சொத்துரிமையை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் சார் பதிவாளருக்கு இல்லை எனவும் சார்பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை பதிவு செய்து கொடுப்பதும் அதன் உண்மை நகலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பாது காத்து வைப்பதும் அதன் நகல் தேவைப் படுபபவர்களுக்கு சட்டப்படி நகல் வழங்கவும் தான் அதிகாரம் உள்ளது என்று ஒரு வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது இந்நிலையில் நில ஆக்கிரமிப்பு மற்றும் நில அபகரிப்புக்கு எதிராகவும் மற்றும் மோசடி ஆவணப்பதிவுகளை ரத்து செய்யவும் முறையான சட்டங்களை இயற்றவும் திருத்தவும் உச்ச நீதி மன்றம் தமிழ் நாடு மாநில அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியும் அதற்குரிய சட்டங்களை இயற்றாத தமிழ்நாடு மாநில அரசாங்கம் ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு சார்பதிவாளருக்கு சில அதிகாரங்களை வழங்கும் வகையில் உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு முரனான ஒரு சட்டத்தை இயற்றி அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பும் பொழுது உச்ச நீதி மன்ற தீர்ப்பை அதில் சுட்டிக் காட்டாமல் மறைத்து இந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் பெற்று சட்டமாக்கியது உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு முரனாக ஒரு மாநில அரசாங்கம் சட்டம் இயற்ற முடியாது என்றும் இதை எதிர்த்து சமூக ஆர்வலர்களோ அல்லது வழக்கறிஞர்களோ வழக்கு தொடுத்தால் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுவிடும் என்ற கருத்தை நான் ஏற்கனவே இந்த தளத்தில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த சட்டத் திருத்தம் சம்மந்தமான வழக்கில் மதராஸ் உயர் நீதி மன்றம் வழங்கியுள்ள 117பக்க கொண்ட தீர்ப்பில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை முன்னிலை படுத்தி பதிய சட்டத் திருத்தத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது மேலும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ஆவணத்தில் உச்ச நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டி காட்டப்படாமல் உண்மை மறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது எந்த ஒரு ஆவணத்திலும் உண்மை மறைக்கப் பட்டிருக்குமானால் அது ஏற்கத்தக்கது அல்ல என்ற சட்ட அறிவு நுனுக்கத்தையும் தீர்ப்பில் சுட்டி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது நன்றி
சொத்துரிமையை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் சார் பதிவாளருக்கு இல்லை
Categories:
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
Related Post
Police Cannot Negotiate Dilution Of Criminal Law: Madras HC Directs Police Officers To Pay ₹2 Lakh Compensation For Settling Dowry ComplaintPolice Cannot Negotiate Dilution Of Criminal Law: Madras HC Directs Police Officers To Pay ₹2 Lakh Compensation For Settling Dowry Complaint
Views: 10 The High Court held that police officers cannot act as private arbitrators in cognizable offences, directing two suspended officers to pay ₹1 lakh each as public law compensation.
தொலைந்து போன மூல பத்திரத்தின் Copy ஐ வைத்து பத்திர பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம்தொலைந்து போன மூல பத்திரத்தின் Copy ஐ வைத்து பத்திர பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம்
Views: 20 தொலைந்து போன மூல பத்திரத்தின் Copy ஐ வைத்து பத்திர பதிவு செய்யலாம். காவல்துறையின் “Non Traceable Certificate ” தேவையில்லை. சென்னை உயர் நீதிமன்ற Judgement நாள் 27-09 – 2024 ( WA : 1160/2024)
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்!நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்!
Views: 16 நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர். உதாரணம்! பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
