வைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னெ? விலை எப்படி தெரிந்துக்கொள்வது? வைரம் அணிய ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதம் கண்டிப்பாக பார்த்துதான் அணியவேண்டுமா?
வைரம் வாங்கும் விஷயத்தில் ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதம் பார்ப்பது என்பதை குறிப்பாக இந்தியர்களிடம் அதிகம் காணலாம். இந்த விஷயத்தி பல மேலை நாட்டு மக்களிடம் இந்த பழக்கம் இல்லை. ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் அதை கணித்து வாங்கிக்கொள்ளலாம்.
ஒரு வைரத்தின் விலை என்பது, 4C = 1C என்பார்கள், அதாவது (1) Carat =எடை, (2). Clarity = சுத்தம் (3) Color =கலர் (4) Cut = வெட்டு இவை நான்கும்தான் ஐந்தாவதாக (C) Currency = விலையை முடிவு செய்கிறது.
பொதுவாக இரத்தின கற்களுக்கு விலை நிர்ணயம் என்பது இதுவரை உலகில் இல்லை. ஆனால் வைரத்திற்கு மட்டும் தங்கம் மற்றும் வெள்ளி போன்றவைகளுக்கு இருப்பது போல விலை நிர்ணயம் உண்டு. அந்த விலைகளை தெரிந்துகொள்ள RAPNET.COM , RAPAPORT.COM போன்ற இணையதளங்களில் கிடைக்கும், ஆனால் அதில் மெம்பராக இருக்கு நபர்கள் மட்டுமே அதை பார்த்து தெரிந்துகொள்ள முடியும். அதில் மெம்பராக இருப்பவர்கள் வைர வியாபாரிகளே அதிகம்.
வைரத்தை பார்த்து உண்மைத்தன்மை கண்டுபிடிக்க அனுபவம் இல்லாதவர்கள், வைரம் வாங்கும்போது அதற்கான லேப் சான்றிதழுடன் மட்டுமே வாங்கவேண்டும். காரணம், இன்று வரைத்திற்கு நிகரான MAN MADE , LAB GROWN , SYNTHETIC முறையில் தயார் செய்யப்படுகிறது. அசல் வைரம் என்பதை பூமியில் கிடைத்த வைரத்தை மட்டுமே சொல்லலாம்.