GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் உங்கள் மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றம் பற்றி அறிவோம்.

உங்கள் மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றம் பற்றி அறிவோம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

உங்கள் மாவட்ட, மனித உரிமைகள் நீதிமன்றம் பற்றி அறிவோம்.

மனித உரிமை பாதுகாப்பு சட்ட பிரிவு 30-ன்படி, மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், மனித உரிமை நீதிமன்றங்களாகவும் செயல்படுகிறது.

புகார்

மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர், மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் புகார் கொடுக்கலாம்.

வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், தனி மனித கௌரவம் குறித்த உரிமைகளே, மனித உரிமை எனப்படும் என்று, மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 2(d) தெரிவிக்கிறது. இவற்றை தவிர, மற்றவை தொடர்பான புகார்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் புகார் கொடுக்க கூடாது.

தேசிய,,மாநில, ஆணையங்கள் விசாரணை செய்து வழங்கும் தீர்ப்பானது, பரிந்துரை மட்டுமே. இவ்வாறான பரிந்துரைகள் பல கிடப்பில் உள்ளன. பல சமயங்களில், மாநில ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக விடப்படுகிறது. ஆனால், மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கு, தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு.

புகார் தாக்கல் முறை – :

மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில், நேரடியாக புகார் தாக்கல் செய்ய இயலாது. மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர், தமது புகாரை தாமாகவோ, அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ, தனி புகாராக private Complaint தயாரிக்க வேண்டும்.

இந்த புகாரானது, மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தையும், குற்றவியல் விசாரணை முறை சட்ட பிரிவு 200 ஆகியவற்றை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும்.

குற்றம் நிகழ்ந்த இடம் உள்ள பகுதிக்கு ஆள்வரையுள்ள, jurisdiction) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், (Judicial Magistrate Court) தாக்கல் செய்ய வேண்டும்.

புகாரை பெற்ற குற்றவியல் நடுவர் நீதிமன்றம், குற்றவியல் விசாரணை முறை சட்ட பிரிவு 202-ன்படி விசாரணை செய்து, புகாரில் அடிப்படை முகாந்திரம் (prima facie case) உள்ளது என முடிவு செய்தால், எதிரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி புகார் நகலை வழங்கி, கேள்வி கேட்டு, பின்பு விசாரணைக்கு மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்.

மனித உரிமைகள் நீதிமன்றம் அந்த வழக்கினை, அமர்வு நீதிமன்ற வழக்குகள் போல விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.

மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் பிரிவு 31-ன்படி, அரசு, குற்றஞ்சாட்டுனர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு வழக்கு நடத்துவார்கள்.

கடந்த 1996 முதல் 2010 வரை தமிழகத்தில், மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை, 167 மட்டுமே

பொது மக்கள் மத்தியிலும். வழக்கறிஞர்கள் மத்தியிலும். மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதும். போலி மனித உரிமைகள் அமைப்புக்களின் தவறான வழிகாட்டுதல்களும் காரணமாகும்.

சிறை தண்டனை வழங்க அதிகாரம் இல்லாத, மனித உரிமைகள் ஆணையத்தை அணுகும் பாதிக்கப்பட்ட நபர்கள், மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை பயன்படுத்தி, மனித உரிமைகள் மீறல்கள், குற்றம் இழைத்தவர்களை சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வையுங்கள்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

3 thoughts on “உங்கள் மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றம் பற்றி அறிவோம்.”

  1. இதுவரை யாருக்கும் தெரியாத முக்கியமான தகவலைத் தந்தீர்கள். மேலதிக விபரங்களை எப்படித் தெரிந்து கொள்வது.

    1. இந்த இணையதளத்தில் ஆயிரக்கணக்கான பதிவுகள் உள்ளன. கொஞ்சம் நேரம் கொடுத்து தேடிப்பாருங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும்

Leave a Reply to GENIUS LAW ACADEMY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மகள் வாங்கிய கல்விக்கடனுக்காக தந்தை அடகு வைத்த நகையை திருப்பி தர மறுத்த வங்கி மீது வழக்குமகள் வாங்கிய கல்விக்கடனுக்காக தந்தை அடகு வைத்த நகையை திருப்பி தர மறுத்த வங்கி மீது வழக்கு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 மகள் வாங்கிய கல்விக்கடனுக்காக தந்தை அடகு வைத்த நகையை திருப்பி தர மறுத்த வங்கி மீது வழக்கு கல்விக்கடன் மகள் வாங்கியதால்

1994 ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 படி ஊராட்சித்தலைவரை பதவி நீக்குதல்.1994 ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 படி ஊராட்சித்தலைவரை பதவி நீக்குதல்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 ஊராட்சித்தலைவரை பதவி நீக்குதல்(பிரிவு 205 – 1994 ஆண்டு ஊராட்சிகள் சட்டம் ) ஊராட்சியின் தலைவர் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் எதனையும்

30 நாட்களில் தகவல் அளிக்காத, தகவல் அலுவலர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது.30 நாட்களில் தகவல் அளிக்காத, தகவல் அலுவலர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 23 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 30 தினங்களில் தகவல் தர வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒவ்வொரு பொது தகவல் அலுவலருக்கும் உள்ளது.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)