GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட முடியாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Grama Natham Land Judgment”

கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட முடியாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Grama Natham Land Judgment”

சட்டம் ஒரு பார்வை

👉 “கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட முடியாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Grama Natham Land Judgment”

🏛️ கிராம நத்தம் நிலத்தை யாரும் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

கிராம நத்தம் நிலத்தில் ஆக்கிரமித்து வணிக நிறுவனம் நடத்தி வந்த நபரின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தீர்ப்பில், “கிராம நத்தம் நிலம் என்பது யார் வேண்டுமானாலும் ஆக்கிரமித்து உரிமை கோரக்கூடிய நிலம் அல்ல. அந்த நிலங்களை ஒழுங்குபடுத்தவும், பொதுநலன் கருதி பயன்படுத்தவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது”என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், நிலமற்ற மற்றும் வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டு மனைகள் வழங்குவதற்காகவே கிராம நத்தம் நிலங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் அல்லது அதிகார பலம் கொண்டு ஆக்கிரமிப்பவர்களுக்கு அவை சொந்தமாக மாற முடியாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கிராம நத்தம் நிலங்களில் வணிக நிறுவனங்கள் அமைப்பதும் அனுமதிக்கப்படாதது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு, தமிழகம் முழுவதும் கிராம நத்தம் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்போர் மற்றும் நில உரிமை தொடர்பான வழக்குகளுக்கு முக்கிய முன்னுதாரணமாக கருதப்படுகிறது.

⚖️ தீர்ப்பு தேதி: 20.04.2026
⚖️ வழக்கு எண்: W.P.No.39410 of 2025
⚖️ சென்னை உயர்நீதிமன்றம்

நன்றி

தகவல் பகிர்வு

என்றென்றும் தேசிய சட்ட விழிப்புணர்வு பணியில்

உங்கள்

சா. உமா சங்கர்., M.Com., M.B.A., M.Phil., LL.M.,
வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர்
சென்னை உயர்நீதிமன்றம்
8778710779

குறிப்பு

தீர்ப்பின் பிரதியை கிழே பார்க்கவும்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

BNS 106(1) படி அலட்சியத்தால் உயிரிழப்பு என்பது எதை குறிக்கிறது ?BNS 106(1) படி அலட்சியத்தால் உயிரிழப்பு என்பது எதை குறிக்கிறது ?

Views: 6 BNS 2023-ன் பிரிவு 106(1) வெறும் வாகனம் மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் அலட்சியமாக அல்லது கவனக்குறைவாக செய்யப்படும் எந்த செயலுக்கும் பொருந்தும். ⚖️ சட்டத்தின் சரியான வார்த்தைகள் பிரிவு 106(1)ன் மொழி இதைத் தெளிவுபடுத்துகிறது: “Whoever causes death of any

பத்திரங்களில் கையெழுத்து இடுவதும் கைரேகையும் வைப்பதும்.பத்திரங்களில் கையெழுத்து இடுவதும் கைரேகையும் வைப்பதும்.

Views: 70 *பத்திரங்களில் கையெழுத்தும் கைரேகையும்* 1) பத்திரத் பதிவின் போது, சார்பதிவாளர், ஆவணங்களிலும், பத்திரத்திலும், கைரேகை எடுப்பார்கள். அதில், கருப்பு இங்கில் அமுக்கி, ஆவணங்களில் ரேகை வைக்கும்போது, தெளிவில்லாமல் விழுந்துவிட்டது என்றால், ஒன்றும் பிரச்சினை இல்லை. அப்படி விழுந்து விட்டதே