OPPO – ISRO ஒப்பந்தம்: ‘NavIC’ குறுஞ்செய்தி சேவையை மேம்படுத்தத் திட்டமா?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஓப்போ,ரெட்மீ மற்றும் ஒன்பிளஸ் எனச் சீன நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதற்குக் காரணம் குறைவான விலையிலேயே, சிறந்த வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அவை வாடிக்கையாளருக்கு அளிப்பது தான். இந்த நிலையில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போவுடன் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

ஓப்போ இந்தியாவின் துணைத் தலைவர் தஸ்லீம் ஆரிஃப்புடன் இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (R&D) NavIC அமைப்பைப் பலப்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது கூகுள் மேப் போன்று இந்தியாவுக்கென தனிப்பட்ட முறையில் இஸ்ரோ உருவாக்கி வரும் ஒரு சேவையாகும். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒருவர் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் தங்களது இருப்பிடத்தைத் துல்லியமாக அறிய இந்த NavIC உதவும் என முன்பே தெரிவித்திருக்கிறது இஸ்ரோ.

Also Read: `இனி அமெரிக்க GPS வேண்டாம்… இந்தியாவின் NavIC ரெடி!’ இஸ்ரோ அதிரடி

Also Read: `இஸ்ரோவின் `NavIC’ சேவைக்கான சிப்கள் ரெடி..!’- உங்கள் வாகனம் ரெடியா?

NAVIC

NavIC அமைப்பானது இந்திய எல்லை வரை மட்டுமல்லாது, இந்திய எல்லையைக் கடந்து 1,500 கிமீ தொலைவு வரையான தகவல்களை நமக்குக் கொடுக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. NavIC அமைப்பின் முதன்மையான நோக்கமானது நமது இருப்பிடம் மற்றும் நேரத்தைத் துல்லியமாக அனுப்ப உதவுவது மற்றும் பாதை காட்டக் கூடிய நேவிகேஷன் சேவைகளை வழங்குவதும் தான். ஆனால், இதன் மூலம் குறுஞ்செய்திகளையும் அனுப்ப முடியும். இந்தக் குறுஞ்செய்தி சேவைகளை மேம்படுத்துவதற்காகத் தான் ஓப்போவுடன் கைகோர்த்திருக்கிறது இஸ்ரோ. NavIC மூலம் தினசரி பயன்படுத்தும் வகையில் குறுஞ்செய்தி சேவையை மேம்படுத்தி, அதனை ஓப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி வெளியிட வேண்டும் எனப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு அதிகம் இல்லாத பகுதிகளிலும் பிறருக்குத் தகவலை பரிமாறவும், பாதுகாப்பு குறுஞ்செய்திகள் அனுப்பவும் இது உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔊 Listen to this இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஓப்போ,ரெட்மீ மற்றும் ஒன்பிளஸ் எனச் சீன நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதற்குக் காரணம் குறைவான விலையிலேயே, சிறந்த வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அவை வாடிக்கையாளருக்கு அளிப்பது தான். இந்த நிலையில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போவுடன் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஓப்போ இந்தியாவின் துணைத் தலைவர் தஸ்லீம் ஆரிஃப்புடன் இஸ்ரோ தலைவர் சிவன்…