GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் கடன் வாங்கியவர்களின் வீட்டிற்கு அனுமதிக்கப்படாத நேரத்த்தில் செல்வது, தொலைபேசியில் அழைத்து மிரட்டுவது கூடாது. ரிசர்வ் வங்கி.

கடன் வாங்கியவர்களின் வீட்டிற்கு அனுமதிக்கப்படாத நேரத்த்தில் செல்வது, தொலைபேசியில் அழைத்து மிரட்டுவது கூடாது. ரிசர்வ் வங்கி.

வங்கிகளில் கடன் வாங்கியவர்களிடம் அதனை திருப்பிப் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. வங்கிகளுக்கும், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

கடனை திருப்பி பெறும் முறை, கள ஆய்வு தொழில்நுட்ப ரீதியில் திரும்பப் பெறுவது குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதனங்களை முடக்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதிய விதிமுறைகள் பின் வருமாறு

* கடன் கொடுத்த நிறுவனங்கள் மற்றும் திருப்பி வசூலிக்கும் ஏஜென்ட்கள் அனைவரும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவரை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்திற்கு பிறகு அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அனுமதி வாங்க வேண்டும். அல்லது கடன் கொடுத்தவர்கள் வேண்டுகோள் வைத்திருக்க வேண்டும்.

* மருத்துவ அவசர நிலை, திருமணம், துக்க நிகழ்வு உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான நேரங்களில் கடன் வாங்கியவர்களை தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* கடனை திரும்பப் பெறும் நடவடிக்கைகளின் போது, அச்சுறுத்தல், அநாகரிகமாக அல்லது மிரட்டும் வகையில் பேசக்கூடாது.

* கடனாளிகளை திரும்பத் திரும்ப தொடர்பு கொள்ளவோ, பொது வெளியில் அல்லது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவதற்கோ மற்றும் சொத்துகள் அல்லது நற்பெயருக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கு அனுமதியில்லை.

* கடன் வாங்கியவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அவரது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்களும் சமூக ஊடகங்களில் பகிர ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

சார்பதிவகத்தில் தடைமனு எப்படி வழங்க வேண்டும்சார்பதிவகத்தில் தடைமனு எப்படி வழங்க வேண்டும்

Views: 34 சார்பதிவகத்தில் தடைமனு எப்படி வழங்க வேண்டும்* 1) உங்களுக்கு உரிமை இருக்கிற அல்லது உரிமை பட்டம் இருக்கிற அல்லது உரிமையில் ஒரு கூறு இருக்கிற அல்லது பங்கு இருக்கிற ஒரு சொத்தை வேறு யாரோ போலி ஆவணங்கள் அல்லது

பிழை வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு.பிழை வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு.

Views: 101 🙏பிழை வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு..! பிழை வழக்கு பற்றி தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் PSO-658 to 669 காவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்,குற்றவியல் நீதித்துறை நடுவர் அதன் மீது எடுக்க வேண்டிய

காவல் துறை அழைப்பாணையை(SUMMONS) எதிர்கொள்வது எப்படி?காவல் துறை அழைப்பாணையை(SUMMONS) எதிர்கொள்வது எப்படி?

Views: 18 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.