GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் விசாரணை என்ற பெயரில் மக்களை போலீசார் கொடுமை செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது, உயர்நீதி மன்றம் .

விசாரணை என்ற பெயரில் மக்களை போலீசார் கொடுமை செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது, உயர்நீதி மன்றம் .

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், சித்தேந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவின் அடிப்படையில், விசாரணை என்கின்ற பெயரில், நந்தம்பாக்கம் 
 போலீசார் கொடுமைப்படுத்துகிறார்கள்.

எனவே என்னை தொந்தரவு செய்யக் கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி கே இளந்திரையன் முன்பு விசாரணை வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகிலன், மனுதாரருக்கு எதிரான புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற புகார் என்றால் அது குறித்து போலீசாருக்கு விசாரணை நடத்த முழு அதிகாரம் உள்ளது.

ஆனால், அந்த அதிகாரத்தை சட்டத்தின்படிதான் பயன்படுத்த வேண்டும். சட்டம், போலீஸ் விசாரணையில் இருந்து இது போன்ற நபர்களை பாதுகாக்கும் அதிகாரத்தை மாஜிஸ்திரேட்டிடம் வழங்கியுள்ளது. அதே நேரம் புலன் விசாரணையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. இது போன்ற பல மனுக்கள் இங்கு தாக்கல் செய்யப்படுகிறது. எனவே விசாரணை என்கின்ற பெயரில் போலீசார் செய்யும் கொடுமையை இந்த நீதிமன்றம் கண்டு கொள்ளாமலும், தடுக்காமலும், கண்களை மூடிக்கொண்டும் இருக்க முடியாது.

எனவே ஒரு குற்றப் புகாரில் சம்பந்தப்பட்ட நபரை அல்லது சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு பி என் எஸ் எஸ் சட்ட பிரிவு 129ன் கீழ் சம்மன் அனுப்ப வேண்டும். அந்த சம்மனில் எப்போது விசாரணைக்கு வர வேண்டும்? தேதி, நேரம் ஆகியவற்றையும் போலீசார் குறிப்பிட வேண்டும். அவ்வாறு நடத்தப்படுகின்ற விசாரணையின்போது, பதிவு செய்யப்படுகின்ற வாக்குமூலத்தை போலீஸ் நிலைய டைரியில், வழக்கு விசாரணை டைரியில் குறிப்பிட வேண்டும். வழக்கு பதிவு மற்றும் ஆரம்பகட்ட விசாரணையை லலிதா குமாரி வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகளை போலீசார் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று, உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Courtesy : தினகரன்

குறிப்பு : இந்த பதிவில் பி என் எஸ் எஸ் 129 என்பது முற்றிலும் தவறான குறிப்பாக கருதப்படுகிறது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Affidavit அபிடவிட் எனப்படும் உறுதிமொழி பற்றிய முழு விளக்கம்.Affidavit அபிடவிட் எனப்படும் உறுதிமொழி பற்றிய முழு விளக்கம்.

Views: 144 அபிடவிட் என்றால் என்ன அபிடவிட் என்பதை உறுதிமொழி பத்திரம், உறுதிச்சான்று, சத்திய வாக்குமூலம், வாக்குமூலம், பிரமாணப்பத்திரம், ஆணைபத்திரம், சத்திய பிரமாண வாக்குமூலம், என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பொதுவான தனிப்பட்ட மற்றும் வணிக விவகாரங்களை நடத்தும் போது ஒவ்வொருவரும்

INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.

Views: 17 IA என்றால் Interim Application or Interlocutory Application / இடைகால மனு என்பதாகும். நடந்துகொண்டு இருக்கும் ஒரு வழக்கில், புதிதாக ஒரு விஷயத்தை சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு IA போடவேண்டும். அந்த IA வுக்கு, நீதி மன்றத்தால்

காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?

Views: 39 காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி? மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்ற மூன்று அமைப்புகள்