பொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா? அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா?

கேள்விகள்Category: கேள்விபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா? அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா?
admin.service-public.inadmin.service-public.in Staff asked 1 year ago
  1. ஒரு குற்றம் சாட்டப்பட்டவரையோ அல்லது புகார் அளிக்க சென்றவரையோ ஏதேனும் காரணம் சொல்லி போலீஸ் அவரை அடிக்கலாமா?
  2. ஒரு தவறு செய்தவரை போலீஸ் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வருகிறது. அப்போது அவர் குற்றவாளியாகிறார், இந்நிலையில், செய்த தவறுக்காகவும், அல்லது உண்மையை வரவழைக்கிறேன் என்ற நோக்கில் அடிக்கலாமா?
351
2 Answers
admin.service-public.inadmin.service-public.in Staff answered 11 months ago

காவல் துறையினர் விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களை அடிக்கலாமா??
அப்படி அடித்தால் அவர்களின் மீது நாம் எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும்??
காவல் துறையினர் மட்டுமல்ல வேற எந்த ஒரு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களை அடிக்கும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. குற்றம் செய்தவரை தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அவ்வாறு அடித்தால் கீழ்காணும் இந்திய தண்டனை சட்டப் பிரிவின் கீழ் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும்.
IPC – 166 : ஒருவருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் சட்டத்தின் செயல்பாடுகளை மீருதல்.
IPC – 330 : ஒப்புதலை பெறுவதற்கு தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.
IPC – 357 : சட்ட விரோதமாக அடைத்து வைக்க முயலும் போது தாக்குதல்.
IPC – 321 : தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.
IPC – 322 : தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்.
IPC – 324 : ஆயுதங்கள் மூலம் காயம் விளைவித்தல்.
IPC – 307 : கொலை முயற்சி.
மேலும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களை அடித்தால் அது மனித உரிமை மீறல் செயலாக கருதி அவர்களின் மீது வழக்கு தொடர்ந்தால் அவர்களின் பதவி பறிபோகும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

10
admin.service-public.inadmin.service-public.in Staff answered 11 months ago

போலிஸ் விசாரணை

11