GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் போலீஸ் சோதனையில் இனி ‘ஒரிஜினல்’ லைசென்ஸ், RC புக் தேவையில்லை.. ‘டிஜிலாக்கர்’ பயன்படுத்தலாம்.

போலீஸ் சோதனையில் இனி ‘ஒரிஜினல்’ லைசென்ஸ், RC புக் தேவையில்லை.. ‘டிஜிலாக்கர்’ பயன்படுத்தலாம்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (IT Act, 2000)-ன் படி, டிஜிலாக்கரில் உள்ள ஆவணங்கள், அசல் காகித ஆவணங்களுக்கு இணையான சட்டப்பூர்வ மதிப்பைக் கொண்டுள்ளன.

டிராபிக் போலீசாரிடம் லைசென்ஸ், ஆர்.சி புக்கை காட்ட வேண்டுமா? பேங்கில் கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டுமா? இனி ஒரிஜினல் ஆவணங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. உங்கள் செல்போனில் ‘டிஜிலாக்கர்’ இருந்தால், அனைத்தையும் ஒரே கிளிக்கில் காண்பிக்கலாம், டிஜிட்டல் முறையில் பகிரலாம், தேவைப்பட்டால் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

டிஜிலாக்கரில் கணக்குத் தொடங்குவது எப்படி? செல்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர் (Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (App Store) ‘DigiLocker’ என்று டைப் செய்து, National eGovernance division, Government of India வெளியிட்ட அதிகாரப்பூர்வ செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். செயலியைத் திறந்தவுடன் மொழிப் பட்டியல் தோன்றும். அதில் ஆங்கிலம், தமிழ் என உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து உள்ளே நுழையவும்.

செயலியைப் பயன்படுத்தத் தேவையான அடிப்படை அனுமதிகளை (Permissions) வழங்கிய பின், ‘கணக்குத் தொடங்க’ (Create Account) என்பதை கிளிக் செய்யவும். உங்கள் முழுப் பெயர், பிறந்த தேதி மற்றும் செல்போன் எண்ணைப் பதிவிட வேண்டும். உங்கள் மொபைலில் இரண்டு சிம் கார்டுகள் இருந்தால், ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்ணைப் பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் அளித்த செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை (OTP) உள்ளிட்டு கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.

டிஜிலாக்கர் வசதியை பயன்படுத்த, ஆதாருடன் இணைப்பது கட்டாயம். இதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. உங்கள் ஆதார் எண்ணைப் பதிவிட்டதும், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை உள்ளிட்டு உறுதி செய்யலாம். முக அடையாளத்தைத் தேர்வு செய்தால், கேமரா ஓபன் ஆகும். வட்டத்திற்குள் உங்கள் முகத்தைக் காண்பிப்பதன் மூலம் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

டிஜிலாக்கரின் சிறப்பம்சங்கள்: தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (IT Act, 2000)-ன் படி, டிஜிலாக்கரில் உள்ள ஆவணங்கள், அசல் காகித ஆவணங்களுக்கு இணையான சட்டப்பூர்வ மதிப்பைக் கொண்டுள்ளன. எனவே, போக்குவரத்து காவல்துறையினரோ, பிற அரசு அதிகாரிகளோ இதை ஏற்க மறுக்க முடியாது. ஆதார், பான், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை மட்டுமின்றி, வாகனப் பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டப்படிப்பு சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ் என அனைத்தையும் இதில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைக்கலாம்.

இது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதால், உங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் ஆவணங்கள் 100% பாதுகாப்பாக இருக்கும். ஒவ்வொரு பயனருக்கும் 1 GB வரையிலான கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாக வழங்கப்படுகிறது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Equal Justice for Everyone

Defamation suit means | மான நஷ்ட | அவதூறு வழக்குஎன்றால் என்ன?Defamation suit means | மான நஷ்ட | அவதூறு வழக்குஎன்றால் என்ன?

Views: 32 Useful Points குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

நீதிமன்றத்தில் அரசு ஊழியர் பொய்யான ஆவணத்தை தாக்கல் செய்யும்போது அவர் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி?நீதிமன்றத்தில் அரசு ஊழியர் பொய்யான ஆவணத்தை தாக்கல் செய்யும்போது அவர் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி?

Views: 20 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Landlord-Tenant Dispute | வாடகைத்தாருக்கும், இட உரிமையாளருக்கும் இடையேயான தகராறு.Landlord-Tenant Dispute | வாடகைத்தாருக்கும், இட உரிமையாளருக்கும் இடையேயான தகராறு.

Views: 11 Points / குறிப்புகள்: பொதுவாக ஒரு வாடகைதாரர், தவறாது வாடகை கொடுத்து வரவேண்டும். ஒரு உரிமையாளர், ஒரு வாடகைதாறரை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால், அவர் முதலில் வாடகை வாங்குவதில் இருந்து தன்னுடைய குளறுபடிகளை தொடங்குவார்.