RTI | information not to be refused | தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுக்கக் கூடாத தகவல்கள்.
சட்ட விழிப்புணர்வு🔊 Listen to this தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவது ஆகும். ஆனால் தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் செயல்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக பிரிவு 8 ல் கூறப்பட்டுள்ள சில உட்பிரிவுகளை சுட்டிக்காட்டியே பெரும்பாலும் தகவல் அளிக்க மறுக்கின்றனர். அதிலும் குறிப்பாக தனிப்பட்ட ஒருவரின் தகவல் என்றே மறுக்கப்படுகிறது. ஒருவர் அரசுப் பணிக்கு…