#பதில்
**********
கிராம நத்தம்
நிலம் தொடர்பான தொன்றுதொட்டே வரும் வழக்கு மொழிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அவர்களுக்காகத்தான் இந்தபதிவு.
கிராம நத்தம் என்றால் என்ன என்பதைபறி விரிவான சட்ட விளக்கத்துடன் காண்போம்.
நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி எனப் பெயர். கிராம நத்தம் என்றால் கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதி. அவ்வளவு தான்.
நத்தம் புறம்போக்கு என்றால் என்ன?
குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு என்று பெயர்.
சாதாரண புறம்போக்குக்கும், நத்தம் புறம்போக்குக்கும் என்ன வித்தியாசம்?
சாதாரண புறம்போக்கு என்றால் அரசுக்கு என்றாவது பயன்படும் நிலமாகவும் ஆனால் மக்களுக்கு குடியிருப்புக்கு பயன்படாத நிலமாகவும் இருக்கும். அதாவது ஏரி, ஆறு, கிணற்று பகுதிகள் போன்றவையை சொல்லலாம்.
கிராம நத்தத்திற்கும், நத்தம் புறம்போக்குக்கும் என்ன வித்தியாசம்?
கிராம நத்தமோ அல்லது நத்தம் புறம்போக்கோ எல்லாம் ஒன்றுதான்.
மக்கள் குடியிருக்க ஏதுவான இடம் என்றுதான் அர்த்தம். இந்த மாதிரியான நத்தம் நிலங்களில் பட்டா நீங்கள் வாங்கி விட்டால், அந்த நிலம் உங்களுக்கே சொந்தமாகிறது.
பட்டா இல்லை என்றால் நாளைக்கு அந்த நிலம் அரசுக்கு தேவையானால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் உங்களை காலி செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு.
நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி குடியிருக்கலாமா?
நத்தம் புறம்போக்கு பகுதியில் தான் லட்சகணக்கான நபர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
1800 முதல் 1900 காலங்களில் வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை அளக்க தொடங்கினர் அவ்வாறு அளக்க காரணம் விளைநிலங்களில் வரி வசூல் செய்வதற்காக இதனால் விளைநிலங்களை நஞ்சை புஞ்சை மானாவாரி தரிசு என வகைப்படுத்தப்பட்டு மற்றும் மக்கள் கூடியிருந்த குடியிருப்பு பகுதியை நத்தம் என வரையறுத்தனர் நத்தம் குடியிருப்பு வெளிச்சுற்று மட்டுமே அழைக்கப்பட்டது ஒரு ஊர் என்றால் ஊரை சுற்றி ஒரே அளவாக அளந்து வைத்து நத்தம் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டன பிற்காலங்களில் சுதந்திரம் பெற்ற பிறகு ஆயிரத்து தொள்ளாயிரத்து 90 ஆம் ஆண்டுகளில் நத்தம் புறம்போக்கு சர்வே செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டது இவற்றில் காலியாக உள்ள இடம் இன்னும் நத்தம் புறம்போக்கு குடியிருக்கும் பகுதிகள் நத்தம் பட்டா மனையாக பயன்படுத்தப்பட்டன மேலும் இந்த நிலவரித் திட்டத்தில் புஞ்சை நிலங்கள் இணைக்கப்பட்டு நத்தம் நிலவரி பட்டா வழங்கப்பட்டு மக்கள் வீட்டு மனைகளாக பயன்படுத்தி வருகின்றனர் இதுவே நத்தம் புறம்போக்கு காண வரலாறு