இந்தியாவில் ஒரு மாநிலத்தில் பதிவு செய்யபட்ட வாகனத்தை வேறொரு மாநிலத்தில் ஓட்டுவதற்கு பதிவு செய்யாமல் ஓட்டலாமா?
உதாரணமாக, டெல்லியில் பதிவு செய்யப்பட்ட ஒரு வாகனத்தை, தன் சொந்த தேவைக்காகவோ அல்லது விற்பனைக்காகவோ வேறொரு மாநிலத்திற்கு எடுத்து வந்து ஓட்டும்போது, போலீஸ் மற்றும் RTO பிடித்து அபராதம் போடுகிறார்கள். எனவே, அப்படி வாகனத்தை ஓட்டுவதற்கு அனுபதி உல்டா? இல்லையா? எவ்வளவு காலம் வரை ஓட்டலாம்?
மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 47,48. விபரப்படி, இந்தியாவில் ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வேறொரு மாநிலத்தில் ஓட்ட எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. பொதுவாக ஒரு வாகனத்தை வாங்கி, முதல் பதிவு செய்யும்போதே, அது சொந்த வாகனம் என்னும் பட்சத்தில், அதற்கு வாகன உரினையாலரிடமிருந்து 15 வருடங்களுக்கு, இந்தியா முழுவதும் ஓடுவதற்கு வரி வசூல் செய்யபடுகிறது. எனவே, வேறொரு மாநிலத்தில் ஓட்டும்போது, ஓட்டக்கூடாது என்று சொல்ல போலீசுக்கோ, RTO வுக்கோ எந்த அதிகாரமும் இல்லை, அப்படி சொன்னால் அவர்கள் பொய் சொல்லி சட்டத்தையும், நம்மையும் ஏமாற்றுகிறார் என்றே அர்த்தம். இங்கு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
மேலும், ஒரு வருடத்திற்கு மேலாக, வேறொரு மாநிலத்தில் குறிப்பிட்ட வாகனத்தை ஒட்டுவதாக இருந்தால் மட்டுமே, ஓட்டிக் கொள்ளலாம் என்று அதே சட்டம் அறிவுறுத்துகிறது.
மேலும் அறிய https://aappy.in/?p=1429