சீட்டு நிதிச் சட்டம் (#Chit_Funds_Act, 1982) பிரிவுகள் 4 மற்றும் 76 ன்படி ஒரு சீட்டை பதிவு செய்யாமல் நடத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
சட்டத்திற்கு புறம்பான செயலின் அடிப்படையில் நடைபெற்ற ஒன்றிற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இயலாது.
எந்தவொரு நீதிமன்றமும் சட்டத்திற்கு புறம்பான செய்கையின் அடிப்படையில் எழும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியான உதவியை அளிக்கக்கூடாது.
இருவரும் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டிருப்பார்களேயானால் சட்டம் அதை அப்படியே விட்டுவிட வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ளவைகள் முதுமொழிகள் ஆகும். அந்த அடிப்படையில் தவறான காரியங்களுக்கு சட்டத்தின் உதவி கிடைக்காது.
பதிவு செய்யப்படாத சீட்டை நடத்தி வருவது சட்டப்படி தவறான ஒன்றாகும். அப்படி ஒருவர் ஒரு சீட்டை நடத்தி வந்து, சீட்டை எடுத்தவர் மீது பணத்தை வசூலிக்க #உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறான செயல்களுக்கு நீதிமன்றம் துணை போக முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Revathi and Others Vs S. Murugesan
2012-5-LW-CIVIL-229