[RESOLVED] விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட ஒரு நபரை, யாரையும் சந்திக்க விடாமல் தடுத்தது வைக்கலாமா ?« Back to Previous Page
|
ஒரு நபரை, சந்தேகம் என்ற பெயரிலோ, குற்றம் சுமர்த்தப்பட்டவர் என்ற பெயரிலோ, சாட்சி என்ற பெயரிலோ காவல் நிலையம் அழைத்துச்சென்று, அந்நபரின் நண்பரை , உறவுகளை அல்லது ஒரு வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க மாட்டோம் என்று காவல்துறை தடுக்கலாம் ?
|
| ▲ ▼ |
தடுக்கக்கூடாது. இதுபோன்ற பல வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று, காவல்துறையின் இப்படிப்பட்ட அத்துமீறிய செயலுக்கு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது . அதாவது, கைது செய்யப்பட்ட ஒரு நபரின் உரிமையில் தன்னுடைய நண்பரையோ, உறவினரையோ, அல்லது தனக்கு தெரிந்த வழக்கறிஞரையோ சந்தித்து, தன்னுடைய பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் கலந்துரையாட, இந்திய அரசியலமைப்பு சாசனம் உருபு 22-ன் படியும், D.K. Basu vs West Bengal என்ற வழக்கின் தீர்ப்பின் படியும் கைது செய்யப்பட்ட நபர் உரிமை பெற்றுள்ளார். இந்த வரைமுறை மீறப்பட்டால், நீதிபதியிடம் கூறி விடுதலை பெறலாம்.
|
Please log in to post questions/answers:
