Fact Check: `சபரிமலை `அரவணைப் பாயசம்’ தயாரிக்கும் இஸ்லாமிய நிறுவனம்’ – குற்றச்சாட்டு உண்மையா?!
சபரிமலை பிரசாதமான அரவணைப் பாயசத்தை இஸ்லாமிய நிறுவனம் ஒன்று தயாரித்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. இது குறித்து ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர், “இது அரவணைப் பாயசம். சபரிமலை சந்நிதானத்தில் மட்டுமே கிடைக்கும் பிரசாதம். கேரளா தேவசம் போர்டு அரவணைப் பாயசம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை இஸ்லாமிய நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டதுபோலத் தெரிகிறது. அரபிக் மொழியில் பெயரிடப்பட்டிருக்கிறது. இது இந்து மதத்துக்கு ஏற்பட்ட அவமானம்” எனப் பதிவிட்டு `AL ZAHAA SWEETS’ என்ற பெயரோடிருக்கும் அரவணைப் பாயச டப்பாவின் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

Also Read: Fact Check: `உ.பி பந்தேல்கண்ட் பகுதியில் புதிய அணை’ – பாஜக தலைவர்கள் பகிர்ந்த புகைப்படம் உண்மையா?!
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாவதற்குச் சில தினங்களுக்கு முன்னரே, இதே புகைப்படத்தைப் பகிர்ந்து, “சபரிமலையின் பிரசாதமான அரவணைப் பாயசம் இப்போது இஸ்லாம் மதத்துக்கானது மட்டுமல்ல, ஹலாலும்கூட. அரபிக் மொழியில் பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது” என்று இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.
Aravanapayasam the main prasadan of Sabrimala, is not only now Islamic but halal too, with an Arabic name.
Cute… pic.twitter.com/IWoBJBAjCz
— Indu Makkal Katchi (Offl) (@Indumakalktchi) November 12, 2021
‘RSS: Evolution from an Organization to a Movement’ என்ற புத்தகத்தை எழுதிய ரத்தன் ஷர்தாவும், `மிகவும் தொந்தரவை ஏற்படுத்திய தகவல்’ என்று சொல்லி இதே புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
உண்மை என்ன?
கேரளா அரசின் இணையதளத்தில், `சபரிமலைப் பிரசாதம்’ என்று அரவணைப் பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், `திருவாங்கூர் தேவசம் போர்டு’, `அரவணைப் பிரசாதம்’ என்று எழுதப்பட்டு, ஐயப்பன் படத்தோடு அரவணைப் பாயசம் அடங்கிய டப்பாவின் படம் இடம்பெற்றிருந்தது. கேரள அரசின் இணையதளத்திலிருந்த படத்திலிருப்பதுதான் சபரிமலைக் கோயிலில் வழங்கப்படும் அரவணைப் பாயசப் பிரசாதம்.

மேலும், `AL ZAHAA SWEETS’ என்று கூகுளில் தேடிப் பார்க்கையில், அது துபாயில் அமைந்திருக்கும் ஓர் இனிப்புக் கடை என்பது நமக்குத் தெரியவந்தது. இது குறித்து `The Quint’ ஆங்கில செய்தித்தளம் AL ZAHAA SWEETS-ன் வியாபார மேலாளரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருக்கிறது. அதற்கு, “நாங்கள் தயாரிக்கும் அரவணைப் பாயசத்துக்கு எந்த மதம், கடவுள், சாதியுடனும் தொடர்பில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலோ, கேரளாவிலோ இருக்கும் எந்தவொரு நிறுவனத்துடனும் நாங்கள் ஒப்பந்தத்தில் இல்லை” என்றிருக்கிறார் அந்த மேலாளர். திருவாங்கூர் தேவசம் போர்டின் ஆணையர் பி.எஸ்.பிரகாஷும், “சமூக வலைதளங்களில் சுற்றிவரும் தகவல்கள் போலியானவை” என்று மறுத்திருக்கிறார்.
இதன் மூலம், `சபரிமலை கோயிலில் விற்கப்படும் அரவணைப் பாயசத்தை இஸ்லாமிய நிறுவனம் தயாரிக்கிறது’ என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி போலியானது என்பது உறுதியாகிறது.

🔊 Listen to this சபரிமலை பிரசாதமான அரவணைப் பாயசத்தை இஸ்லாமிய நிறுவனம் ஒன்று தயாரித்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. இது குறித்து ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர், “இது அரவணைப் பாயசம். சபரிமலை சந்நிதானத்தில் மட்டுமே கிடைக்கும் பிரசாதம். கேரளா தேவசம் போர்டு அரவணைப் பாயசம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை இஸ்லாமிய நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டதுபோலத் தெரிகிறது. அரபிக் மொழியில் பெயரிடப்பட்டிருக்கிறது. இது இந்து மதத்துக்கு ஏற்பட்ட அவமானம்” எனப் பதிவிட்டு `AL ZAHAA SWEETS’ என்ற பெயரோடிருக்கும்…
🔊 Listen to this சபரிமலை பிரசாதமான அரவணைப் பாயசத்தை இஸ்லாமிய நிறுவனம் ஒன்று தயாரித்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. இது குறித்து ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர், “இது அரவணைப் பாயசம். சபரிமலை சந்நிதானத்தில் மட்டுமே கிடைக்கும் பிரசாதம். கேரளா தேவசம் போர்டு அரவணைப் பாயசம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை இஸ்லாமிய நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டதுபோலத் தெரிகிறது. அரபிக் மொழியில் பெயரிடப்பட்டிருக்கிறது. இது இந்து மதத்துக்கு ஏற்பட்ட அவமானம்” எனப் பதிவிட்டு `AL ZAHAA SWEETS’ என்ற பெயரோடிருக்கும்…