அனுபவ பாத்தியம் சட்டம் என்றால் என்ன? | Adverse Possession
-
by admin.service-public.in
- 370
எதிரிடை அனுபவ பாத்தியதை என்றால் என்ன? / Meaning of Adverse Possession?
- அனுபவ பாத்தியதை ஒரு சொத்துக்கு எப்போது வருகிறது?
- எவ்வளவு காலம் ஒரு சொத்தில் பிரவேசம் செய்தால் அனுபவ பாத்தியதை உரிமை வரும்?
- எந்த வகையான சொத்தில் அனுபவம் செய்தால், அனுபவ பாத்தியதை வரும்?
- ஒரு சொத்தில், அந்த சொத்தின் சொந்தகாரர் அனுமதி இல்லாமல், வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்து தன் புதிய அனுபவத்தை நுழைக்கிறார். ஆனால், அந்த சொத்தின் சொந்தக்காரர், 12 பனிரெண்டு வருட காலத்திற்கு, ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக எவ்வித காவல்துறை புகாரோ, அல்லது வழக்கறிஞர் அறிவிப்போ, நீதிமன்ற அணுகுமுறையோ செய்யாத பட்சத்தில், ஆக்கிரமிப்பு செய்த மேற்படி நபருக்கு சட்டப்படி “அனுபவ பாத்தியதை வந்துவிடுகிறது.”
- எனவே, அனுபவ பாத்தியதை பெற்ற நபர் மேற்படி சொத்துக்கு சொந்தகாரர் ஆகிறார். காரணம்,
- Limitation Act Sec 27 படி, குறிப்பிட்ட ஒரு கால கெடுவிற்குள், ஆக்கிரமிப்பு செய்த ஒரு சொத்தின் மீது, சொத்துக்கு சொந்தகாரர், ஏதாவதொரு சட்ட வில்லங்கம் (புகார், சட்ட அறிவிப்பு, நீதிமன்ற முறையீடு) செய்யாவிட்டால். அதன் பிறகு அந்த சொத்தை மீட்க வழக்கு தொடர முடியாது என்று சொல்கிறது.
- Limitation Act Schedule-1 Article-65 படி குறிப்பிட்ட காலம் என்பதை 12 பனிரெண்டு வருடம் என்று வரையறுத்து சொல்கிறது.
- Limitation Act Article-112 படி, அரசாங்க சொத்தில் ஒரு தனி நபர் நுழைந்து, தன்னுடைய அனுபவத்தை 30 முப்பது வருடங்கள் எவ்வித வில்லங்கம் (புகார், சட்ட அறிவிப்பு, நீதிமன்ற தலையீடு) போன்ற எதுவும் இல்லாமல் இருந்துவிட்டால், லதுவும், அந்த ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்த நபருக்கே சொந்தமாகவும், உரிமையுடையதாகவும் ஆகிவிடுகிறது.
- ஒரு சொத்தில் ஒருவர்,
- 1 வாடகை தாரரகவோ,
- குத்தைகை தாரரகவோ,
- இலவசமாக தாங்கிக்கொள்ள அனுமத்திக்கபட்டவராகவோ,
- வேலைக்கு செய்வதற்காக அந்த சொத்தில் அனுமத்திக்கபட்டவராகவோ, மூதாதைகளின் சொத்தில் பாகப்பிரிவினை செய்யாமல் அனோவித்தவராகவோ, இருத்தல் கூடாது.
- அப்படி இருந்தால், சொத்தை அனுபவித்தவர், எவ்வகையிலும் அனுபவ பாத்தியதை உரிமை கோர முடியாது.
- தனியார் சொத்தாக இருந்தால், 12 வருடங்களும், அரசு சொத்தாக இருந்தால் 30 வருடங்களும், தொடர்ச்சியான அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே, அனுபவ பாத்தியதை உரிமை கோரமுடியும்.
- மேலும்., ஆரம்பத்தில் சில வருடங்கள் அனுபவித்துவிட்டு, பிறகு அந்த சொத்தை விட்டு வெளியேறி, மீண்டும் சில காலம் கழித்து அதே சொத்தில், அனுவத்தை உள்ளே நுழைந்து அனுபவத்தை மீண்டும் தொடர்ந்து, மொத்த வருடங்களை கணக்கிட்டு, அனுபவ பாத்தியை உரிமை கோர முடியாது.
தீர்ப்பு தமிழ் பிரதி – உரிமையியல் மேல்முறையீடு 7764 / 2014 https://main.sci.gov.in/supremecourt_vernacular/2008/4680/4680_2008_33_1501_23189_Judgement_31-Jul-2020_TAM.pdf
தீர்ப்பு ஆங்கில பிரதி – Civil Appeal 7764 / 2014
https://main.sci.gov.in/supremecourt/2008/4680/4680_2008_4_1501_15805_Judgement_07-Aug-2019.pdf
CIVIL APPEAL NOS.1701-1702/2022 [@ SLP [C] NOS.3800-3801/2022] [@ Diary No(s). 35380/2019]
https://drive.google.com/file/d/1GJ1zlYRTKRZ7hDKP_GeOTTOuWCkghiWV/view

🔊 Listen to this எதிரிடை அனுபவ பாத்தியதை என்றால் என்ன? / Meaning of Adverse Possession? அனுபவ பாத்தியதை ஒரு சொத்துக்கு எப்போது வருகிறது? எவ்வளவு காலம் ஒரு சொத்தில் பிரவேசம் செய்தால் அனுபவ பாத்தியதை உரிமை வரும்? எந்த வகையான சொத்தில் அனுபவம் செய்தால், அனுபவ பாத்தியதை வரும்? ஒரு சொத்தில், அந்த சொத்தின் சொந்தகாரர் அனுமதி இல்லாமல், வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்து தன் புதிய…