GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் மோசடி பத்திர பதிவு ரத்து அதிகார அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

மோசடி பத்திர பதிவு ரத்து அதிகார அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

மோசடியாக பதியப்பட்ட பத்திர பதிவுகளை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த அரசாணையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், முறைகேடாக பதியப்படும் பத்திர பதிவுகளை, அந்தந்த மாவட்ட பதிவாளர்களே நேரடியாக ரத்து செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தம், கடந்த 2022 ஆகஸ்ட் 16 முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், தமிழக அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து, புதுக்கோட்டை வளர்மதி, திருச்செங்கோடு நித்யா பழனிச்சாமி, விழுப்புரம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

அதில் அவர்கள் கூறியதாவது, “தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு பத்திர பதிவு சட்டத்தில், புதிதாக கொண்டு வந்துள்ள பிரிவு 77-ஏ, 77-பி ஆகிய பிரிவுகளின்கீழ், போலியாக பதியப்பட்ட பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யலாம் என்றும், அதுதொடர்பான மேல்முறையீட்டை, பத்திர பதிவு துறை தலைவர் விசாரிக்கலாம் என்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது மற்றும் பல்வேறு முறைகேடுகளுக்கும் இது வழிவகுத்துள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தம் செல்லாது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும் என்ன அவ்வழிக்கில் கோரியிருந்தனர். மேற்கண்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள்,”போலி பத்திரம் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால், அந்த பத்திரம் செல்லாது என அறிவிக்கும் தமிழக அரசு அரசாணையை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். தமிழக அரசு கொண்டு வந்த 77ஏ, 77 பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது. அந்த பிரிவுகளை ரத்து செய்கிறோம்,”இவ்வாறு உத்தரவிட்டனர்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தாழ்த்தப்பட்ட சமூகம் மாற்று மதத்திற்கு மாறிய பிறகு SC ST வழக்கு பயன்படுத்த முடியாது? உயர்நீதிமன்றம்!தாழ்த்தப்பட்ட சமூகம் மாற்று மதத்திற்கு மாறிய பிறகு SC ST வழக்கு பயன்படுத்த முடியாது? உயர்நீதிமன்றம்!

Views: 19 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

குண்டர் சட்டம் என்றால் என்ன? யார் மீதெல்லாம் குண்டர் சட்டம் பாயும்?குண்டர் சட்டம் என்றால் என்ன? யார் மீதெல்லாம் குண்டர் சட்டம் பாயும்?

Views: 11 குண்டர் சட்டம் என்றால் என்ன? யார் மீதெல்லாம் குண்டர் சட்டம் பாயும்? தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்பு சட்டம் தான் குண்டர் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டம் 1982ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது. வன்செயல்கள், மற்றும்

விவாகரத்து மனு எப்படி இருக்கும்?விவாகரத்து மனு எப்படி இருக்கும்?

Views: 30 விவாகரத்து மனு எப்படி இருக்கும் திருமணமான கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்து, அது மிகப் பெரிய பிரச்சினையாக மாறும் போது, அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சரியான ஒரு வழி தான் இந்த விவாகரத்து, இருந்தபோதிலும் குழந்தைகள் இருக்கிறது