பொதுவாக செய்தி தொலைகாட்சிகளில் மழைகாலங்களில் தண்ணீர் வரத்து மற்றும் தண்ணீர் திறப்பு பற்றி சொல்லுன்போது, டி,எம்,சி, அளவு கோளை பயன்படுத்துகொன்றனர். அந்த டி,எம்,சி,க்கு என்ன பொருள், எத்தை லிட்டர் தண்ணீர்?
1 TMC என்பதற்கு 1 Thousand Million Cubic feet என்று பொருள். எனவே முதலில், இந்த மூன்று வார்த்தக்கும் அர்த்தம் தெரிய வேண்டும்.
சுருக்கமால பதில்:
- Thousand என்றால் 1000 ஆயிரம் என்று தெரியும்.
- Million என்றால் 10,00,000 பத்து லச்சமாகும்
- Cubic feet என்றால் ஒரு கன அடியாகும்.
- முதலில் பத்து லட்சத்தையும் ஆயிரத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டும். 10,00,000 x 1.000 = 1,00,00,00,000 அதாவது நூறு கோடி
- அடுத்து 1 கன அடியில் 28.316 லிட்டர் தண்ணீர் நிரப்பலாம். இதையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.
- 28,31,60,00,000.இரண்டாயிரத்து, என்னூற்றி நுப்பத்தி ஒரு கோடியே, அறுபது இலட்சம் லிட்டர்
விளக்கமான பதில்:
1 டி.எம்.சி. தண்ணீர் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமானால், 1 கனஅடி என்றால் என்ன? என்பதை முதலில் அறியவேண்டும்.
1 கன அடியை புரிந்துகொள்ள ஒரு சதுர அடியை முதலில் அறிய வேண்டும்.
12 x 12 இன்ச் அளவை ஒரு சதுரடி என்கிறோம், உதாரணம், வீடுகளில் போடக்கூடிய ஒரு டைல்ஸ் ஒரு சதுரடி என்பார்கள்.
அதே போல ஒரு கன அடி என்றால் மூன்று பக்கமும் 12 இன்ச் அளவுள்ள ஒரு பெட்டியை தயார் செய்தால் ஒரு கன அடி எனப்படும். அதாவது அகலம் ஒரு அடி, நீளம் ஒரு அடி, உயரம் ஒரு அடி. அதை ஆங்கிலத்தில் 1 Cubic feet என்போம்.
இந்த ஒரு கன அடியில் தண்ணீரை நிரப்பினால் அதில் சரியாக 28.316 லிட்டர்கள் நிரபலாம்.
1 TMC என்பது Thousand x Million x Cubic litter என்பதாகும். எனவே 1000 x 1000000 x 28.316 = 28,31,60,00,000.
1 டி.எம்.சி. தண்ணீரை சுமார் பத்தடி நீளமும், பத்தடி அகலமும், பத்தடி உயரமும் கொண்ட ஒரு அறையில் நிரப்பினால். 10,00,000 (பத்து லட்சம்) அறைகளில் நிரபலாம்.
1 டி.எம்.சி. தண்ணீரை ஒரு நபர் 50 லிட்டர் வீதம் குளிப்பதற்கு பயன் படுத்தினால், 56,63,20,000 (சுமார்: ஐம்பத்தி ஆறு கோடி) பேர் குளிக்கலாம்.