GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது

எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது

எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது?

ஏன் சில நிலம் வைத்துள்ளவர்கள் இன்று வரை அலைகிறார்கள்?

சிலர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தாலும், தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் விண்ணப்பித்திருந்தாலும், சில நிலத்திற்கு மட்டும் பட்டா வாங்கவே முடியாத நிலை இருக்கிறது.

பட்டா வாங்குவதற்கு பத்திரம் மட்டும் போதாது என்பதுடன். எந்த வில்லங்கமும் இல்லாமல் இருந்தால் மட்டுமே தாசில்தார்கள் பத்திரம் தருகிறார்கள். எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது என்பதை பாப்போம்.

நிலம் வாங்குவோர் எந்த வகையான நிலம் என்பது தெரியாமல் வாங்கவே கூடாது. அதனை அறிய வேண்டும் என்றால் வணக்கம். V. A. O. அலுவலத்திற்கு போக வேண்டும்.

அங்குதான் அது எந்த வகையான நிலம் என்பதை அறிய முடியும். அனாதீனம் உள்பட பல்வேறு வகையான நிலங்களுக்கு பட்டா கிடைக்காது.

அனாதீனம் நிலம் என்பது தமிழகத்தில் 1970களில் நகர்ப்புறநங்களில், ஏராளமான நிலத்தை சிலரே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இதனால் 1978ம் ஆண்டு, நில உச்சவரம்பு சட்டத்தினை கொண்டு வந்த அரசு, அதன் கீழ் உபரியாக 5883 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.

ஆனால் இந்த நிலங்களை அரசு முறையாக கட்டுப்பாட்டில் எடுத்து பயன்படுத்தாமல் விட்டுவிட்டது.

இதனால் பழைய உரிமையாளர்கள், இந்நிலங்களை 1999க்கு பிறகு சட்டம் ரத்தானதால் விற்பனை செய்துவிட்டனர்.

இதை வாங்கிய மக்கள், அதில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலங்களில் விறபனை தொடர்பான பத்திரங்கள் பதிவானாலும் பட்டா மாறுதல் செய்ய முடிவது இல்லை.

இதனால் இந்நிலங்களை பயன்படுத்தி வங்கிக்கடன், கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதேநேரம் அனாதீனம் நிலத்திற்கு பட்டா வாங்க சில வழிவகை உள்ளது. அதேநேரம் கிராமங்களில் விஏஓ அலுவலகம் சென்று நிலத்தின் வகையை அறிய முடிகிறது.

ஆனால் சென்னை போன்ற நகரங்களில் எப்படி அறியலாம். அதற்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலமா என்பதை அறிய சர்வே நம்பரை கொண்டு சென்று சோதிக்க வேண்டும்.

அப்படி செக் செய்யாமல் வாங்கியவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

land ceiling act அலுவலகம் சென்று சோதித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.

அதேபோல் அரசு, அனாதீனம். வண்டிப்பாதை, நீர் நிலை, நீர் வழிப்பாதை, வாய்க்கால் , கோயில் நிலங்கள், அறநிலைத்துறை நிலங்கள் போன்ற நிலங்களுக்கு முன்பு பட்டா வழங்கி இருந்தது.

அப்படி பட்டா வாங்கியவர்களின் நிலங்களின் மதிப்பு இப்போது பூஜியம் ஆக்கி வைத்துள்ளது.

எனவே பட்டா இருக்கிறது என்று நினைத்தும் இந்த இடங்களை வாங்கிவிட வேண்டாம்.

பட்டாவே இருந்தாலும் நிலம் என்ன வகை என்பதையும்

இந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பை பூஜியமாக மதிப்பிட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்த பின்னர் நிலத்தை அல்லது வீட்டை வாங்குங்கள்.

தெரியாமல் வாங்கிவிட்டு அவதிப்பட வேண்டாம். அனாதீன நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா என்றால், 1987ல் தான் கடைசியாக பட்டா தந்ததாக கூறுகிறார்கள்.

அதன்பிறகு அரசு தரவில்லை. அதேநேரம் சில இடங்களில் தந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

உங்கள் பகுதியில் அனாதீன நிலத்திற்கு யாருக்காவது பட்டா கிடைத்துள்ளது என்று தெரிந்தால், அதை வைத்து நீதிமன்றத்தை நாடி, பட்டா பெற முயற்சிக்கலாம்.
கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் அனாதீனம் உள்பட சில நிலங்களை வாங்காமல் இருப்பதே சிக்கல் இல்லாமல் இருக்க ஒரே

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கிராம ஊராட்சியின் அதிகாரமும் கடமைகளும்.கிராம ஊராட்சியின் அதிகாரமும் கடமைகளும்.

Views: 17 கிராம ஊராட்சியின் அதிகாரம் பற்றிய விழிப்புணர்வு பதிவு. 29 துறைகளின் அதிகாரங்கள். 1) வேளாண்மை துறை : வேளாண்மை மற்றும் வேளாண்மை விரிவாக்கம். 2) வருவாய் துறை: நிலசீர்திருத்தம் மற்றும் மண் வளப்பாதுகாப்பு. 3) பொதுப்பணி துறை: சிறுபாசனம்

Police should not call anyone orally to enquiry | காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.Police should not call anyone orally to enquiry | காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.

Views: 16 காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை. விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் கட்டாயமாக அழைப்பாணை (சம்மன்) அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கும் கூட FIR பதிவு செய்த பிறகே அதிகாரம் உண்டு.