GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Rectification Deed_ சீர்திருத்தபத்திரம் அல்லது பிழைத்திருத்தல் பத்திரத்திரம்.

Rectification Deed_ சீர்திருத்தபத்திரம் அல்லது பிழைத்திருத்தல் பத்திரத்திரம்.

சீர்திருத்தபத்திரம் அல்லது பிழைத்திருத்தல் பத்திரத்தினை பற்றிய சில தகவல்கள்..!

Rectification Deed_

பத்திரம் எழுதும் போது சிலர் தவறுதலாக ஏதாவது பிழைகள் போடுவது இயல்பானது ஆனால் அதை சரி செய்ய முடியுமா என்பது தான் கேள்வி ஆம் முடியும் அது எப்படி என்ன மாதிரியான பிழைகளை திருத்த முடியும்.

நம்முடைய பததிரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம்,சீர்திருத்தப் பத்திரம்( RECTIFICATION DEED) என்றும் கூறலாம். செடில்மெண்ட்,கிரயம் ,
பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

நம்முடைய பத்திரத்தில் சதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.

பத்திரத்தில் திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.

பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது பத்திரத்தில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, ஏற்கனவே இருந்த பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும் போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது போன்ற காரணத்துக்காகவும் திருத்தம் செய்யலாம்.

நாம் கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 50 சென்ட் என்பதை 05 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 50 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் செய்ய வேண்டும்.

மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போடுவதில் எந்த சிக்கல்களும் ஏற்படாது ஓரு இடத்தில் குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் கிடைக்காது .

ஒரு சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம் சொத்தினை விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை.

உங்களுக்கு சொத்தினை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும்.

உங்களுடைய பத்திரத்தில் சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும் உங்களுடைய பத்திரத்தில் இருக்கும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு தண்டனைக்கு உட்படுத்த படலாம்.

உங்களுடைய வீட்டு மனை எண் 3/G யை தவறாக மனை எண் 3/25 என்று டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 3/G என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில் அது 3/25 என்றே இருக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

ஆவணங்களில் எழுதப்பட்ட எழுத்துகளில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.மேலும் சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் திருத்தியவரின் கையொப்பம் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு மிக பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் இதனால் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் நீதிமன்றம் சென்றாலும் நீதிமன்றம் இந்த மாதியான திருத்தம் செய்யப்பட்ட பத்திரம் செல்லாது என தீர்ப்பளித்து இருக்கிறது.அதனால் பத்திரம் எழுதும் போது மிகவும் கவனமுடன் எழுத வேண்டும்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நில உச்ச வரம்பு சட்டப்படி இந்திய பிரஜை எவ்வளவு நிலம் விலைக்கு வாங்க முடியும்?நில உச்ச வரம்பு சட்டப்படி இந்திய பிரஜை எவ்வளவு நிலம் விலைக்கு வாங்க முடியும்?

Views: 23 ஒவ்வொரு இந்திய பிரஜையும் எவ்வளவு நிலம் விலைக்கு வாங்க முடியும் என்பதற்கான சட்டம் நில உச்ச வரம்பு சட்டம் எவ்வளவு வேண்டுமானாலும் நிலத்தை விற்கலாம். ஆனால் நிலத்தை வாங்குவதற்கு கட்டுப்பாடு உண்டு 22.5 ஏக்கர் நஞ்சை நிலமே வாங்க

நீதிமன்ற பயன்பாட்டு சொற்கள்நீதிமன்ற பயன்பாட்டு சொற்கள்

Views: 43 மக்கள் பணியில்GENIUS LAW ACADEMY குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948 ( UNIVERSAL DECLRATION OF HUMAN RIGHTS-1948) 10.12.1948 உருவாக்கப்பட்டது.சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948 ( UNIVERSAL DECLRATION OF HUMAN RIGHTS-1948) 10.12.1948 உருவாக்கப்பட்டது.

Views: 14 மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வ தேசிய அளவில் சிந்தனை செய்ததின் விளைவே சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948 ( UNIVERSAL DECLRATION OF HUMAN RIGHTS-1948) 10.12.1948 உருவாக்கப்பட்டது. மனித குலத்தைச் சார்ந்த ஒவ்வொரு