HHO kit மூலம் நீரிலிருந்து பிரித்தெடுக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை, வாகனங்களில் பயன்படுத்துவது எப்படி – கட்டுரை
-
by admin.service-public.in
- 68
கட்டுரை MMY HAMID (Scientist)
இந்த கட்டுரையில் ஹைட்ரஜன் பற்றிய நன்மைகளையும் உண்மைகளையும் தெரிந்துகொள்வதற்கு முன் அதில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும் பொய் பிரச்சாரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. ஹைட்ரஜனைப் பற்றிய மிகப்பெரிய தவறான கருத்து என்னவென்றால்,
- நாம் தண்ணீரில் இருந்து எரிபொருளை உருவாக்குகிறோம். இது முற்றிலும் தவறானது.
- இது உண்மையாக இருந்தால், இயற்பியல் விதிகளை மீறுகிறது.
- எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் அளவுக்கு வேகமாக ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது சாத்தியமில்லை. போன்றவை.
ஆனால், தற்போது, ஹைட்ரஜனில் மட்டும் இயங்கும் கார்கள் உருவாகபட்டுள்ளன, அவை ஹைட்ரஜனை முதன்மை எரிபொருளாகப் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் முன்கூட்டியே உற்பத்தி செய்து. ஒவ்வொரு சாதாரண காருக்கும் பெட்ரோல் டேங்க் தேவைப்படுவது போல, வாகனத்தில் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு ஹைட்ரஜன் சேமிக்கப்படுகிறது.
சாதாரணமாக, பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தும் வாகனங்களில் தற்போதுள்ள எரிபொருளின் எரிப்பு திறன், 70% வீதம் மட்டுமே நடைபெறுகிறது. அப்படி எரியாமல் வெளியேறும் 30% வீதத்தையும் சேர்த்து எரிக்க ஹைட்ரஜன் உதவுகிறது. இதனால் நீங்கள் 30% வீதம் எரிபொருள் சேமிப்பை பெற்று, கூடுதல் ஓட்டத்தை அனுபவிப்பீர்கள்.
HHO kit எனப்படும், ஹைட்ரஜன் ஜெனரேட்டர்கள், தண்ணீரை (H2O) ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனின் மூலக்கூறுகளாகப் பிரிக்க, வாகனத்தின் பேட்டரியிலிருந்து கிடைக்கும் மின்சாரம் அவசியமாகிறது.
HHO kit டிலிருந்து உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் பின்னர் எரிப்பு திறன் கூட்டவும் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தவும், காற்பறேட்டார் வழியாக வாகனத்தின் காற்றோட்டத்தில் எஞ்சினுக்குள் செலுத்தப்படுகிறது. ஒரு நிலையான இயந்திரத்தில், எரிப்பு சுழற்சி மிக வேகமாக இருக்கும். உதாரணம்: 0.007 வினாடிகளில் ஒரு எரிப்பு என்ற விகிதத்தில் இருக்கும்.
பெரும்பாலான எரிபொருள் மூலக்கூறுகள் இந்த மிகக் குறைந்த நேரத்தில் முழுமையாக எரிக்க முடியாத அளவுக்கு உள்ளது. வாகனத்தின் (SPARK PLUG) தீப்பொறி-பிளக் எரிபொருளின் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே பற்றவைக்கிறது என்ற உண்மையால், இந்த நிலை ஏற்படுகிறது.
எஞ்சினுக்குள் உருவாக்கப்படும் நெருப்பானது இயந்திரத்தின் எரிப்பு அறை வழியாக பரவும்போது அந்த எரிபொருளின் மூலக்கூறில் ஒரு பகுதி மட்டும் பற்றவைக்கபட்டு, பின் குறிப்பிட்ட 0.007 வினாடிக்குள் மீதமுள்ள எரிபொருள் ஒவ்வொரு மூலகூராக தொடர்ந்து தனைத்தானே பற்றவைத்துகொள்ள வேண்டும். ஆனால், அதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை.
ஹைட்ரஜன் எரிப்பு அறை வழியாக சென்று எரியும்போது, பெட்ரோல் பற்றிகொள்ளும் திறனை விட 10 மடங்கு வேகமாக பற்றுகிறது. மேலும், ஹைட்ரஜன் மூலக்கூறுகள், எரிபொருள் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள இடத்தை நிரப்புகிறது மற்றும் அவற்றை ஒன்றாகவும் நெருக்கமாகவும் உருவாக்குகிறது. அதனால், பற்றும் திறன் வேகமடைகிறது. எனவே, 100% வீத எரிபொருளும் முழுமையாக எரிந்து, இதன் விளைவாக ஒரு தூய்மையான, எரிப்பு நடைபெற்று இயந்திரத்திலிருந்து வெளியேறும் காற்று மாசை உண்டாக்கும் CO கார்பன் மோனாக்சைடு வாயு குறைகிறது, மேலும், இயந்தித்துகுள்ளே படியகூடிய C கார்பனும் குறைவதால், இயந்திரத்தின் ஆயிட்காலம் நீடிக்கிறது.
இந்த உண்மைகள், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறியப்படுகிறது. சொசைட்டி ஆஃப் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் (SAE) வெளியிட்ட பல ஆவணங்களால் இந்தக் கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உட்புற எரிப்பு இயந்திரங்களில் எரிபொருளுடன் ஹைட்ரஜனை சேர்த்து எரிப்பதால், கிடைக்கும் பலன்கள் பற்றிய நாசாவின் சோதனைகளின் முடிவுகளை காண்க:

அதிக அளவில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்து, ஒரு வாகனத்தை முழுவதுமாக ஹைட்ரஜன் உதவிகொண்டு இயக்க முடியுமா?
தற்போது, ஹைட்ரஜனில் மட்டும் இயங்கும் கார்கள் உருவாகபட்டுள்ளன, அவை ஹைட்ரஜனை முதன்மை எரிபொருளாகப் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் முன்கூட்டியே உற்பத்தி செய்து. ஒவ்வொரு சாதாரண காருக்கும் பெட்ரோல் டேங்க் தேவைப்படுவது போல, வாகனத்தில் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு ஹைட்ரஜன் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தபடுகிறது.
இந்த வகையான கார்கள் FUELCELL தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுகிறது. அதற்கும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளுடன் ஹைரஜன் சேர்த்து இயக்கம் தொழில் நுட்பத்தில்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.
பெட்ரோல் அல்லது டீசல் எரிபொருளுடன் சேர்ந்து ஹைட்ரஜனையும் எரிப்பதானால், ஒரு எஞ்சினுக்கு தேவையான ஹைட்ரஜன் அளவு அந்த இயந்திரத்தின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு 1000 CC எஞ்சினுக்கு, ஒரு நிமிடத்திற்கு 150 மில்லி HHO சிறந்தது. சரியான அளவில் (HHO) ஹைட்ராக்சியை சேர்ப்பது இயந்திரத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது, ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக ஹைட்ராக்சியை சேர்த்தால் , அந்த எஞ்சினின் செயல்திறனைக் குறைக்கிறது என்பதை சோதனைகள் நிரூபிக்கின்றன.
Capacity | HHO | Volts | Amps | Watts |
---|---|---|---|---|
100 cc | 16 ml | 12 | .250 | 3.00 |
150 cc | 24 ml | 12 | .375 | 4.50 |
200 cc | 32 ml | 12 | .500 | 6.00 |
250 cc | 40 ml | 12 | .625 | 7.50 |
350 cc | 56 ml | 12 | .875 | 10.50 |
500 cc | 80 ml | 12 | 1.25 | 15.00 |
800 cc | 128 ml | 12 | 2.00 | 24.00 |
1000 cc | 160 ml | 12 | 2.50 | 30.00 |
1500 cc | 240 ml | 12 | 3.75 | 45.00 |
2000 cc | 320 ml | 12 | 5.00 | 60.00 |
2500 cc | 400 ml | 12 | 6.25 | 75.00 |
3000 cc | 480 ml | 12 | 7.50 | 90.00 |
தண்ணீரிலிருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை பிரித்தெடுப்பதை 100 வருடங்களுக்கு முன்பு மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானியால் கண்டுப் பிடிக்கப்பட்டது. அந்த கண்டுபிடிப்பின் பரிணாமம்தான் இப்போதைய HHO DRYCELL மற்றும் WETCELL மூலமாக ஹைட்ராக்சி எனப்படும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, அதை இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப வாகனக்ளில் பயன் படுத்த முயல்வது. இந்த முயற்சியை பல நாடுகளில் பல ஆயிரம் பேர்கள் செய்து வருகிறார்கள்.
ஒரு சரியான DRYCELL ஹைட்ராக்சி பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்க, 12 வோல்ட் மின்சாரம் பயன்படுத்துவதானால், அதில் குறைந்தது 7 துருப்பிடிக்காத ஸ்டீல் ப்ளேட் பயன் படுத்த வேண்டும், 7 ப்ளேட் பயன்படுத்தினால்தான் அதில், 6 அறைகளை உண்டாக்க முடியும், அந்த 6 அறைகள்தான், நாம் கொடுக்கும் மின்சாரத்தைக்கொண்டு Electrolysis எனப்படும் மின்னாற்பகுப்பு முறையில் தண்ணீரில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை பிரிக்க முடியும்.
அந்த HHO சாதனத்தில் இருக்கும் அறைகளின் அளவுகளை பொருத்தும், நாம் செலுத்தும் மின்சாரத்தை பொருத்தும், தண்ணீரிலிருந்து பிரிக்கப்படும் ஹைட்ராக்சி யின் அளவு மாறுபடும்.
உதாரணமாக: 15cm x 15cm அளவுகள் கொண்ட ஒரு ஸ்டீல் ப்ளேட்டின் பரப்பு 225 cm2 எனப்படும். 1cm ஒரு சதுர சென்டிமீட்டர் அளவில் ௦.084 Amp மின்சாரம் மட்டுமே பயன்படுத்தும் அளவில் HHO kit கட்டுமானம் இருக்க வேண்டும்.
இந்த கட்டுரை இன்னும் முடிவு பெறவில்லை. தொடரும்…

🔊 Listen to this கட்டுரை MMY HAMID (Scientist) இந்த கட்டுரையில் ஹைட்ரஜன் பற்றிய நன்மைகளையும் உண்மைகளையும் தெரிந்துகொள்வதற்கு முன் அதில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும் பொய் பிரச்சாரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. ஹைட்ரஜனைப் பற்றிய மிகப்பெரிய தவறான கருத்து என்னவென்றால், நாம் தண்ணீரில் இருந்து எரிபொருளை உருவாக்குகிறோம். இது முற்றிலும் தவறானது. இது உண்மையாக இருந்தால், இயற்பியல் விதிகளை மீறுகிறது. எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் அளவுக்கு வேகமாக ஹைட்ரஜனை உற்பத்தி…