GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Revision petiron means | சீராய்வு மனு என்றால் என்ன?

Revision petiron means | சீராய்வு மனு என்றால் என்ன?

சீராய்வு மனு என்றால் என்ன?

       கீழமை நீதிமன்றமொன்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாததாலோ, முறைகேடாக பயன்படுத்தியதாலோ விளைந்த குறையை போக்கும் வகையில், பரிகாரம் அளிப்பதற்கென வழக்கை மீண்டும் ஆய்வு செய்தல் “சீராய்வு” எனப்படும்.

         The act of examining any judgment, Order or Proceeding in order to remove any defect and grant relief against irregular or improper exercise or non-exercise of jurisdiction by a lower court. 

                                                                                                                         see  section115 of CPC.

சீரார்வு மனுவை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட நீதிமன்றம், அதற்கு இணையான நீதிமன்றம், மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு மட்டுமே உண்டு.

       கீழமை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, உத்தரவின் நகல் வழங்கப்பட்டதில் இருந்து 90 நாட்களுக்குள் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். சீராய்வு மனுவை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டால் காலதாமதத்தை மன்னித்திட மனுதாக்கல் செய்ய வேண்டும். காலதாமதம் மன்னிக்கப்பட்ட பின்னரே சீராய்வு மனுவிற்கு எண் கொடுக்கப்படும். 

             நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யும்போது, அதனுடன் அதன் நகல், வக்காலத், படிக்குறிப்பு, பொது அறிவிப்புப் படிவங்கள், கீழமை நீதிமன்ற ஆணையின் நகல் ஆகியவற்றை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும்.

             சீராய்வு மனுவை அவசரத்தன்மையுடனும் தாக்கல் செய்யலாம். அதன் பொருட்டு அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டை தாக்கல் செய்தல் வேண்டும்.

         சீராய்வு மனுவில் எதிர்மனுதாரர் முன்னிலையாகிடும்போது எதிர்வுரை தாக்கல் செய்தல் வேண்டும். எதிர்வுரையில் முத்திரைவில்லை ஒட்ட வேண்டியதில்லை. எதிர்வுரையின் ஒவ்வொரு பக்கத்திலும் மற்றும் உண்மை வரைவின் (Verification) மேலும், கீழும் எதிர்மனுதாரர் கையொப்பம் இடுதல் வேண்டும். வழக்கறிஞர் உரிய இடத்தில் கையொப்பம் இடுதல் வேண்டும்.

                        சீராய்வு மனுத் தாக்கல் செய்யும்போது தடையாணை கோரி, மனு மற்றும் அபிடவிட் தாக்கல் செய்யலாம். மனுவில் நீதிமன்ற வில்லை ஒட்டுதல் வேண்டும்.

                  தடையாணை கோரி மனுத்தாக்கல் செய்யும்போது கேவியட் மனு நிலுவையில் இருந்தால் அதனைத் தடையாணை மனுவில் குறிப்பிட்டு, சீராய்வு மனுதாரரின் வழக்கறிஞர் கையொப்பம் இடுதல் வேண்டும். கேவியட் மனு இல்லையென்றாலும், கேவியட் மனு நிலுவையில் இல்லை என்று குறிப்பிட்டு சீராய்வு மனுதாரரின் வழக்கறிஞர் கையொப்பமிடுதல் வேண்டும். 

               மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனுவை சாதாரணமாகக் கொடுத்தாலும், அவசரத்தன்மையானதாகக் கொடுத்தாலும் செரசஸ்தாரிடம் கொடுத்தால் போதுமானதாகும். மாவட்ட வருவாய் அலுவலரிடம் தாக்கல் செய்யும் சீராய்வு மனுவை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

இரா. கணேசன்
அருப்புக்கோட்டை
9443920595

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தகவல் பெறும் உரிமை என்றால் என்ன?தகவல் பெறும் உரிமை என்றால் என்ன?

Views: 14 தகவல் பெறும் உரிமை என்றால் என்ன 1. எப்பொழுது இது அமலுக்கு வருகிறது? அக்டோபர் 12, 2005-ல் அமுலுக்கு வந்தது. (திட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து (ஜீன் 15, 2005) 120-வது நாளில்), சில விதிகள் உடனடியாகச் செயல்படுத்தும் வகையில் அமலுக்கு

நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து அரசே கட்டிடம் கட்டினால் கூட நடவடிக்கை எடுப்பது எப்படி?நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து அரசே கட்டிடம் கட்டினால் கூட நடவடிக்கை எடுப்பது எப்படி?

Views: 14 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

ஒரு அரசு ஊழியர் மீது வழக்கு தொடர்வது எப்படி? யாருக்கு அரசின் அனுமதி தேவை? யாருக்கு தேவையில்லை?ஒரு அரசு ஊழியர் மீது வழக்கு தொடர்வது எப்படி? யாருக்கு அரசின் அனுமதி தேவை? யாருக்கு தேவையில்லை?

Views: 36 ஒருஅரசுஊழியர் மீது வழக்குதொடர்வது எப்படி? ஒருஅரசுஊழியர் மீது வழக்கு தொடர அரசிடமிருந்து முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ” சங்கரன் மொய்த்ரா Vs சாதனா தாஸ் (AIR-2006-SCC-1599)” என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் அரசு