போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா? பொய் வழக்கில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள கீழ் கண்டவாறு செயல்பட்டால் நீங்கள் உங்களை தற்க்காத்து கொள்ளமுடியும் என்று party in persion ஆக வாதாடி பல சாதனை புரிந்த திரு. இராஜேந்திரன், இராஜபாளையம் சமூசிகாபுரம் கிராமத்தை சேர்ந்த சுய வழக்காளி கூறுவதை கேளுங்கள்…………
1949 இந்திய அரசியல் சாசன கோட்பாடு 5ன்படி நமது இந்தியாவில் வாழும் இந்திய குடிமக்கள் அனைவரும் தெரிந்து கொண்டும் /புரிந்து கொண்டும் /அறிந்து கொண்டும் அதிலும் மிக முக்கிய கவனத்துடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுயவழக்காடிகள் நண்பர்கள் அனைவருக்கும் இராஜேந்திரனாகிய நான் சொல்வது என்னவென்றால் தங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து இருந்தால் அல்லது முயற்சி நடந்தால் 1949 இந்திய அரசியல் சாசன கோட்பாடு 20(3)ன்படி தற்காப்பு உரிமையை பயன்படுத்த வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரையும் தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தக் கூடாது. இந்த கோட்பாட்டின்படி உண்மைக்கும் மனசாட்சிக்கும், நீதிக்கும், புறம்பாக காவல் நிலையம் / நீதிமன்றம் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் (Fir – நீதிமன்றத்தின் வாரண்டு உள்பட) எந்தவொரு ஆவணங்களிலும் கையெழுத்து போடாமல் இருப்பதுதான் தற்காப்புரிமை, இதையும் மீறி கையெழுத்து போடுமாறு வற்புறுத்தினால் 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 330,ன்படி வற்புறுத்திய அதிகாரிகள் குற்றவாளி ஆகிவிடுவார்கள் என்பதை காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் எச்சரிக்கை செய்யுங்கள். உங்களின் எச்சரிக்கையையும் மீறி பொய் வழக்கு பதிவு செய்தால், இவ்வழக்கு 1949 இந்திய அரசியல் சாசன கோட்பாடு 13(2) ன் படி செல்லாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இதுவே சுய வழக்காளிகள் பயன் படுத்தும் பிரம்மாஸ்த்திரம் ஆகும்.
மேற்கானும் பிரம்மாஸ்திரத்தை மக்கள் பிரச்சினைக்காக அறவழியில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகும் அரசியல்வாதிகள் / சமூக ஆர்வலர்கள் /தன்னார்வலர்கள் பயன் படுத்தினால் அரசுக்கும் /நீதித்துறைக்கும் பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய அவசியமும் நிர்பந்தமும் ஏற்படும். மேலும் பொது மக்களின் இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் போராட்டங்கள் வெறும் சடங்கு போல கடைபிடிக்க படுவது மாறுதல் பெறும்.
இதுபோல சமூக மாற்றங்களை சட்டப்படியாக நிறைவேற்றம் செய்ய எங்கள் பாதிக்கப் பட்டோர் கழகம் முழுமூச்சுடன் செயல்படும்.
சட்டம் கற்போம்! கற்று கொடுபபோம்!
சட்டப்படி வாழ்வோம்! சட்டப்படி அனைவரையும் வாழசெய்வோம்!
இரா.கணேசன்
பாதிக்கப் பட்டோர் கழகம்
அருப்புக்கோட்டை
9443920595