GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Police|avoid stick police sticker in own vehicle DGP warning | சொந்த வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டாதீர் – டிஜிபி எச்சரிக்கை

Police|avoid stick police sticker in own vehicle DGP warning | சொந்த வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டாதீர் – டிஜிபி எச்சரிக்கை

காவல்துறையினா் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ‘ஸ்டிக்கா்’ ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறையினா் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்த விவரம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் கருப்பு ‘ஸ்டிக்கா்களை’ நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் 14-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.

அதில், காவல் துறை உயா் அதிகாரிகள் பயன்படுத்தும் அலுவலக வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கா் பயன்படுத்தக் கூடாது. போலீஸ் என்ற பலகை மற்றும் ‘ஸ்டிக்கரை’ சொந்த வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள காவல்துறை உயா் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது. காவலா்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் போலீஸ் என்ற பலகை மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடாது என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயா் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

உரிமையியல் வழக்கின் தீர்ப்பு மாதிரி | CIVIL JUDGMENT MODELஉரிமையியல் வழக்கின் தீர்ப்பு மாதிரி | CIVIL JUDGMENT MODEL

Views: 16 CIVIL JUDGMENT MODEL (பரீட்சை / Drafting / Practical Exam க்கு Perfect Model) IN THE COURT OF THE DISTRICT MUNSIFF, MADURAI O.S. No. 0000 of 2025 A.B.C … Plaintiffvs.X.Y.Z

சட்ட விதிகளின்படி சிறந்த முறையில் ஆவணங்கள் தயார் செய்து தருகிறோம்சட்ட விதிகளின்படி சிறந்த முறையில் ஆவணங்கள் தயார் செய்து தருகிறோம்

Views: 17 சட்ட விதிகளின்படி சிறந்த முறையில் ஆவணங்கள் தயார் செய்து தருகிறோம். 👉 புதிதாக அறக்கட்டளை டிரஸ்ட் TRUST சொசைட்டி சங்கம் SOCIETY ஃபவுண்டேஷன் (FOUNDATION) போன்றவைகளை பதிவு செய்ய ஆவணங்கள் தயார் செய்து கொடுக்கின்றோம். 👉 புதியதாக தொழிற்சங்கங்கள்

what is injunction and how many types are there? தடை உத்தரவு என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன?what is injunction and how many types are there? தடை உத்தரவு என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன?

Views: 11 தடை உத்தரவு என்பது,ஒரு நபர் சட்டவிரோதமாக ஒரு செயலை செய்யாமல் தடுக்கவோ அல்லது ஒரு செயலை செய்ய நீதிமன்றம் கட்டாயப்படுத்தவோ வழங்கப்படும் நீதிமன்ற உத்தரவு ஆகும். இது பொதுவாக சொத்து தகராறு, உரிமை மீறல், ஆக்கிரமிப்பு, தொந்தரவு, ஒப்பந்த