இரத்தின கற்கள் வாங்கும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

கேள்விகள்Category: இரத்தினங்கள்இரத்தின கற்கள் வாங்கும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
admin.service-public.in Staff asked 1 year ago

இரத்தின கற்கள் வாங்கும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? குறிப்பாக, கற்களின் உண்மைத்தன்மை எப்படி அறிவது?

327
1 Answers
admin.service-public.in Staff answered 1 year ago

இரத்தின கற்களின் உண்மைத்தன்மை அறிவது என்பது, கண்டிப்பாக சுலபமான விஷயம் அல்ல. ஒரு காலத்தில் இயற்கையான  ரத்தினக்கற்களுக்கு மாற்று என்பது இல்லாதிருந்தது, ஆனால், இன்றைய காலகட்டத்தில், பூமியில் கிடைக்கக்கூடிய அனைத்துவகையான இயற்கையான கற்களுக்கும் மாற்றாக SYNTHETIC, MAN MADE, LAB GROWN   எனப்படும் பலவகையான மனித உற்பத்தி கற்கள் இன்று சர்வசாதாரணமாக கிடைக்கின்றன. 
இந்த சூழ்நிலையில் ஒருவர் ஒரு ரத்தினக்கல்லை வாங்க வேண்டுமென்றால்,

  1. வாங்கும் நபர் கற்களின்  அசல், நகல், தன்மை, குடும்பம், கலர், பொலிவு, தெளிவு, சுத்தம் எடை போன்ற விஷயங்களை நன்கு அறிந்து இருக்க வேண்டும்.
  2. அல்லது, நன்கு தெரிந்த நம்பிக்கையானவரிடம் மட்டுமே வாங்க வேண்டும். 
  3. அல்லது, இரத்தின கற்களை அசல் என்று சொல்லி விற்பவர், அது அசலானது இல்லை என்று எப்போது தெரியவந்தாலும் திரும்ப எடுத்து கொள்ள அனுமதி தரக்கூடிய நபரிடம் மட்டுமே வாங்க வேண்டும். 
  4. அல்லது, வாங்குபவருக்கும்  அனுபவமும் இல்லை, நம்பிக்கையும் இல்லையெனில், கண்டிப்பாக LAB CERTIFICATE பரிசோதனை சான்று போட்ட பிறகே வாங்கவேண்டும்.
12