GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் வழக்கு மனு மாதிரி

வழக்கு மனு மாதிரி

கிரிமினல் சிவில் – ஐகோர்ட்- மாதிரி மனுக்கள்

கே. என்.நேரு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறை அமைச்சர் மீது எங்கள் ஆசான் திரு செந்தமிழ் கிழார் அவர்கள் வழக்கு தொடுப்பதற்கு மனு கொடுத்து அவர் மந்திரி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கிய சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு உரிமையியல் விசாரணை முறை சட்டம், கட்டளை-46, விதி -1 இன் படி கடந்த 2005 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வழங்கிய மனு மாடல்

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,
சென்னை

அசல் வழக்கு எண் /2005

செந்தமிழ்க்கிழார்,
தற்காலிக தலைவர்,
பாதிக்கப்பட்டோர் கழகம்,
5/105, பெரியார் பாதை மேற்கு,
சூளைமேடு,
சென்னை -94.

மனுதார்

திரு. கே.என்.நேரு
போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள்,
கோட்டை, சென்னை -9

எதிர்மனுதார்

உ.வி.மு.ச. கட்டளை 46 விதி 1-ன்கீழ் மனு

1.மனுதாராகிய நான் மேற்படி வழக்கை சட்டப்படி தாக்கல் செய்துள்ளபோது இந்த நீதிமன்றம் சரியல்லாத காரணங்களைச் சொல்லி திருப்பிவிட்டுக் கொண்டே இருப்பது சரியல்ல.

2.இம்முறை மீண்டும் தாக்கல் செய்தபோது, ஊழியர்கள் ஒரு கருத்தை தெரிவித்தனர். இதுபோல் பொதுத் தொல்லை குறித்த வழக்கை இதுவரை யாரும் தாக்கல் செய்யவில்லை எனவும், அதனால் இந்த வழக்கை விசாரிப்பதில் தயக்கம் காட்ட வேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

3.இதற்கு முன் இதுபோல் ஒரு வழக்கை யாரும் தாக்கல் செய்யவில்லை என்பதானாலேயே இந்த மனு செல்லாமல் போகாது.

4.மேலும் எதிர்மனுதார் தற்போது போக்குவரத்துறை அமைச்சர் என்ற பெரிய பொறுப்பில் இருப்பதாகவும், அவரை இந்த நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பதில் சந்தேகமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

5.எதிர்மனுதார் அமைச்சராக உள்ளார் என்பதாலேயே அவரை அழைத்து விசாரிக்க முடியாது என்பது சரியல்ல.

6.இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 78-வது பிரிவின்படி ஒரு நடுவர் நல்லெண்ணத்தின் பேரில் அதிகாரத்தை மீறிய உத்தரவினைக்கூட பிறப்பிக்க இயலும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, எதிர்மனுதாரை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என்பது சரியல்ல.

7.மேற்கண்ட காரணங்களால் இந்த மனு விசாரணைக்கு ஏற்கத் தக்கதே.

8.எனினும் மனுதாரின் போதிய லிளக்கம் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்காத பட்சத்தில் ஏதேனும் சட்டப்பிரச்சனை வரலாம் என்று கருதினால் இந்த மனுவை உயர்நீதிமன்றத்திற்கு கட்டளை 46 விதி 1-ன்கீழ் அனுப்பி வைத்து உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் இந்த வழக்கை விசாரித்து முடிக்கவேண்டுமாய் மிகவும் பணிவுடன் பிரார்த்திக்கப்படுகிறது.

ஒப்பம் – செந்தமிழ்க்கிழார்

மனுதார்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நீதிமன்றத்தில் நீதிபதியிடம் தன்னிலை விளக்கம் கோரும் மனு மாதிரிநீதிமன்றத்தில் நீதிபதியிடம் தன்னிலை விளக்கம் கோரும் மனு மாதிரி

Views: 221 சட்டம் தெரியாத ஒரு பாமரனை எதிர் வழக்கறிஞரின் தவறான ஆலோசனை நீதிமன்றத்தின் தவறான வழக்கு ஏற்பு ஆகியவற்றை குறித்து எங்கள் அருப்புக்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களோடு பகிர விரும்புகிறேன் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு நபர் அவரது

கடன் வாங்கியவர்களின் வீட்டிற்கு அனுமதிக்கப்படாத நேரத்த்தில் செல்வது, தொலைபேசியில் அழைத்து மிரட்டுவது கூடாது. ரிசர்வ் வங்கி.கடன் வாங்கியவர்களின் வீட்டிற்கு அனுமதிக்கப்படாத நேரத்த்தில் செல்வது, தொலைபேசியில் அழைத்து மிரட்டுவது கூடாது. ரிசர்வ் வங்கி.

Views: 145 வங்கிகளில் கடன் வாங்கியவர்களிடம் அதனை திருப்பிப் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. வங்கிகளுக்கும், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். கடனை திருப்பி பெறும் முறை, கள ஆய்வு தொழில்நுட்ப ரீதியில் திரும்பப்

நுகர்வோர் புகார் கொடுப்பது எப்படி?நுகர்வோர் புகார் கொடுப்பது எப்படி?

Views: 28 நுகர்வோர் புகார் கொடுப்பது எப்படி? பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு, நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றங்கள், பொருளின் தயாரிப்பாளர்களிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத் தருவதைப் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கிறோம். ஆனாலும், அவை பற்றிய தேவையான விபரங்களை பலர் அறியாததால் நுகவர்வோர் நீதிமன்றங்களில்