GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் ஒரு அரசு ஊழியர் மீது வழக்கு தொடர்வது எப்படி? யாருக்கு அரசின் அனுமதி தேவை? யாருக்கு தேவையில்லை?

ஒரு அரசு ஊழியர் மீது வழக்கு தொடர்வது எப்படி? யாருக்கு அரசின் அனுமதி தேவை? யாருக்கு தேவையில்லை?

ஒருஅரசுஊழியர் மீது வழக்குதொடர்வது எப்படி?

ஒருஅரசுஊழியர் மீது வழக்கு தொடர அரசிடமிருந்து முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ” சங்கரன் மொய்த்ரா Vs சாதனா தாஸ் (AIR-2006-SCC-1599)” என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

ஆனால் அரசு அதிகாரி ஒருவர், அரசு கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றிருந்தால், அவர் மீதுள்ள வழக்கினை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக அரசிடமிருந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ன் கீழ் முன் அனுமதியை பெற வேண்டும். அந்த குற்றச் செயலானது அலுவலக ரீதியான ஒரு கடமையில் ஈடுபட்டிருக்கும் போது நடைபெற்றிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும். ஒரு அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அவருடைய அலுவலக கடமை என்கிற வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தால் அவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ல் கூறப்பட்டுள்ளவை பொருந்தாது.

ஓர் அதிகாரியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், அந்த அதிகாரியின் அலுவலக கடமைக்கும் இடையே நேரடியாகவும், நியாயமாகவும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும். வேறு விதமாக கூற வேண்டும் என்றால் மறைமுகமான அல்லது நியாயமற்ற வகையில் அந்த செயலுக்கு தொடர்பு இருந்தால் அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ன் கீழான பாதுகாப்பை பெற முடியாது.

ஒரு குற்றச் செயலை புரிவதற்கு அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தால் அந்த அதிகாரி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ல் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை பெற முடியாது. அந்த குற்றச் செயலானது அந்த அதிகாரி அவருடைய அலுவலக கடமையை நிறைவேற்றும் போது நடைபெற்றுள்ளதா? என்பதை அந்தந்த வழக்கு சங்கதிகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
ஓர் அரசு ஊழியர் அவருடைய அலுவலக கடமையை நிறைவேற்றுவதற்காக நியாயமான செயல்களில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும். அவருடைய கடமையை நிறைவேற்றுவதற்காக சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டிருந்தால் பிரிவு 197 ன் கீழ் பாதுகாப்பினை பெற இயலாது.
இது குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை ” I. ஈஸ்வரன் Vs காவல்துறை கண்காணிப்பாளர், CBCID, திருச்சி மாவட்டம் மற்றுமொருவர் (2015-3-MLJ-CRL-698)” என்ற வழக்கில் விவாதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.#ஒருஅரசுஊழியர் மீது வழக்கு தொடர அரசிடமிருந்து முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ” சங்கரன் மொய்த்ரா Vs சாதனா தாஸ் (AIR-2006-SCC-1599)” என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

ஆனால் அரசு அதிகாரி ஒருவர், அரசு கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றிருந்தால், அவர் மீதுள்ள வழக்கினை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக அரசிடமிருந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ன் கீழ் முன் அனுமதியை பெற வேண்டும். அந்த குற்றச் செயலானது அலுவலக ரீதியான ஒரு கடமையில் ஈடுபட்டிருக்கும் போது நடைபெற்றிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும். ஒரு அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அவருடைய அலுவலக கடமை என்கிற வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தால் அவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ல் கூறப்பட்டுள்ளவை பொருந்தாது.
ஓர் அதிகாரியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், அந்த அதிகாரியின் அலுவலக கடமைக்கும் இடையே நேரடியாகவும், நியாயமாகவும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும். வேறு விதமாக கூற வேண்டும் என்றால் மறைமுகமான அல்லது நியாயமற்ற வகையில் அந்த செயலுக்கு தொடர்பு இருந்தால் அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ன் கீழான பாதுகாப்பை பெற முடியாது.

ஒரு குற்றச் செயலை புரிவதற்கு அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தால் அந்த அதிகாரி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ல் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை பெற முடியாது. அந்த குற்றச் செயலானது அந்த அதிகாரி அவருடைய அலுவலக கடமையை நிறைவேற்றும் போது நடைபெற்றுள்ளதா? என்பதை அந்தந்த வழக்கு சங்கதிகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
ஓர் அரசு ஊழியர் அவருடைய அலுவலக கடமையை நிறைவேற்றுவதற்காக நியாயமான செயல்களில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும். அவருடைய கடமையை நிறைவேற்றுவதற்காக சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டிருந்தால் பிரிவு 197 ன் கீழ் பாதுகாப்பினை பெற இயலாது.

இது குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை ” I. ஈஸ்வரன் Vs காவல்துறை கண்காணிப்பாளர், CBCID, திருச்சி மாவட்டம் மற்றுமொருவர் (2015-3-MLJ-CRL-698)” என்ற வழக்கில் விவாதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தீர்ப்புக்குப் பிறகும் சமரசம்: கொடூரமற்ற குற்றங்களில் வழக்கை ரத்து செய்யலாம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!தீர்ப்புக்குப் பிறகும் சமரசம்: கொடூரமற்ற குற்றங்களில் வழக்கை ரத்து செய்யலாம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Views: 12 🔴 தீர்ப்புக்குப் பிறகும் சமரசம்: கொடூரமற்ற குற்றங்களில் வழக்கை ரத்து செய்யலாம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! “கொலை, கடத்தல் போன்ற குற்றங்களில் கூட பாதிக்கப்பட்டவருடன் சமரசம் ஏற்பட்டால் வழக்கை ரத்து செய்யலாம்” – நீதிபதிகள் பிரசாந்த்

விவாகரத்து வழக்கில் கணவர் ஆனவர் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?விவாகரத்து வழக்கில் கணவர் ஆனவர் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

Views: 12 விவாகரத்து வழக்கில் கணவர் ஆனவர் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா? ரமேஷ் என்பவரும், அம்பிகேஸ்வரி என்பவரும் கணவன் மனைவி ஆவார்கள். அவர்களுக்கிடையே விவாகரத்து வழக்கு ஒன்று நடந்து வந்தது. அந்த வழக்கில் ரமேஷ், தான் உடல் ஊனமுற்றவர்

பெற்றோரை பராமரிக்காமல் விட்டால், பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்யப்படும்!”பெற்றோரை பராமரிக்காமல் விட்டால், பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்யப்படும்!”

Views: 11 🚨”பெற்றோரை பராமரிக்காமல் விட்டால், பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்யப்படும்!” மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம், 2007-ன் Section 23-ன் கீழ், பெற்றோரை கைவிட்ட பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட சொத்து ஆவணத்தை ரத்து செய்ய வருவாய் கோட்டாட்சியர்