மொத்த பணத்தையும் கட்டினால்தான் பள்ளிகளில் சான்றிதழ் கொடுக்கமுடியும் என்று சொன்னால் என்ன செய்வது?
-
by admin.service-public.in
- 50
குறிப்புகள் / Points
- பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் சேரும்போது, நம்முடைய ஏற்கனேவே படித்த சான்றிதழ்களை கொடுத்துவிட்டுதான் சேர்கிறோம்.
- மேற்படி பள்ளி அல்லது கல்லூரிகளில் படிப்பை முடித்துவிட்டோ அல்லது பாதியில் நிறுத்திவிட்டோ வெளியேறும்போது, கட்டண பாக்கி இருந்தால், அதை முழுவதும் கட்டிவிட்டுத்தான், சான்றிதழ்களை திரும்ப தர முடியும் என்று நிர்வாகங்கள் சொல்கின்றன. இது சட்டத்திற்கு புறம்பானது.
- அப்படி கல்வி நிறுவனங்கள் மறுத்தால், உடனடியாக காவல் நிலையத்தில் IPC 406 படி புகார் அளிக்கலாம். உடனே, காவல் நிலையம் நம்முடைய சான்றிதழ்களை நமக்கு பெற்றுத்தரவேண்டும், அல்லது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது வழக்கு தொடர வேண்டும்.
- இந்திய தண்டனை சட்டம் பிரிவு 406 என்ன சொல்கிறது?
- விளக்கம்: நம்பிக்கை மோசம் செய்த குற்றத்தை யார் புரிந்தாலும், அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
- நாம் கல்வி நிறுவனகளுக்கு, நமது சான்றிதழ்களை ஒப்படைப்பது என்பது, கல்வி சம்பந்தமாகதானே தவிர, கட்டணத்திற்கு அடமானமாக இல்லை. எனவேதான், இங்கு அது நம்பிக்கை மோசடி என்ற சட்டத்திற்குள் வருகிறது.
- இது சம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றம், Criminal OP 9920/2012 வழங்கிய தீர்ப்பில், தெளிவாக கூறப்பட்டுள்ளது.
- தீர்ப்பு நகல்

🔊 Listen to this குறிப்புகள் / Points பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் சேரும்போது, நம்முடைய ஏற்கனேவே படித்த சான்றிதழ்களை கொடுத்துவிட்டுதான் சேர்கிறோம். மேற்படி பள்ளி அல்லது கல்லூரிகளில் படிப்பை முடித்துவிட்டோ அல்லது பாதியில் நிறுத்திவிட்டோ வெளியேறும்போது, கட்டண பாக்கி இருந்தால், அதை முழுவதும் கட்டிவிட்டுத்தான், சான்றிதழ்களை திரும்ப தர முடியும் என்று நிர்வாகங்கள் சொல்கின்றன. இது சட்டத்திற்கு புறம்பானது. அப்படி கல்வி நிறுவனங்கள் மறுத்தால், உடனடியாக…