய்விடும். அந்த சமயத்தில் அந்த நபர் கடன் கொடுத்தவர்களுக்கு கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
தொடர்ந்து கடன் கொடுத்தவர்களும் நெருக்கடி கொடுத்தவண்ணம் இருப்பார்கள். அந்த சமயத்தில் கடனாளி, (கடன் வாங்கியவர்) நீதிமன்றத்தில், நான் வாங்கிய கடன் அதிகமாக உள்ளது, என்னுடைய தொழிலும் நொடிந்து விட்டது, அதனால் என்னை வறியவர் என்று அறிவிக்க வேண்டும் என்றும்,
கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்பதை நிறுத்த வேண்டும் என்றும்,
*சட்ட பூர்வமாக ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் மனுச் தாக்கல் செய்யலாம். நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டால் அவர் திவால் ஆனவர் (வறியவர்) (insolvent) என்று அறிவிக்கப்படுவார்.
வழக்கு எப்படி எங்கு தாக்கல் செய்ய வேண்டும்
கடனாளி மாகாண நொடிந்து போதல் சட்டம் 1929 பிரிவு 10 மற்றும் பிரிவு 13ன் கீழ் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மனுவில், கடன் கொடுத்தவர்களை (முழு முகவரியுடன்) அனைவரையும் சேர்க்க வேண்டும்.
யார் மனு தாக்கல் செய்ய நினைக்கிறாரோ, அவருடைய எல்கைக்கு உட்பட்ட சார்பு நீதிமன்றத்தில்தான் இந்த வழக்கு தொடுக்க முடியும்.
வழக்கு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்.
முதலில் வழக்கு தாக்கல் செய்பவரில் எவ்வித சொத்தும் இருக்க கூடாது.
1.வழக்கு தாக்கல் செய்யும் நபரின் பெயரில் அசையா மற்றும் அசையும் சொத்தும் இல்லை என்று VAO சான்றிழ் .
2.ஆதார் கார்டு
3.ரேசன் கார்டு
வழக்கில் வெற்றி பெற்றால்
வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் திறமையாக வாதாடினால், நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்டவரை வறியவர் என்று அறிவித்து விடுவார்கள், அதன் பின்னர் கடனை கடன் கொடுத்தவர்களுக்கு கொடுக்க தேவையில்லை. கடனை கொடுத்தவர்கள் கடனாளியிடம் கடனை கேட்கவும் கூடாது என்று தீர்ப்பு வழங்குவார்கள்.
பெரும்பாலும் வறியவர் கோரிக்கைகளை நீதியரசர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருப்பார்கள்.
ஏனெனில் வறியவர் என்பது கேவலம் என்று விதிவிலக்கின்றி எல்லா நீதியரசர்களும் கருதுவார்கள்.
மேலும் வறியவர் என நீதிமன்றம் கூறிவிட்டால் வறியவர் ஆனவர் தேர்தலில் நிற்க முடியாது.
தோல்வி அடைந்தால்
ஒருவேலை நீதியரசர்கள் கடனை செலுத்த கடனாளிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தகுந்த ஆதரங்கள் மற்றும் சாட்சியங்களின் மூலம் கருதினால் 4 ல் 1 பகுதியைவோ அல்லது முழுமையாக கடனை செலுத்த தீர்ப்பு வழக்கலாம்.