GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Landlord-Tenant Dispute | வாடகைத்தாருக்கும், இட உரிமையாளருக்கும் இடையேயான தகராறு.

Landlord-Tenant Dispute | வாடகைத்தாருக்கும், இட உரிமையாளருக்கும் இடையேயான தகராறு.

  • Points / குறிப்புகள்:
  • பொதுவாக ஒரு வாடகைதாரர், தவறாது வாடகை கொடுத்து வரவேண்டும்.
  • ஒரு உரிமையாளர், ஒரு வாடகைதாறரை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால், அவர் முதலில் வாடகை வாங்குவதில் இருந்து தன்னுடைய குளறுபடிகளை தொடங்குவார்.
  • அந்த நிலையில், தொடர்ச்சியாக வாடகை வாங்க வரமாட்டார், அல்லது நேராக சென்று கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள மாட்டார்.
  • உரிமையாளர் வாங்க மறுத்தாலும் ஏதாவது ஒரு வழியில் வாடகை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • வழிகள்: உரிமையாளரிடம் அவருடை வங்கி கணக்கு கேட்டு கடிதம் அனுப்பி பெறலாம். அல்லது வங்கி கணக்கு ஏற்கனேவே தெரிந்தால் , அந்த வங்கியில் டெபாசிட் செய்துகொண்டு வரலாம்.
  • வங்கி வசதி கிடைக்காத நிலையில், அந்த வாடகை பணத்தை MONEY ORDER அஞ்சல் வழியாக அனுபலாம்.
  • மேற்படி மூன்று வழிகளிலும் உரிமையாளர் வாடகையை பெற மறுத்தால், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து, நீதி மன்றத்திலேயே வாடகையை செலுத்தி வரலாம்.
  • சில உரிமையாளர்கள், வாடகையை வாங்கிகொண்டு, அதற்கான பற்றுச்சீட்டு தராமல் இருப்பார்கள், அப்படி விடாமல் பற்றுச்சீட்டு கேட்டு பெறவேண்டும்.
  • அல்லது, வங்கி காசோலையாக வாடகையை செலுத்தி, ஆதாரமாக்கி கொள்ளவேண்டும்.
  • ஒரு இடத்து உரிமையாளர், ஒரு வாடைதாரரை என்னென்ன காரங்களுக்கு காலி செய்ய சொல்லலாம்?
  • 1. வேண்டுமென்றே வாடகை பாக்கி வைத்து இருப்பவரை காலி செய்ய சொல்லலாம்.
  • 2. இடத்து உரிமையாளருக்கே அந்த இடம் உண்மையாக தேவை பட்டால் காலி செய்ய சொல்லலா.
  • 3. தொந்தரவுகள் உண்மையாக இருக்குமேயானால், காலி செய்ய சொல்லலாம்.
  • 4. வாடகைதாரர் இருக்கும் கட்டடம் மிகவும் பழயதாகவோ, இடிந்து விழும் நிலையில் இருந்தாலும் காலி செய்ய சொல்லலால்.
  • 5. மாற்று உபயோகம் செய்தல் , அல்லது கீழ் வாடகைக்கு விட்டால் காலி செய்ய சொல்லலாம்.
  • மேற்படி காரணங்கள் உண்மையெனும் பட்சத்தில், அவற்றை நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். ஒரு இடத்து உரிமையாளர், வேண்டுமென்றே, தண்ணீரை தடுப்பது, மின்சாரத்தை துண்டிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கலாமா?
  • மின்டாரம் மற்றும் தண்ணீர் துண்டிக்க பட்டால், அதை உடனே திருப்பி வழக்கவேண்டும் என்று, நீதிமன்றத்தை நாடலாம், ஓரிரு நாட்களில் இடைக்கால மறு சீரமைப்பு முறையில் அதற்கு பரிகாரம் கிடைக்கும்.
  • அப்படி நீதிமன்ற ஆர்டரையும் மதிக்காமல், உரிமையாளர் தடை செய்த மின் இணைப்பையோ, தண்ணீர் இணைப்பையோ மீண்டும் தர மறுத்தால், உரிமையாளர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடலாம்.
  • நீதி மன்ற அவமதிப்பு தொடரப்பட்டால், அது குற்றவியல் வழக்காகிவிடும் எனவே, அதற்கான தண்டனையை வாங்கி கொடுக்கலாம்.
  • அல்லது, நீதிமன்றம் மூலமாக ஒரு அமீனா நிர்ணயிக்கபட்டு, நேரடியாக அவர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன், துண்டிக்கப்பட்ட விஷயத்தை திரும்ப பெறமுடியும்.
  • அதற்கான செலவுத்தொகையை வாடகையில் கழித்துகொள்ளலாம்.
  • கீழமை நீதி மன்றங்களில் தீர்வு கிடைக்காத பட்சத்தில், உயர்நீதி மன்றத்திற்கும், அதைத்தொடர்ந்து உச்ச நீதி மன்றத்திற்கும் வழக்கை கொண்டு சென்று தீர்வு காணமுடியும்.
  • RCOP, RCA, REVISION, SLP போன்ற நான்கு வகைகளில் வழக்கை கையாளலாம்.
  • ஒரு வாடகை தாரர் பல வருடங்கள் ஒரு இடத்தில் இருந்துவிட்டால், அவர் அந்த இடந்து உரிமை கொண்டாட முடியுமா?
  • ADVERSE POSSESSION அனுபவ பாத்தியம் சட்டம் வாடகை தாரருக்கு பொருந்தாது.
  • நீதிமன்றத்திற்கு சென்றால் எவ்வளவு காலம் பிடிக்கும்?
  • பழைய காலம் போல, ரொம்ப காலங்கள் எடுக்காது, சில காலங்களில் முடிவடைந்துவிடும் என்று நம்பலாம்.
  • Courtesy: S. M. RAZIAQ ALI, MA, MBA, ML, DLL, PGDCA, Advocate, Notary. 35/3 Siyali Street, Pudupet, Chennai 600002 Phone 044 28591882 Cell: 9444085595.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

PMAY scheme in Tamil| government free home scheme| பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்.PMAY scheme in Tamil| government free home scheme| பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்.

Views: 11 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

சட்டத்துறையில் புழக்கும் வழக்கமான சொற்கள்.சட்டத்துறையில் புழக்கும் வழக்கமான சொற்கள்.

Views: 14 நீதிமன்றம் 1) உச்சநீதிமன்றம் – Supreme Court2) உயர்நீதிமன்றம் – High Court3) நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Judicial Magistrate Court4)மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் – District Munsif Court5) தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் –

காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், நீதிமன்றத்திக்கு உண்டு.காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், நீதிமன்றத்திக்கு உண்டு.

Views: 18 இந்திய பிரஜையாக உள்ள ஒவ்வொருவருக்கும் காவல் நிலைய புலன் விசாரணை நேர்மையானதாக இருக்கசெய்ய அரசியல் அமைப்பு சட்டப்படி உரிமையுள்ளது எனஉச்சநீதிமன்றம் கூறியுள்ளது. புகார்தாரர் ஒரு புகாரை காவல் நிலையத்தில் அளிக்கிறார் ஆனால் காவல்துறையினர் அந்த புகாரை சரியாக புலனாய்வு