GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் போலி ஆவணம் என உருதி செய்யப்பட்டால்”பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 83-ன் கீழ் முழு விசாரணை நடத்த மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது.

போலி ஆவணம் என உருதி செய்யப்பட்டால்”பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 83-ன் கீழ் முழு விசாரணை நடத்த மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது.

“🔊போலி ஆவணம் என உருதி செய்யப்பட்டால்”
பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 83 (Section 83 of the Registration Act)-ன் கீழ் முழுமையான விசாரணை நடத்த மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது

மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

போலி ஆவணங்கள், உண்மைகளை மறைத்தல் மற்றும் மோசடி மூலம் பதிவு செய்யப்பட்ட செட்டில்மென்ட் பத்திரம், திருத்தப் பத்திரம் மற்றும் விடுவிப்பு பத்திரத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாவட்ட பதிவாளர் சட்டப்படி விசாரணை நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு எண்
W.P.(MD) No.19918 of 2025
N. Muhammed Ashfaq Vs. District Registrar & Others
தீர்ப்பு நாள்: 22.07.2025

📝வழக்கின் சுருக்கம்:
மனுதாரர் முகமது அஷ்பக், எதிர்மனுதாரர்கள் 3 முதல் 5 வரை போலி ஆவணங்கள் மற்றும் உண்மைகளை மறைத்து,

✅ Gift Settlement Deed – ஆவண எண் 210/2024
✅ Amendment Deed – ஆவண எண் 275/2024
✅ Release Deed – ஆவண எண் 2177/2024

ஆகிய பத்திரங்களை பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டி, அவற்றை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் மற்றும் சார்பதிவாளருக்கு மனு அளித்திருந்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்காததால் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

🔥 உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு:

மாண்புமிகு நீதிபதி S. ஸ்ரீமதி அவர்கள்,

👉 மாவட்ட பதிவாளர், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள் 3 முதல் 5 வரை அனைவருக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும்.

👉 பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 83 (Section 83 of the Registration Act)-ன் கீழ் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

👉 விசாரணை முடிவில் தகுந்த உத்தரவை 8 வாரங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

⚖️ சட்ட முக்கியத்துவம்:
👇
📌 போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம், கள்ள கையெழுத்து அல்லது மோசடி மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம்.

📌 மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்த மறுக்க முடியாது.

📌 பதிவு செய்யப்பட்டதால் மட்டும் ஒரு ஆவணம் சட்டபூர்வமானதாகிவிடாது; மோசடி நிரூபிக்கப்பட்டால் பதிவு ரத்து செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம்.

📌 பதிவு அலுவலகங்களில் நடைபெறும் மோசடி பதிவுகளுக்கு எதிராக பொதுமக்களுக்கு இந்த தீர்ப்பு முக்கிய பாதுகாப்பாக அமைகிறது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தாசில்தாருக்கு பட்டா வழங்குதல் மற்றும் பட்டா ரத்து செய்வதற்கான அதிகாரம் தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள்!!!தாசில்தாருக்கு பட்டா வழங்குதல் மற்றும் பட்டா ரத்து செய்வதற்கான அதிகாரம் தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள்!!!

Views: 10 தாசில்தாருக்கு பட்டா வழங்குதல் மற்றும் பட்டா ரத்து செய்வதற்கான அதிகாரம் தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள்!!! பொருந்தும் சட்டங்கள் :Tamil Nadu Patta Passbook Act, 1983 – Sections 3, 5, 10, 12, 13.Tamil Nadu

RBI Logo

As per RBI Rule, no lunch interval to banks, வங்கிகளுக்கு RBI விதிப்படி உணவு இடைவேளை கிடையாது.As per RBI Rule, no lunch interval to banks, வங்கிகளுக்கு RBI விதிப்படி உணவு இடைவேளை கிடையாது.

Views: 23 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு RBI விதி படி உணவு இடைவேளை என்பது கிடையாது.காசாளரோ அல்லது ஊழியர்களோ மதிய உணவருந்த செல்லும் பொழுது அவருக்கு பதிலாக வேறொரு ஊழியரை நியமித்து பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி பணிகளை தொடர வேண்டும்

தாயின் சொத்துக்களை தானமாக பெற்றுக்கொண்டு, தாயை பராமரிக்காததால். தானம் ரத்து.தாயின் சொத்துக்களை தானமாக பெற்றுக்கொண்டு, தாயை பராமரிக்காததால். தானம் ரத்து.

Views: 8 கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு வயதான தாய், தனக்குச் சொந்தமான பல கோடிகள் மதிப்புள்ள வீட்டைத் தன் மகள் மற்றும் மகனின் பெயருக்கு ‘தானப் பத்திரம்’ (Gift Deed) மூலமாக எழுதிக் கொடுத்தார். சொத்தை எழுதும் போது, பிள்ளைகள் இருவரும்