GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் பட்டா (patta) தொடர்பான முக்கிய தீர்ப்புகள்

பட்டா (patta) தொடர்பான முக்கிய தீர்ப்புகள்

பட்டா (patta) தொடர்பான முக்கிய தீர்ப்புகள்

  1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது

நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் – W. P. No – 24839/2014, dt – 16.7.2018

W. P. No – 491/2012, dt – 4.6.2014

W. P. No – 16294/2012, dt – 4.4.2014

  1. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால் அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாக கருத வேண்டும். மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No – 313 & 314/2008, dt – 11.2.2019

  1. விஏஓக்கள் மீதான புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். தவறு செய்யும் விஏஓக்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No – 13916/2019, dt – 1.7.2019

  1. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை வருவாய்த்துறையினர் தீர்மானிக்க முடியாது. உரிமையியல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No – 18489/2009, dt – 1.7.2011

  1. பட்டா உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No – 84/2006, dt – 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்

  1. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No – 2060/2001, dt – 2.11.2012

S. A. No – 1715/1989, dt – 25.6.2002

W. P. No – 16294/2012, dt – 3.4.2014

  1. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

Madras High Court
W. P. No – 18754, 20304, 2613/2005

DT – 4.11.2013

A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 – 3 – CTC – 270)

The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 – 2 – CTC – 315)

  1. பட்டா பெயர் மாற்றம் செய்ய நீண்ட காலதாமதம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.

W. P. No – 19428/2020, dt – 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)

  1. போலி பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No – 11279/2015, dt – 22.3.2019, madurai high court

  1. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய தாசில்தாருக்கே (#Tahsildar) அதிகாரம் உண்டு. வருவாய் கோட்டாட்சியா் பட்டா மாற்றம் செய்ய முடியாது. கோட்டாட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வழக்கில் தேவையான ஆவணங்களை ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் நிரந்தரமாக நிராகரிக்க முடியாதுவழக்கில் தேவையான ஆவணங்களை ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் நிரந்தரமாக நிராகரிக்க முடியாது

Views: 7 🚨 வழக்கில் தேவையான ஆவணங்களை ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் நிரந்தரமாக நிராகரிக்க முடியாது – நீதிமன்றத்தின் அனுமதியுடன் பின்னரும் தாக்கல் செய்யலாம்: சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு எண்: C.R.P.(MD) Nos.1955 to 1957 of 2023தீர்ப்பு

Revenue Stamp | ரெவின்யூஸ்டாம்ப்Revenue Stamp | ரெவின்யூஸ்டாம்ப்

Views: 12 ரெவின்யூஸ்டாம்ப் (Revenue Stamp)இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் இந்தியாவில் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப் படுகிறது.1)புராமிசரி நோட் கடன் வாங்கும்போது, கடன் வாங்கியவர் எழுதிக் கொடுக்கும் புராமிசரி நோட்டில் இந்த ஸ்டாம்பை ஒட்ட வேண்டும்.2)எந்த பணத்தையாவது யாரிடமிருந்தாவது வாங்கும்போது