A-Z அட்டவணை / Index

A

B

C

D

F

H

I

L

P

R

S

W

#

False Complaint or FIR | பொய் வழக்கு போட்டால் சந்தோஷப்படுங்கள்

பொய் வழக்கு போட்டால் சந்தோஷப்படுங்கள் மோகன் கோயம்புத்தூர் நண்பருக்கு பதில்.9841786197

Mother Documents தாய் பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்?

தாய்பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்?

தற்பொழுது நீங்கள் வாங்கப் போகும் சொத்திற்கு தாய்பத்திரங்கள் அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ஒரு தாய் பத்திரம் 2010-ல் உருவாக்கப்பட்டது. அதனுடைய தாய் பத்திரம் 2003-ல் உருவாக்கப்பட்டது, அதனுடைய தாய் பத்திரம் 1995-ல் உருவாக்கப்பட்டது. இப்படி தாய் பத்திரங்கள் ஆண்டுகள் பின்னோக்கிப் போய் கொண்டே இருக்கும்.

இப்படி ஆண்டுகள் பின்னோக்கி போய்க் கொண்டே இருக்கின்ற தாய் பத்திரங்களுக்குப் பின்னோக்கிய ஏதாவது ஒரு ஆண்டில் முற்றுப் புள்ளி இருக்கும் அல்லவா அதனைப் பற்றி பார்ப்போம்.

1800க்கு முன்பு இந்தியாவில் யாருக்குமே இந்த நிலம் எனக்கு உரிமையானது என்று பட்டாவும் கிடையாது, பத்திரமும் குடியானவர்களுக்கு கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1800-களுக்கு முன்பு ஜமீன்கள், ஜாகீர்கள், சௌத்திரிகள், குரோரிகள் போன்றவர்களுக்கு செப்பேடுகளாக, ஓலைச்சுவடிகளாக, தங்கபட்டயங்களாக கூட நிலத்தின் மீதான மேல் வாரி உரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது, ஆனால் அதற்கெல்லாம் இப்பொழுது இருப்பது போல முத்திரைத் தாள் பத்திரங்க்கள் கிடையாது.

1800-களுக்கு முன்னாள் அரசு நிர்வாகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கின்ற வருவாய் துறை ஊழியர்களான கர்ணம், ஜேம்ஸ்பாண்டு, மஜும்தார்,பவுஸ்தார் போன்றவர்களுக்கு சம்மளத்திற்கு பதிலாக இந்தகிராமங்களின் மேல்வாரி உரிமையை இனாமாக அரசு கொடுத்திருக்கும் அந்த இனாம் உரிமைக்கானபட்டயங்கள் ஓலைச்சுவடிகள் மூலமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் இப்பொழுது இருப்பது போல முத்திரைத்தாள் பத்திரங்கள் கிடையாது.

1800 களுக்கு முன்பு சமஸ்கிருத வேதபடிக்கின்ற பிராமணர்களுக்கு ஸ்தோத்திரியம் என்றும், மசூதிகளில் இருக்கின்ற ஹாஜிக்களுக்கும் சில கிராமங்களின் மேல்வாரி உரிமையை இனாமாகபட்டயங்கள் மூலமும் ஓலைச்சுவடிகள் மூலமும் அரசுகொடுத்திருக்கும். அதற்கும் இப்பொழுது இருப்பது போல முத்திரைத்தாள் பத்திரங்கள் கிடையாது.
1800-களுக்கு முன்பு கிராமத்தில் வேலை செய்கின்ற வெட்டியான்கள், தச்சர்கள், நாவிதர்கள், கருமான்கள், கிராமகோவில் பூசாரிகள் ஆகியோர்களுக்கு சம்மளத்திற்கு பதிலாக மேல்வாரி உரிமை உள்ள சிறு அளவிலான நிலங்கள் அந்தந்த கிராமத்திற்குள்ளேயே இனாமாக கொடுக்கப்பட்டது. அதனுடைய விவரங்கள் எல்லாம் 1800-களுக்கு முன்னாள் பராமரிக்கப்பட்ட கர்ணம் பதிவேடுகளில் இருக்கிறது.

1800-க்கு பிறகு தான் காரன் வாலீஸ் பிரபுகாலத்திற்கு பிறகு சாஸ்வத செட்டில்மெண்ட் (PERMANENT SETTLEMENT)-ற்குபிறகு அனைத்து குடியானவர்களுக்கும் இந்த நிலம் உனக்கு தான் என்ற நிரந்தர பட்டா வழங்கப்பட்டது. ஆக 1800-க்கு முன்பு வரை எந்த ஒரு குடியானவருக்கும் இந்த நிலம்உனக்கு தான் என்ற பட்டாவே இல்லாத போது செப்பேடுகளோ, ஓலைச்சுவடிகளோ, பட்டயங்களோ இருப்பதற்கு வாய்ப்பில்லை.அதே போல முத்திரைத் தாள் பதித்த பத்திரங்களும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

1800-க்கு பிறகு தான் குடியானவர்களுக்கு பட்டா கொடுக்கபட்டதால் அவர்கள் அதனை பிற குடியானவர்களுக்கு கிரையம் கொடுப்பதற்கும் தானம் அளிப்பதற்கும், பாகப் பிரிவினை செய்வதற்கும், இன்னும் பிறவகையான பத்திரங்களை போடுவதற்கும் அவசியம் ஏற்பட்டது.

அதனால் 1840-களில் கல்கத்தாவில் முதன் முறையாக பத்திரப்பதிவு உருவாக்கப்பட்டது. நம் தமிழ்நாட்டில் 1865-களில் பத்திரப்பதிவு உருவாக்கப்பட்டது.
ஆக தமிழ்நாட்டில் குடியானவர்களுக்கு பழைய பத்திரம் வைத்திருந்தால் கண்டிப்பாக 1865-க்கு முன்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவே இன்று இருக்கும் எல்லா சொத்துக்களுக்கும் தாய் பத்திரங்கள் பெரும்பாலும் பின்னோக்கி சென்றால் 1865-யோடு முடிந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சரி 1865-க்கு முன்னாள் சில பத்திரங்கள் இருக்கிறது என்றால் நன்கு ஆராய்ந்து பார்த்தால் அது குடியானவர்களுடைய பத்திரங்களாக இருக்காது, ஒரு ஜமீந்தாரரோ அல்லது ஒரு இனாம் தாரரின் மேல்வாரி உரிமை சம்மந்தப்பட்ட பத்திரங்களாக இருக்கும். அந்த பத்திரங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் பதிந்தவைகளாக இருக்கும், ஏனென்றால் அப்பொழுது சார்பதிவகம் என்று ஒன்று இல்லவே இல்லை.

1793 முதல் 1865 வரை நீதிமன்றத்தில் இருக்கின்ற திவான் இ அதாலத் என்ற நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் தான் மேற்படி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது. ஆக சார்பதிவகத்திற்கு முன்பு நீதிமன்றம் தான் பதிவு அலுவலகமாக இருந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக 1865-க்கு பிறகு தான் குடியானவர்களூடைய நிலங்களுக்கான பத்திரங்கள் பதியப்பட்டு இருக்கிறது. 1865-க்கு முன்னாடி இருக்கின்ற பத்திரங்கள் ஜமின் மற்றும் இனாம் தாரருடைய மேல்வாரி உரிமை சம்மந்தப்பட்ட பத்திரங்கள் அவை நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. எனவே நீதி மன்றத்தில் பதியப்பட்ட பத்திரங்கள் எல்லாம் நீதிமன்ற ஆவண காப்பகங்களில் தேடிப்பார்த்து இருக்கின்ற பத்திரங்களின் மெய்த் தன்மையை உறுதிசெய்து கொள்ளலாம்.

1865-க்கு பிறகு ஆன பத்திரங்களை எல்லாம் பத்திரபதிவுத்துறையில் உறுதிசெய்து கொள்ளலாம். இறுதியாக இப்பொழுது இருக்கின்ற பத்திரங்களுக்கெல்லாம் முதல் தாய்பத்திரம் தமிழ்நாட்டில் 1865-ம்ஆண்டு வரை தான் இருக்கும் என்பதை மனதில் வைத்திருங்கள்

அசல் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்தால் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும், உயர் நீதிமன்றம் உத்தரவு.

வணக்கம் நண்பர்களே…!

அசல் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்தால் அதற்கன ஒப்புகைச் சீட்டு வழங்கபடவேண்டும், உயர் நீதிமன்றம் உத்தரவு.

உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1YVJrwM2w43XMXBgfOPyQM7StqEgILmmm/view?usp=drivesdk

நன்றி…!

PSO Police Standing Order காவல் நிலை ஆணைகள்

காவல் நிலை ஆணைகள்
‬1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume) உள்ளது?

  • மூன்று தொகுதிகளாக.

2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைகள் உள்ளது?

  • 856 ஆணைகள்.

3.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காலை ஆஜர் பட்டியலின்போது, வியாழக்கிழமைகளில் எந்தப் பணி ஆஜராகும் காவலர்களுக்குத் தரப்படும்?

  • ஆயுதங்களை சுத்தம் செய்தல்.

4.காவல் நிலையங்களில் ரொக்கப் புத்தகம் பராமரிக்கவேண்டும் என்று கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?

  • காவல் நிலை ஆணை எண் 262

5.காவல் ஆய்வாளர் பதவிக்குக் கீழ் உள்ள அலுவலர்களது, பிழை செய்தவர் குறிப்புத்தாள் (defaulter sheets) யாருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்?

  • காவல் நிலைய பொறுப்பு அதிகாரி

6. காவல் நிலை ஆணை எண் 295பிரகாரம், அனைத்துத் தலைமைக் காவலர்களுக்கும், படிவம் எண் 423ல் கீழ்க்கண்ட ஆவணம் வழங்கப்படுகிறது.

  • மருத்துவ சரித்திர ஏடு.(medical history sheet)

7. காவல் நிலை ஆணை எண் 562-ன்படி, ஒரு காவல் நிலைய பொறுப்பு அலுவலர் குற்றவிசாரணை முறை சட்டம் (சுருக்கமாக கு.வி.மு.ச.) 157(1)(ஆ) பிரிவின்படி கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் விசாரணையை மறுக்கும் விருப்புரிமை உள்ளது.

  • பத்து ரூபாய்க்கு மேற்படாத திருட்டு வழக்கு சம்பந்தமாக.

8. எந்த காவல் நிலை ஆணை எண், ஒரு விசாரணை அதிகாரியின் விசாரணை,நடுநிலையாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது?

  • காவல் நிலை ஆணை எண் 566

9. வழக்கு நாட்குறிப்பு (case dairy)குறித்து கூறும் காவல் நிலை ஆணை எண் எது?

  • காவல் நிலை ஆணை எண் 567

10. காவல் நிலையங்களில் இருந்து பெறப்படும் வழக்கு, நாட்குறிப்புகளில் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு ஏதாவது குறிப்புரைகள் தர வேண்டும் என்றால், உட்கோட்ட அலுவலர் / உதவி ஆணையாளர் காவல் நிலை ஆணை எண் 570 ன்படி

  • குற்றக் குறிப்புகள் மூலம் தெரிவிப்பார்.

11. காவல் நிலை ஆணை எண் 573-ன்படி சாட்சிகளின் பெயர்களும், முகவரிகளும் அடங்கிய குறிப்பை என்ன செய்ய முடியும்?

  • நீதிமன்ற உபயோகத்துக்கு மட்டுமே தரவேண்டும்.

12.ஒரு இளம் குற்றவாளியை கைது செய்கையில் அல்லது வழக்குத் தொடர்கையில் அத்தகைய இளங் குற்றவாளியின் வயது பற்றிய செய்தியை நீதிமன்றத்திற்குத் தரவேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் எது?

  • காவல் நிலை ஆணை எண் 574

13.ஒரு காவலர் பாதுகாவலில் நடக்கும் தற்கொலை குறித்த அறிக்கை, உடனடியாக காவல்துறை இயக்குனருக்கு அனுப்பப் பட வேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?

  • காவல் நிலை ஆணை எண் 576

14. ஒரு கள்ளப் பணத் தாள் குறித்து ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பொறுப்பு அதிகாரி, ஒரு புகார் தரும் பட்சத்தில், காவல் நிலை ஆணை எண்578 பிரகாரம் ஒரு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி….

-நேரடியாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வேண்டும்.

  1. ஒரு பிடியாணை வேண்டா வழக்கில், காவல் அலுவலர் ஒருவருக்கு தானாகவே ஒருவரைக் கைது செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை எந்தக் காவல் நிலை ஆணையின்படி உண்டு?
  • காவல் நிலை ஆணை எண் 622
  1. காவல் நிலை ஆணை எண் 706 எதைப்பற்றிக் கூறுகிறது?

-பொது நாட்குறிப்பு (general dairy)

  1. P.S.O. 706-ன்படி எந்தவொரு சூழ்நிலையிலும் காவல் நிலைய பொது நாட் குறிப்பில், மணி நேரத்துக்கு மேல் பதிவு இடைவெளிகள் இருக்கக்கூடாது?
  • இரண்டு மணி நேரத்திற்கு மேல்.

18. P.S.O. 710 – ன்படி எந்தத் தரத்திலுள்ள காவலர்கள் நோட்டுப் புத்தகம் பராமரிக்க வேண்டும்?

-காவல் ஆய்வாளர் தொடங்கி காவலர்கள் வரை.

  1. P.S.O. 711 –ன்படி ஒரு காவலர் பணி மாறுதலில் செல்லும்போது அவரது நோட்டுப்புத்தகத்தினை என்ன செய்ய வேண்டும்?

-அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.

  1. P.S.O. 713 –ன்படி ஒரு சிறைக் கைதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டபின், சோதனைப் பதிவேட்டில் எந்தக் கட்டத்தில் அவனுடைய முழு விவரங்களை கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்?
  • மூன்றாவது கட்டத்தில்

21.P.S.O.715-ன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும், நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேடு கீழ்க்கண்ட படிவத்தில் பராமரிக்கப் படவேண்டும்.

-படிவம் எண் 103

  1. P.S.O.715-ன்படி ஒவ்வொரு வட்ட ஆய்வாளரும், தனக்குக் கீழ் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேட்டை, சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றப் பதிவேட்டுடன் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பீடு செய்ய வேண்டும்?

-இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை.

23. தொல்லை வழக்குப் பதிவேடு பராமரித்தல் பற்றிக் கூறும் காவல் நிலை ஆணை எண்…

-716

  1. P.S.O. 717 ல் பராமரிக்கக் கூறப்பட்டுள்ள ஆவணம் எது?

-அலுவல் பட்டியல் (Duty Roaster)

25. P.S.O. 726-ன்படி ஒரு காவலர் பிணி அறிக்கை செய்யும்போது அவரது பிணி அறிக்கை கடவுச் சீட்டுடன் எந்த ஆவணத்தினை தந்து அனுப்ப வேண்டும்?

26.மருத்துவ வரலாற்றுக் குறிப்புப் புத்தகத்தில், சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை, மருத்துவப் பரிசோதனை செய்து குறிப்புப் பதிவு செய்ய வேண்டும்?

-இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை.

  1. P.S.O. 708-ன்படி வட்ட ஆய்வாளர் நிலைய பொறுப்பு அதிகாரிகளிடமிருந்து மாத SHR கிடைக்கப்பெற்றவுடன் கீழ்க்கண்டவாறு செயற்பாடு திறன் மதிப்பிடுவார்….

-சராசரிக்கு மேல் ‘A’ சராசரி -‘B’ சராசரிக்குக் கீழ் – ‘C’

  1. மருத்துவ வரலாற்றுக் குறிப்புகள் எந்தெந்தக் காவல் அதிகாரியால் பராமரிக்கப்பட வேண்டும்?

-தலைமைக் காவலர் முதல் இரண்டாம் நிலைக் காவலர் வரை

29.PSO 730-ன்படி காவல் நிலையத் தலைமை அலுவலர் தன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு உடைச் செல்லு பட்டியலை (Acquittance Roll of clothing) எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை தயார் செய்து அனுப்பவேண்டும்?

-அரையாண்டிற்கு ஒருமுறை (ஜூன் மற்றும் டிசம்பர்)

30.PSO 731 –ன்படி ஒரு காவல் நிலையத்தில் எந்த அளவிலுள்ள அறிவிப்புப் பலகை வைத்திருக்கப்படவேண்டும்?

31.PSO 732-ன்படி ஒரு காவல் நிலையப் பெயர்ப்பலகை (Station Name Boards) எந்த மொழியில் எழுதி வைக்கப்படவேண்டும்?

-தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

32.எந்தக் காவல் நிலை ஆணை எண் படி, அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளுக்கு (notified offenders) காவல் நிலையங்களில் பதிவேடுகள் வைத்து வரப்படவேண்டும்?

-PSO 735

33.சென்னை வழக்குக் குற்றவாளிகளின் கட்டுப்பாடு விதிகள் 1949-ன் 21-வது விதியின் கீழ் அறிக்கைகள் நீக்கப்பெற்ற அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை முடிவுகட்ட காவல் நிலையங்களில் எத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்கவேண்டும்?

-பத்து ஆண்டுகள் வரை

34.PSO 735 –ன்படி இறந்துபோன அறிவிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை யார் ஆணையின்பேரில் அழிக்க வேண்டும்?

-உட்கோட்ட அலுவலரின் உத்தரவின் பேரில்.

35.குற்ற பதிவேடுகளில் பாகம் IV எதைப்பற்றிக் கூறுகிறது?

-கிராம சரித்திரப் பதிவேடுகள் பற்றி

36.கெட்ட நடத்தைக்காரர்களை கண்காணிக்க பராமரிக்கப்படும் சரித்திரப் பதிவேடுகள் பற்றி குற்ற ஆவணம் எந்த பாகம் விளக்குகிறது?

-பாகம் – V

37.தண்டனை பெற்றவர்களது வரலாற்றுக் குறிப்புகள் தானாகவே ஆரம்பித்தல் குறித்து கூறும்PSO எது?

-PSO 777

38.இந்திய ஆயுதச் சட்டம் & வெடி பொருட்கள் சட்டம் பிரிவு – 22-ன் கீழ் சோதனை நடத்த அதிகாரமுள்ள காவலர்கள்

-உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அலுவலர்கள்.

  1. இந்திய ஆயுதச் சட்டம் 1959-ன்படி மாவட்டங்களில் உரிமம் வழங்கும் அதிகாரம் உள்ளவர்

-மாவட்ட ஆட்சியர்

40.PSO 321-ன்படி துப்பாக்கி உரிமங்களை ஒரு உதவி ஆய்வாளர் எவ்வெப்பொழுது தணிக்கை செய்ய வேண்டும்?

-அரையாண்டுக்கு ஒருமுறை

41.தமிழ் நாடு காவல் நிலை ஆணைகள் திருத்தி அமைத்து வெளியிடப்பட்ட ஆண்டு…

  • 1999

42.காவல் நிலை ஆணைகளை இயற்ற காவல் துறை இயக்குனருக்கு அதிகாரமளிக்கும் சட்டப்பிரிவு

  • பிரிவு 9 தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம் 1859

43.காவல் நிலை ஆணைகள் தொகுதி III-ல் அடங்கியுள்ள விபரங்கள்…

-படிவங்கள்

44.மாநில அளவிலான உயர் காவல் அலுவலர்களின் அமைப்பு பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை

  • PSO 1

45.காவல் துறையினருக்கு அளிக்கப்படும் வெகுமதிகளுக்கான ஒப்பளிப்புத் தொகையினை விளக்கும் காவல் நிலை ஆணை

  • PSO 46
  1. ஒரு குழுவினருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறைத் தலைவர் அளிக்கக் கூடிய பண வெகுமதிக்கான உச்ச வரம்பு
  • ரூபாய் பத்தாயிரம்
  1. காவல் நிலை ஆணை எண் 51 விளக்குவது
  • முப்படையின் விட்டோடிகளைக் கைது செய்ததற்காக வெகுமதிகள்

48.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அளிக்கப்படும் வெகுமதிகள் பற்றிய விபரங்களை வெளியீடு செய்வது

  • வாராந்திர குற்ற மற்றும் சம்பவத் தாள்

49.தனி நபர்களுக்கு வெகுமதி அளிக்க வழி வகுக்கும் காவல் நிலை ஆணை எண்

-PSO 55

50.PSO 56 விளக்குவது

  1. A என்பவரின் மரணம் நஞ்சினால் விளைவிக்கப் பட்டதா என்கிற கேள்வியில் அவர் இறந்திருப்பது எந்த நஞ்சினால் என்று யூகிக்கப்படுகிறதோ அந்த நஞ்சினால் உண்டாக்கப்படும் அறிகுறிகள் பற்றி வல்லுனர்கள் கூறும் கருத்துக்கள் இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவின்படி தொடர்புடையதாகிறது? (Expert’s Opinion)
  • இ.சா.ச. பிரிவு 45
  1. Dactylo graphy என்பது எதனைக் குறிக்கிறது?

-கைரேகை

  1. மரபணு சோதனை எதற்கெல்லாம் பயன்படும்?
  • தந்தை வழி மரபு கண்டறிய, மனிதனை இன்னாரென அடையாளம் காண்பிப்பதற்கு.
  1. Digital Signature http://wordinfo.info/unit/3673/ip:1/il:D (இலக்க முறை குறியிட்டுக் கையெழுத்து) குறித்து கருத்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

-பிரிவு 47 (A)

  1. குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் தீய குணநலன்கள் வழக்கிற்கு தொடர்பற்றது என்று கூறும் பிரிவு யாது?

-பிரிவு 54

56.நீதிமன்றம் நீதி முறையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருண்மைகளின் பட்டியல், இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

  • பிரிவு 57
  1. IEA (Indian evidence act) sec 60-ன் கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத சாட்சியம் யாது?
  • செவிவழி சாட்சியம்
  1. செவிவழி சாட்சியம் தொடர்பற்றது என்ற விதியின் விதிவிலக்கு எது?

-ஒன்றிய செயல் கோட்பாடு மற்றும் மரண வாக்குமூலம்.

  1. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கங்களை தலை நிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம் எனக் கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 61

  1. சார்நிலை சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலைகளை விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 65.

  1. எது தனியார் ஆவணமாகும்?

-கிரைய ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், பாகப்பிரிவினை பத்திரம் ஆகியவை

  1. எவை பொது ஆவணம்?

-சட்டமன்றத்துறை பதிவேடு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்

  1. ஒரு ஆவணத்தை தொல் ஆவணம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்?

-முப்பது ஆண்டுகள்

64.ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்க்கவில்லை என்று வாதிட்டார். குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்த்ததாக வாதிட்டார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரைச் சேர்ந்தது?

-உரிமையாளர்.

  1. B யின் மரண வாக்குமூலத்தை மெய்ப்பிக்க Aவிரும்புகிறார். இந்து அதற்குத் தொடர்புடைய பொருண்மையான B யின் மரணத்தை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு A யை சேர்ந்ததாகும் என்று சொல்லுகின்ற பிரிவு யாது?

-IEA sec 104

66.கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட Aஎன்பவர் அது ஒரு விபத்து என்று கூறி தண்டனையில் இருந்து விலக்குக் கேட்கிறார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரை சேர்ந்தது?

  • குற்றம் சாட்டப்பட்டவர் A யை சார்ந்தது.

67.வரதட்சணை மரணம் தொடர்பான அனுமானம் குறித்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் கூறப்படுகிறது?

-பிரிவு 113 –B

68.இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 113-A இந்திய தண்டனை சட்டத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?

-இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A

  1. வன்புணர்ச்சி குற்றம் குறித்து அனுமானம் பற்றி விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 114-A IEA

70.குழந்தை சாட்சியங்கள் குறித்து கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 118 IEA

71.IEA sec 119 எதைப் பற்றி விளக்குகிறது?

_ ஊமை சாட்சியம்

72.ஒரு கணவன், தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் முன்னிலையில் குற்ற ஏற்பினை அளித்தார். இதில் யார் யார் அதனை மெய்ப்பிக்கலாம்?

-உறவினர்கள் மட்டும்

73.A எனும் கட்சிக்காரர் B எனும் தனது வழக்கறிஞரிடம் பொய் ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தி சொத்தின் அனுபவத்தைப் பெற விரும்புகிறேன். எனவே அந்த ஆவணத்தின் மீது வழக்கிட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இது இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவோடு சம்மந்தப்பட்டிருக்கிறது?

-பிரிவு 126 ன் கீழ் மெய்ப்பிக்கலாம்.

  1. உடன் குற்றவாளியின் சாட்சியம் தகுதியான சாட்சியே எனக் கூறும் பிரிவு யாது?

_பிரிவு 133 IEA

75.ஒரு சாட்சி எதிர்த்தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணையாகும்?

_குறுக்கு விசாரணை

76.ஒரு சாட்சி குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவரை அழைத்த தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணை ஆகும்?

-மறு விசாரணை

  1. விடையமை வினாக்கள் (leading questions) எந்த விசாரணையின்போது கேட்கக் கூடாது?

-முதல் விசாரணை

  1. பிறழ் சாட்சி (hostile witness) பற்றி கூறுகின்ற பிரிவு யாது?

_ பிரிவு 154 IEA

79.சாட்சியின் நாணயத்தைத் தாக்குதல் என்பது எந்தப் பிரிவில் விளக்கப்படுகின்றது?

-பிரிவு 155 IEA

80.நினைவைப் புதுப்பித்தல் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?

  • பிரிவு 159 IEA

‬: இந்திய தண்டனை சட்டம்

81.இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தி ஒரு குற்றத்தை செய்தால் அது எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 120 ஆ

82.நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்மந்தமான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?

-12 th chapter

83.பொதுமக்கள் ஒன்று கூடி குற்றம் செய்ய ஒருவன் உடந்தையாய் இருந்து அதனால் பத்து பேர்களுக்கு மேற்பட்டவர்களால் செய்யப்படும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பது பற்றி எந்த சட்டப்பிரிவில் விளக்கப்பட்டிருக்கிறது?

-பிரிவு 117 இதச

  1. ஒரு சொத்தை பொறுத்த தற்காப்பு உரிமை, மரணத்ஹ்டை விளைவிக்கும் அளவிற்கு எப்பொழுது நீடிக்கும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 103

85.அரசிற்கு எதிரான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?

-அத்தியாயம் ஆறு

86.ஒருவர் இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்திச் சென்று பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கிறார், அதை வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்குமெனில் இந்த செய்கைக்கு மேற்படி நபருக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

-ஆயுள்தண்டனை மற்றும் அபராதம்

87.மகேஷ் என்பவர் ராம் குமாரை ஒரு வீட்டில் சென்று கொள்ளையடித்து விட்டு வர கையில் ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கிறார். ரமேஷ் அந்த வீட்டில் கொள்ளை அடிக்கும்போது அந்த வீட்டுக் காரரால் தடுக்கப்பட்டு ரமேஷைப் பிடிக்க முயலுகிறார். அப்போது வீட்டுக்காரரை ரமேஷ் கொலை செய்து விடுகிறார். அந்த கொலையின் காரணமாக மகேஷும் கொலைக் குற்றத்திற்கு வகை செய்யப்பட்ட தண்டனைக்கு ஆளாவார் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 111

88.ரமேஷ் என்ற காவல் ஆய்வாளரிடம் சீனிவாசன் என்பவர் தன்னை கோபால் அடித்து விட்டதாக ஒரு புகார் கொடுக்கிறார். அந்த புகாரைப் பெற்ற ரமேஷ் என்ற ஆய்வாளர் கோபால் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்படி ரமேஷ் என்ற ஆய்வாளரின் செய்கை குற்றம் என்று எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 119

89.மேட்டுச்சேரி என்ற கிராமத்தில் முஸ்லிம் மக்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊர்வலம் நடத்துவதாக முடிவு செய்து அந்த ஊர்வலம் நடத்தும்போது அந்த ஊர்வலத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற பிரிவை சேர்ந்தவர்களை ஓர் இடத்தில் கூட வேண்டும் என்று சுப்பிரமணியன் என்பவர் சுவரொட்டி ஓட்டுகிறார். இந்த செய்கைக்காக சுப்பிரமணியன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 117

90.முகுந்தன் என்பவர் ஒரு கும்பலால் தாக்கப்படும்போது, அவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி சுடுகிறார். அதன் விளைவாக அந்தக் கும்பலில் ஒரு குழந்தை துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து விட்டது. முகுந்தன் புரிந்த குற்றம்…இதச பிரிவின் எந்தப் பிரிவின்படி குற்றமாகும்?

-பிரிவு 304 (A) IPC

91.ரமேஷ் என்பவரின் வீட்டில் மகேஷ் என்பவர் புகுந்து திருட முற்படுகிறார், அப்போது ரமேஷ் தனது வீட்டில் திருட முயன்ற மகேஷ் என்பவரை தடுக்கிறார், அப்போது ரமேஷ் என்பவருக்கு தற்காப்பு உரிமை எதுவரையில் நீடித்து இருக்கும்?

–மகேஷ் தப்பி வெளியே ஓடிய வரையில்

92.ஒரு திருவிழாவில் கூடிய ஒரு கூட்டமானது ஒரு வன்முறை செயலில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு அழிம்பு ஏற்படுத்தினால் அது சட்டவிரோதமான கூட்டம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 141 IPC

  1. ஒரு கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு பஸ் மறியலில் ஈடுபடப்போவதாக அந்த கிராமத்தினர் அறிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு கூடுவது சட்டவிரோதமானது என்று காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டபோதும் பஸ் மறியலுக்கு கூடுவது தவறு என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 145 IPC

94.சட்டவிரோதமான கும்பலை கலைந்து செல்ல உத்தரவிட்ட பின்பும் கலைந்து செல்லாமல் கூடியிருக்கும் கும்பலுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்?

-ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

  1. லட்சுமி, அமிர்தம், பவானி, மோகனா ஆகிய நான்குபேரும் இரண்டு குரூப்பாகக் கூடி ஒருவரை ஒருவர் பொது இடத்தில் அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒரு பொது அமைதியை குலைத்தால் அது கீழ்க்கண்ட பிரிவின்படி தண்டனைக்குரியது…

-பிரிவு 160 IPC

  1. லலிதா என்ற பெண் தான் ஒரு மாவட்ட ஆட்சியர் என்று பொய்யாக கூறி சுப்பிரமணி என்ற அப்பாவியிடம் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பியூன் வேலை போட்டுத் தருவதாகக் கூறி சுப்பிரமணியிடம் பணம் வாங்கினால் குற்றம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 170

97.கந்தசாமி தான் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் என்று கூறிக் கொண்டு உதவி ஆய்வாளருக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு ஒரு வாகன தணிக்கை செய்து அபராதம் வசூல் செய்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர் ஆவார்?

-பிரிவு 170 & 171

98.ஏழு நபர்கள் சட்டவிரோதமான கும்பலாக சேர்ந்து தடிக் கம்புகளை கையில் வைத்துக் கொண்டு கலகம் விளைவித்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டனை கொடுக்கலாம்?

-பிரிவு 147 IPC

99.மரணம் அல்லது ஆயுள் சிறைவாசம் விதித்து தண்டிக்கப்படக் கூடிய குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு தண்டனை என்ன விதிக்கலாம்?

-ஏழு ஆண்டுகளுக்கு சிறை மற்றும் அபராதம்.

  1. குற்றமுறு சதி குற்றத்துக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

-ஆறு மாத கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

: குற்ற விசாரணை முறை சட்டம்

101.ஆறு மாத காலம் என்ற சட்ட வரம்பு முறையில் உள்ள வரம்பு கீழ்க்கண்ட தண்டனை சம்மந்தப்பட்ட குற்றத்திற்குப் பொருந்தும்.

(அபராதம் விதிக்கக் கூடிய குற்றங்களுக்கு விசாரணைக்கு ஏற்பதற்குரிய காலவரம்பு குறித்தது_ஆறு மாதங்கள் வரை எந்த குற்றங்களுக்கான விசாரணைக்கு நீதி மன்றம் ஏற்கலாம்? என்கிற கேள்விக்கு இதனையே விடையாகத் தரலாம்? எப்படி இருப்பினும் ஆழ்ந்த படிப்பு மட்டுமே இறுதி வெற்றியை ஈட்ட உதவும் நண்பர்களே! முயன்று படித்தால் வெற்றி உங்களதே!)

-அபராதம் மட்டும்.

102.ஒரு குற்றம் ஒரு வருட காலத்துக்கு மேல் 3 வருட காலத்திற்கு மிகாமல் தண்டனைக்குரியது என்றால் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு

_மூன்று வருடம்

  1. ஒரு மேற்சொன்ன காலவரம்பை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் சட்டப்பிரிவு…

-468 CrPC

104.கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால வரையறை சாதாரணமாக

-குற்றச் செயல் நடந்த நாளில் இருந்து கணக்கிடப்படும்.

  1. மேற்கண்ட கணக்கீட்டினை குறிப்பிடும் பிரிவு?

-469 CrPC

106.ஒரு எதிரியின் மீது உள்ள வழக்கு காலவரம்பிற்கு உட்பட்டபோது அவர் அவ்வழக்கு தொடர்பாக ஏதாவது ஒரு மேல் முறையீடு செய்து அது முறையீட்டு மன்றத்தில் நிலுவையில் இருந்தால் காலவரம்பு முறையீட்டு மனு முடிவுக்கு வரும்வரை நீடிக்கும் என்பது எந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

-470 CrPC

107.மன்னித்து விடுதல் என்பதை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் பிரிவு—

-360 CrPC

108.நீதித்துறை நடுவர் ஒரு வழக்கின் விசாரணையின்போது காவல் துறை அலுவலரின் கைது நடவடிக்கை அடிப்படை இல்லாதது என்று கருதினால் அவர் மீது ரூபாய் ஆயிரத்துக்கு மிகாமல் நஷ்ட ஈடு விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. சரியா?

-சரியானது.

109.ஒரு காவல் துறை அலுவலர் அடிப்படையில்லாமல் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் நீதித்துறை நடுவர் அவர்மீது நஷ்ட ஈடு விதிக்கலாம் என்பதைக் கூறும் சட்டப்பிரிவு எது?

-358 CrPC

110.சமாதானமாகப் போகக்கூடிய நடைமுறை விவரங்களை விளக்கக் கூடிய அட்டவனையை குறிப்பிடும் சட்டப்பிரிவு…

-320 CrPC

111.வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் எதிரி ஆஜராகவில்லை எனில் அதற்காக தாக்கல் செய்யப்படும் மன்னிப்பு மனு கீழ்க்கண்ட பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.

-317 CrPC

112.பொது இடைஞ்சல் நிகழ்வுகள் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்

-மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடுவருக்கும் உள்ளது.

113.நீர் மற்றும் நிலம் சம்மந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் விளைவாக அமைதிக்கு குந்தகம் நேரும் நிலை ஏற்பட்டால் இந்த விவரத்தை காவல் துறை அதிகாரி தனது அறிக்கையின் மூலம் கீழ்க்காணும் அலுவலருக்கு அனுப்பவேண்டும்…

-நிர்வாக நடுவர்

114.சட்டப்பிரிவு 145 ன் கீழ் ஒரு பிரச்சினையை நிர்வாக நடுவர் முடிவு செய்யும்போது அந்த தேதியில் அந்த இடம் யார் அனுபவத்தில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது…

-சரியானது

115.நிலம் மற்றும் நீர் சம்மந்தமாக உபயோக உரிமை குறித்து ஏற்படக் கூடிய பிரச்சினை மற்றும் அதன் விளைவாக உருவாகக்கூடிய அமைதிக்குப் பாதகமான சூழ்நிலையை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து உத்தரவு பிறப்பிக்கும் அலுவலர்

-நிர்வாக நடுவர்

  1. 151 CrPC கைது நடவடிக்கை என்பது

-ஒரு தடுப்பு நடவடிக்கை

117.நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றை CrPC 321ன்படி திரும்பப் பெறக்கூடிய மனுவைத் தாக்கல் செய்யக்கூடிய அதிகாரம்

-அரசு வழக்கறிஞருக்கு உண்டு.

118.மரண தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதிப்படுத்தாமல் செயல்படுத்தலாம் என்பது

-சரியானது

119.மரண தண்டனையில் சம்மந்தப்பட்ட எதிரி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை உயர்நீதி மன்றம் அந்த மரண தண்டனை சம்மந்தமாக அங்கீகாரம் அளிக்க முடியாது என்பது

-சரியானது.

120.ரிவிஷன் என்ற பரிகாரத்தை உயர்நீதி மன்றத்திலும் அமர்வு நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஒருவர் பெறலாம் என்பது

காவல் நிலை ஆணைகள்

  1. இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் இவைகளின் கீழ் காவல் துறையினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை எண் எந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

-பதினெட்டாவது அத்தியாயம்

  1. PSO 310 ல் வெடி கருவிகள் அதன் தொடர்புடைய படைக் கலன்கள் எடுத்துச் செல்பவரை கீழ்க் கண்ட காவல் அதிகாரிகளை இந்திய சட்டபிரிவு 22 ன் கீழ் சோதனை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?

-உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்

123.குற்றத்தை ஒத்துக்கொண்ட சாட்சியின் சிறைக்காப்பு பற்றி (custody of an approver)குறிப்பிடும் காவல் நிலை ஆணை?

-PSO 328

124.ஒரு பெண் கைதியை சாலை வழியாக நடத்தி வழிக்காவல் செய்யும்போது அவர்கள் எவ்வளவு மைல் தூரத்துக்கு மேல் நடத்திக்கொண்டு செல்லக் கூடாது?

-ஒரு மைல்

125.கைதிகளை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளனர்?

-இரண்டு வகைகளாக

  1. CrPC 267 ல் நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது போன்று எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ளது?

-PSO 350

127.ஆயுதம் தரித்து செல்லுதலை முறைப்படுத்தும்PSO?

-PSO 312.

128.PSO 319 ஆயுத சட்ட உரிமை பதிவேட்டை எவ்வளவு கால அளவுக்குள் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?

-காலாண்டுக்கொருமுறை

129.PSO 322 ன்படி மாவட்ட காவல் அலுவலகக் கிடங்கில் உரிமம் ரத்து மற்றும் காலாவதியான ஆயுதங்களை எவ்வளவு கால அளவு வரை வைத்துக் கொள்ளலாம்?

-ஒரு வருடம் வரை

130.காப்புகளைப் பற்றிய பொதுக் கட்டளைகளைப் பற்றிக் கூறும் கா.நி.ஆணை?

-326

131.காப்புப் பணியின்போது காவல் முறை மாற்றும் புத்தகம் ஒன்றை கீழ்க்கண்ட எந்தப் படிவ எண்ணில் பதிவு செய்ய வேண்டும்?

-படிவ எண் 50

132.PSO 366 கூறுவது?

-முறை காவலர்களை அனுப்புவதற்கான நோக்கங்கள்

  1. நோயுற்ற காவலர்களுக்கு மருத்துவம் செய்வது பற்றிய விதிகள் தமிழ்நாடு மருத்துவ விதி தொகுப்பு பத்தி 163 மற்றும் 317 கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்புள்ள காவல் நிலைய ஆணை எண்

-385

134.PSO 416 கூறுவது …

-தடிப் பயிற்சியும், கலகக் கூட்ட நடவடிக்கைகள்

135.கா.நி.ஆணை 434 ரயில்வே காவல் மேடை பணியாளர்களின் வேலை முறைப் பட்டியல் எந்தப் படிவ எண்ணில் குறித்து வைக்க வேண்டும்?

-இப்படிக்கு தேசிய சட்ட நீதி இயக்கம் 6379434453

Fundamental rights அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் யாது?

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள்

  1. சமத்துவ உரிமை (பிரிவு 14-18)
  2. சுதந்திர உரிமை (பிரிவு 19-22)
  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24)
  4. சமய உரிமை (25-28)
  5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (29-30)
  6. தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25) சமத்துவ உரிமை பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டத்தின் முன்பு சமத்துவத்தையோ சம பாதுகாப்பை அரசு மறுக்கக் கூடாது. பிரிவு 15 – எந்த குடிமகனையும் மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதனையாவது காரணம் காட்டி அவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது. பிரிவு 16 – பொது வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். பிரிவு – 17 தீண்டாமை ஒழிப்பு: தீண்டாதோர் என்று யாரையும் ஒதுக்கி வைத்தல் இச்சட்டத்தின் மூலம் அழிக்கப்படுகிறது. தீண்டாமை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தடுக்கிறது. தீண்டாமையின் மூலம் தகுதியிண்மை கடைப்பிடிக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படும். சுதந்திர உரிமை பிரிவு 19 அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகள்

அ. பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்

ஆ. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம்

இ. குழுக்கள் – சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்

ஈ. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்

உ. நாட்டின் எந்தப்பகுதியிலும் சென்று தங்கி வாழ உரிமை.

ஊ. எந்தத்தொழில், வேலை, வணிகம் மற்றும் வியாபாரம் செய்யும் சுதந்திரம் (மேற்கண்ட சுதந்திர உரிமை சில கட்டுப்பாடுகளைக் கொண்டது அவைகள் பற்றி பிரிவு 19 (2) முதல் (6) வரையிலான பிரிவுகள் விளக்குகின்றன)

பிரிவு 20

அ. ஒரு குற்றமென குற்றம் சாட்டப்பட்ட செயல் செய்யப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தினை மீறிய குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றத்திற்காகவும் ஒரு நபர் தண்டிக்கப்படக்கூடாது.

ஆ. எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒரு முறைக்குமேல் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படக்கூடாது.

இ. எந்த நபரையும் அவருக்கு எதிரான வழக்கில் ஓர் சாட்சியாய் அவரை இருக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.

பிரிவு 21.

எந்த நபரின் வாழ்க்கையையோ அல்லது தனி நபர் சுதந்திரத்தையோ சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர பிற வழிகளில் மீறப் படக் கூடாது.

பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு

அ. கைது மற்றும் தடுப்புக் காவலுக்கான காரணங்களை உடனே தெரிவிக்க வேண்டும். வழக்கறிஞரை கலந்தாலோசிக்க அவருக்கு உரிமை உண்டு.

ஆ. 3 மாதத்திற்குள் அறிவுரைக்கு குழுமத்தின் முன், தடுப்புக் காவலை உறுதிப்படுத்த வேண்டும்.

இ. தடுப்புக் காவலை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உரிமை.

பிரிவு 23 சுரண்டலுக்கு எதிரான உரிமை.

மனித உடல் உறுப்புக்களை வியாபாரம் செய்வதையும், பிச்சை எடுக்க வைப்பதும் கட்டாய வேலை வாங்குவதையும் தண்டிக்கக் தக்க குற்றமாக சட்டம் கூறுகிறது.

பிரிவு 24: 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த நிறுவனத்திலும் அல்லது வேறு தொழிலகம் எதிலும் வேலைக்கு வைக்கக் கூடாது.

25) சொத்துரிமை – கல்வியுரிமை – அடிப்படை உரிமைகள்?

சொத்துரிமை ஓர் அடிப்படை உரிமையாக பிரிவு 19 (1)ல் வைக்கப்பட்டு பின் 44வது சட்டத்தின் கீழ் நீக்கம் செய்யப்பட்டது. பிரிவு 300 இன் கீழ் சொத்துரிமை ஓர் சாதாரண உரிமை என்ற அளவில் தற்பொழுது சட்டத்தால் கூறப்படுகிறது.

கல்வியுரிமை ஓர் அடிப்படை உரிமையாக இருந்தது. பின்னர் அது ஆரம்பக் கல்விக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டது.
இப்படிக்கு

  • தேசிய சட்ட நீதி இயக்கம்

Writ petition means | ரிட் மனு என்றால் என்ன?

அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்

ரிட் மனு என்றால் என்ன

‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!

எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

பொது நலன் பாதிக்கப்படும்போது பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்

  1. உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்டரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம். தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்ப ட்டறைகளை மூட வேண்டும் என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்தது கூட அந்தப் பகுதி மக்கள் ‘ரிட்’ மனு தாக்கல் செய்த பின்பு தான்.

எந்தெந்த பிரச்னைகளுக்கு ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

ஐந்து வகைகளில் ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்

  1. முதல் வகை, ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’. இதற்கு ஆணையிடும் நீதிப் பேராணை என்று பொருள். அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யா விட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந் தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.

சாலையின் பிளாட்பார ஆக் கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

2.அடுத்தது ‘செர்ஷியோரரி (certiorari) ரிட்.’ ஒரு ஹை கோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள, ஒரு கோர்ட் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமு றையை உணர்த்து ம்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை. என்ன புரியவில்லையா? உதார ணமாக, ஒரு சினிமா தியேட்டர் கட்டுவதற்கு கலெக்டரிடம் ‘நோ அப்ஜக்ஷன்’ ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத் தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ் பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷப ணையைப் பரிசீலி க்காமல், நோ அப்ஜக்ஷனை கலெக்டர் தந் தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.

3.மூன்றாவது ரிட் மனுவிற்கு ‘கோவாரண்டோ’ (Quowarranto) என்று பெயர். எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லா மல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவி யின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித் தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ தாக்கல் செய்ய லாம்.

4.அடுத்தது பிரொகிபிஷன் (Prohibition) ரிட். அதாவது ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பத ற்காகப் போடப்படுவது இது.

5.அடுத்தது ‘ஹெபியஸ் கார்பஸ்’ (Hebeas corpus) ரிட். இதற்குத் தமிழில் ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டு மானாலும் போடலாம். ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்ட மாஸ்’, ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யலாம்.

மேலும் சட்ட ஆலோசனை பெற
விரும்பினால் அழைக்கவும்👇

தேசிய சட்ட நீதி இயக்கம் 6379434453