இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA எனப்படும் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது? அது எதற்காக திருத்தம் செய்யப்பட்டது?
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று இசுலாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள் , சீக்கயர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு ‘1955 குடியுரிமை சட்டம் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. 1955 முதல் 31-12-2014 வரை இந்தியாவில் குடியேறிய மேற்சொன்ன மதத்தவர்களுக்கு மட்டும் இந்த சட்டம் திருத்தம் பொருந்தம். ஆனால், முஸ்லிகளுக்கு பொருந்தாது.
அதேபோல், மேற்கண்ட மூன்று நாடுகளை தவிர மியான்மார், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலிருந்து வரும், இந்துக்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லிகளுக்கோ பொருந்தாது. என்று CAA எனப்படும்சட்ட திருத்த மசோதா சொல்கிறது.