புகார் மேல் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாமா?

கேள்விகள்புகார் மேல் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாமா?
Yacoub Hameed asked 1 year ago

புகார் மேல் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாமா?

317
1 Answers
admin.service-public.in Staff answered 1 year ago

மாநில மனித உரிமை ஆணையம்
அரசு அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?
காவல்துறையில் நீங்கள் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லையென்றாலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாம்.
மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுகின்ற 80% புகார்கள் காவல்துறைக்கு எதிரானவையாகும்.
* அதிகாரிக்கு அனுப்பப்பட்ட புகார் நகல்
* அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.
* மேலதிகாரிக்கு அனுப்பிய மேல்முறையீட்டு நகல்.
* அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.
* புகாருடன் இணைக்கப்பட்டிருந்த ஆவண நகல்கள்.
ஆகியவற்றை இணைத்து, புகார் மனு ஒன்று எழுதி, பதிவுத் தபால் மூலமாக ஒப்புதல் அட்டை இணைத்து.
ஆணையர் அவர்கள்,
மாநில மனித உரிமை ஆணையம்,
143, P.S.குமாரசாமிராஜா சாலை,
திருவரங்கம் மாளிகை,
கிரீன்வேஸ் ரோடு,
R.A.புரம்,
சென்னை-600 028.
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
* இந்த புகாரை சாதாரணமாகவே எழுதி அனுப்பலாம்.
* மனு ஸ்டாம்ப் ஏதும் ஒட்டத் தேவையில்லை.
* புகார் தெளிவாக, முழுமையாக எழுதப்பட வேண்டும்.
* வேறு (நீதிமன்றம்) எங்கும் புகார் அனுப்பி விசாரணை நிலுவையில் இருக்கக்கூடாது.
* தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருந்தால் மாநில மனித உரிமை ஆணையம் அந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்காது.
* மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருந்தால் தேசிய மனித உரிமை ஆணையம் அந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்காது.
*பொது (அரசு) ஊழியருக்கு எதி்ராக இல்லாத புகார் ஏற்றுக் கொள்ளப்படாது.
*புகார் பதிவு செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் விசாரணை மேற்கொள்ளப்படும்.
* மனித உரிமை மீறலுக்கு எதி்ராக இல்லாத புகார் ஏற்றுக் கொள்ளப்படாது.
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1486… Courtesy… Ramachandran Bhaskar

6