GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Consumer Court order | The bank should pay Rs 20,000 to a customer for AC. not working | ‘ஏசி’ செயல்படாத வங்கி கிளை, வாடிக்கையாளருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

Consumer Court order | The bank should pay Rs 20,000 to a customer for AC. not working | ‘ஏசி’ செயல்படாத வங்கி கிளை, வாடிக்கையாளருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி; திருநெல்வேலியில், ஐ.டி.பி.ஐ., வங்கியில், ‘ஏசி’ வேலை செய்யாததால் வாடிக்கையாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த வக்கீல் பிரம்மநாயகம், வண்ணார்பேட்டை, ஐ.டி.பி.ஐ., வங்கி கிளையில் பணம் செலுத்த, 2019 ஜூன் 21, ஜூலை, 12 ஆகிய நாட்களில் சென்றார். இரு நாட்களிலும் வங்கியில், ‘ஏசி’ செயல்படவில்லை.ஊழியர்களுக்கு மின்விசிறி இயங்கியது. வாடிக்கையாளர்கள் பகுதியில், மின்விசிறி கூட இல்லாமல் சிரமப்பட்டனர். இது குறித்து, பிரம்மநாயகம், வங்கி அதிகாரிகளிடம் கேட்டும், முறையான பதிலளிக்கவில்லை.

இதையடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு, 15 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என, 20 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தேவதாஸ் உத்தரவிட்டார்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2602787

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

CRPC 160 | சாட்சிகள் விசாரணைக்கு சென்று வந்தால், செலவீனங்களை காவல் துறையிடம் கேட்டுப்பெறலாம்.CRPC 160 | சாட்சிகள் விசாரணைக்கு சென்று வந்தால், செலவீனங்களை காவல் துறையிடம் கேட்டுப்பெறலாம்.

Views: 21 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

பக்கத்து வீட்டுக்காரரின் மரங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எப்படி?பக்கத்து வீட்டுக்காரரின் மரங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எப்படி?

Views: 17 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Sale deed Documents

Sale deed | 16 Important things should be followed while purchasing a property | கிரைய பத்திரம் பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய 16 முக்கிய விஷயங்கள்Sale deed | 16 Important things should be followed while purchasing a property | கிரைய பத்திரம் பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய 16 முக்கிய விஷயங்கள்

Views: 16 1). ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்காக உற்பத்தி செய்யப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2). மேற்படி கிரயப்பத்திரம், முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டு சார்-பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது