GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் புதுச்சேரியில் ஏழைமக்களுக்கு அரசால் வழங்கப்படும் LGR (Land Grant Rules) Patta எனப்படும் இலவச வீட்டுமனைப்பட்டாவில் அரசு விடுத்துள்ள நிபந்தனைகள்.

புதுச்சேரியில் ஏழைமக்களுக்கு அரசால் வழங்கப்படும் LGR (Land Grant Rules) Patta எனப்படும் இலவச வீட்டுமனைப்பட்டாவில் அரசு விடுத்துள்ள நிபந்தனைகள்.

நிபந்தனைகள்

  • 1. உரிமையாக்கப்பட்ட மனை மீது ஒரே ஒரு வீடு மட்டுமே கட்டுப்படுத்தல் வேண்டும் .
  • 2. மனையை உரியாக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத கால அளவுக்குள் , ஒப்படை பெற்றவர் குடியிருப்பு நோக்கங்களுக்காக அனுபோகத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் .
  • 3. (1) ஒப்படை செய்யப்பட வீட்டுமனை மரபுரிமையையாகப் பெறத்தக்கதாகும் . ஆனால் உடமை மாற்றம் செய்யாததக்கதல்ல . ஆயினும் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் , அரசு அல்லது ஒரு கூட்டுறவு சங்கம் அல்லது அட்டவணை வங்கி அல்லது புதுச்சேரி வீட்டுவசதி வாரியத்துடன் மனையை (அதில் கட்டப்பட்ட எவையேனும் கட்டடங்களுடன்) அடமானம் வைப்பதற்கு இவ்விதிவிலக்கு பொருந்தாது .
  • 3. (2) நிபந்தனையை மீறி செய்யப்பட ஒரு மாற்றம் செயல்திறன் அற்றதாகிவிடும் . மேலும் அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட மனை, அது மாற்றப்பட்ட தேதியிலிருந்து, வில்லங்கங்கள் அனைத்திலுமிருந்து விடுபட்டு அரசிடம் நிலைபெறும் . மேற்படி வீட்டுமனை அல்லது அந்த மனையில் அல்லது அதில் கட்டப்பட்ட எவையேனும் கட்டடங்களுக்கு செய்யப்பட்ட சீரமைப்புகள் தொடர்பாக மாற்றம் பெற்றவர் அரசுக்கு எதிராக உரிமை கோரிக்கை எதுவும் கொடுத்துக்கொள்ளலாகாது.
  • 3. (3) அரசிடம் மேற்கட்டுமானத்துடன் அல்லது மேற்கட்டுமானம் இல்லாமால் அவ்வாறு நிலைபெற்றுள்ள வீட்டுமனை துணை கலெக்டரால் தகுதி வாய்ந்த நபர்களுக்கு தரப்படும் .
  • 3. (4) ஒப்படை பெற்றவர் இறந்துவிடும் நேர்வில் வாரிசு என்ற முறையில் அல்லது மற்றபடி இறந்தவரின் உரிமை மாற்றக்கூடிய நபர் , இறந்தவரின் மரணத்தேதியிலிந்து, மூன்று மாதங்களுக்குள் அத்தகைய மாற்றம் குறித்து துணை கலெக்டருக்கு அறிவுப்பு கொடுக்கவேண்டும் .
  • 4. ஒப்படை பெற்றவர் மனை குறித்து அவ்வப்போது நிச்சயிக்கப்படக்கூடிய ஆண்டுத்தீர்வை , மனைவரி முதலியவற்றைச் செலுத்துவதற்கு உட்பட்டவராவார் .
  • 5. மேற்படி நிலத்தில் வழியாக அல்லது அதன் எல்லையாக ஓடுகிற சாலைவழிகள், ஆறுகள் , ஓடைகள் மற்றும் வாய்கால்களில் அரசுக்கும் பொதுமக்களுக்கும் தற்போதுள்ள மற்றும் வாலாயமான உரிமைகள் ஒப்படையினால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன .
  • 6. அனைத்து தங்கம், பிற தாது பொருட்கள் அல்லது நிலக்கரி மற்றும் தங்கம் பிற தாதுப்பொருட்கள் அல்லது நிலக்கரியைக் கொண்டுள்ள அல்லது கோடனுள்ளதாய் கருதப்படும் கல் அல்லது பாறையின் உரிமையும் , அரசுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது . மேற்படி ஒப்படை பெற்றவர் அரசிடமிருந்து முறையே பெற்ற அனுமதி அல்லது உரிமத்தின் மேலன்றி மற்றபடி மேற்சொன்ன தங்கம் அல்லது பிற தாதுப்பொருட்கள் அல்லது நிக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபடக்கூடாது .
  • 7. நிலம் வழங்கல் குறித்து நிபந்தனைகளில் எவையேனும் ஒன்று மீறப்பட்டிருந்தால் மனை அரசை சேரும் . நிலம் வழங்கல் குறித்து நிபந்தனைகளில் எவையேனும் மீறப்பட்டுள்ளதா , இல்லையா , என்பது பற்றி கேள்வி எழுந்தால், அது கலெக்டருக்கு அனுப்பப்படவேண்டும் . அவருடை தீர்ப்பு முடிவானதாகும் .
  • 8. குறிப்பிட்ட இந்த ஒப்படை தவறாக அல்லது பிழையானது தகவல் பேரில் அல்லது மோசடியாக செய்யப்பட்டது எனக் கண்டறியப்பட்டால் , அல்லது கைப்பற்றப்பட்ட நடைமுறையில் ஒழுங்கீனம் அல்லது முறைகேடு இருக்கிறது என்று எண்பிக்கப்பட்டால் மேற்படி ஒப்படை மாற்றப்பட அல்லது ரத்துசெய்யப்படுவதற்கு உள்ளதாகும் .
  • 9. ஒப்படை மீது முறையீடு அல்லது மறு ஆய்வு மூலம் ரத்து செய்யப்படுவதன் மேல் அல்லது அரசு திரும்ப எடுத்துக்கொள்வதன்மேல், அப்போது இத்திட்டத்தின் மீதி இருக்கும் கட்டுமானங்கள் மரங்கள் முதலியன அல்லது சீரமைப்புகளுக்கு எவ்விதமான இழப்பீடும் பெற ஒப்படை பெற்றவர் உரிமையுள்ளவராகப்படமாட்டார்.
  • 10. ஒப்படி பெற்றவர் அரசுக்கு செலுத்தப்படத்தக்க தொகை 1970-ஆம் ஆண்டு புதுச்சேரி வருவாய் வசூல் சட்டத்தில் விதிமுறைகளின் கீழ், அது நிலவரி பாகியாய் இருந்தாற்போலவே அவரிடமிருந்து வசூலிக்கப்படத்தக்கதாகும் .

இதற்கு சான்றாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களின் ஆணைப்படியும் உத்தரவின் படியும் எவருக்காகவும் அவர் சார்பிலும் செயலாற்றும் துணை கலெக்டர் திரு —————- அவர்களும் ஒப்படை ஒப்படை பெற்றவராகிய திரு / திருமதி ————- அவர்களும், முதலில் மேலே ———— முதலில் சொன்ன ———— மாதம் ———- தேதியன்று இதில் தங்கள் கையெழுத்துக்களை முறையே இடுகின்றனர் .

இது துணை கலெக்டரான திரு ————- அவர்களின் கையொப்பத்தின் கீழும் முத்திரையின் கீழும் வேலிடப்பட்டது .

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

COVID-19 | Fine is not necessary for not wearing the mask. கட்டாய முக்காகவசம் தண்டம் செலுத்த வேண்டாம்.COVID-19 | Fine is not necessary for not wearing the mask. கட்டாய முக்காகவசம் தண்டம் செலுத்த வேண்டாம்.

Views: 10 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட முடியாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Grama Natham Land Judgment”கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட முடியாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Grama Natham Land Judgment”

Views: 10 சட்டம் ஒரு பார்வை 👉 “கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட முடியாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Grama Natham Land Judgment” 🏛️ கிராம நத்தம் நிலத்தை யாரும் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட முடியாது