A-Z அட்டவணை / Index

A

B

C

F

I

P

R

S

W

#

Police not to interference cases | காவல் துறை தலையிடக்கூடாத வழக்குகள்.

1/35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 

35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி?

பொதுவாக நீங்கள் குற்றம் தொடர்பான புகாரை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும் என நினைப்பீர்கள். உண்மை அதுவல்ல. காவல் நிலையத்தில் மட்டுமேதான் புகாரைக் கொடுக்க வேண்டும் என்று சட்டமும், விதியும் சொல்லவில்லை. இருப்பினும் காவல் துறையில் புகாரைப் பதிவு செய்வது எப்படி கொடுப்பது என்பதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது தானே?

காவல் நிலையத்திற்கு மட்டுமல்லாது நீங்கள் எந்த மனுவை யாருக்கு எழுதினாலும், சட்ட பிரிவு போட்டு எழுதினா நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க என்பதை சட்ட விளக்கத்தோட புரிஞ்சிகிட்டு மனுவை பெறுகிறவர்களும், அதற்கு தக்கவாறு செயல்பட வேண்டும். என்பதற்காகத் தான் சட்ட பிரிவை குறிப்பிட்டு எழுதுவது. இது சட்டபடி முறையானதும் கூட. காவல் நிலையத்துக்கு புகார் எழுதும் போது இது போன்ற சட்டப் பிரிவுகளை எழுதினிங்க அப்படீன்னா அவங்க உண்மையிலேயே சந்தோசம்தானே படணும்? ஆனா அவங்களோ அப்படி ஒரு கோபத்துக்கு உள்ளாகிடுவாங்க.

போலீஸ்கிட்ட மட்டும் யாரும் சட்டம் பேசக் கூடாது அப்படீன்னு எந்த சட்டம் சொல்லுது அப்படீன்னு நானும் இது வரைக்கும் தேடிகிட்டே தான் இருக்கேன். ஆனாலும் கிடைத்த பாடில்லை. இருந்தால்தானே கிடைப்பதற்கு? அவங்க கோபத்துக்கு என்ன காரணம் என்றால், நீங்க அவங்களுக்குச் சட்டம் சொல்லி கொடுக்க, அதை அவங்க படிக்க, அப்புறம் சட்டப்படி நடக்க ஆரம்பித்து நல்லவங்களா மாறி வித்தியாசமான ஆளா ஆயிட்டா என்ன பன்றது அப்படீங்கிற பயம் தான். என்னோட நண்பர் ஒருவருக்கு, ‘மகாத்மா காந்தியின் சுய சரிதையான சத்திய சோதனை கொடுத்து படிக்க சொன்னேன். அய்யோ வேண்டவே வேண்டாம்” இந்த வம்பு… இதை படிக்க போயி அப்புறம் அதுபடி நடக்கணும் அப்படீங்கிற எண்ணம் வந்திட்டா, அப்புறம் என்னோட குணத்தன்மையே மாறி போயிடும் அப்படீன்னு வாங்க மறுத்து விட்டார். நான் அவருக்கு புத்தகம் எதற்காக கொடுக்கிறேன் என்பது போலீஸ்காரங்களை போலவே அவருக்கும் தெரிஞ்சி பேச்சு அப்படீன்னு தானே?

1/34. காவலர்களின் வகைகள் மற்றும் அதிகாரங்கள்.

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.

34. காவலர்களின் வகைகள் மற்றும் அதிகாரங்கள்.

சட்டத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு எப்படி சட்டங்கள் தெரிவது இல்லையோ, அதே போல் காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் கூட காவல் துறை பற்றி தெளிவாக தெரிவதில்லை. எனக்கு நீதித்துறையில் போராடி தெரிந்து கொண்ட உரிமை விசயங்களை விட காவல்துறையில் போராடிய அனுபவம் மிக மிக குறைவே.இருப்பினும் உங்களுக்கு தெரியப்படுத்தணும் அப்படீங்கிற ஆர்வத்தில் பல விசயங்களை நேரடி அனுபவம் இல்லாமல் படித்தவைகளை வைத்து இங்கு தெரிவித்திருக்கிறேன். இருந்தாலும் இவைகள் எந்த விதத்திலும் மாறுதலுக்கு உட்பட்டதல்ல.

பல வருடங்களாக இந்திய அளவில் காவல் துறை என்றாலே அதில் அதிக ஆண்களும், விரல் விட்டு எண்ண கூடிய அளவில் மட்டுமேதான் பெண்களும் பணியாற்றி வந்தனர்.

இந்த காரணத்தால் பல வருடங்களாக பெண்களுக்கு காவல் துறையை சேர்ந்த ஆண் காவலர்கள் விசாரணை என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் முடிவு கட்டி பெண்களுக்குத் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகத்தில் மகளிர் காவல் நிலையங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் 1973- ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் உள்ள கோழிகோட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், காவல் துறையினருக்கு என இரண்டு காவல் சட்டங்கள் உள்ளன. அவைகள் முறையே,

  • 1. சென்னை பெருநகரக காவல் சட்டம் 1888
  • 2. தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம் 1859

என சென்னை மாநகருக்கு என தனி காவல் சட்டமும், மற்ற மாவட்டங்களுக்கு என தனி சட்டமும் உள்ளது. இது தவிர தமிழ்நாடு காவல் நிலை ஆணையும் உள்ளன. இந்த.காவல் நிலை ஆணை சுமார் 800 பிரிவுகளை கொண்டதாக இருக்கிறது. இந்த ஆணையை தனியார் பதிப்பகங்கள் தமிழில் வெளியிடவில்லை.

இந்த காவல் நிலை ஆணையை காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளே கண்ணால் பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகமே! ஏனெனில், இந்த காவல் நிலை ஆணையை தமிழ்நாடு அரசு தமிழில் 1972-ஆம் ஆண்டில் “அலுவலக உபயோகத்திற்காக” என வெளியிட்ட பின் இதுவரை வெளியிடவில்லை. எப்படி ஒரு தனிநபர் சட்ட நூலுக்கு உரிமை கொண்டாட முடியாதோ அதே போல்தான் அரசும் என்பதால் “அலுவலக உபயோகத்திற்காக” என வெளியிட்டது சட்டப்படி சரியல்ல. இதன் நகல் பிரதி

தேவைப்படுவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம். காவற்படைச் சட்டம் 1861 என்ற மத்திய அரசின் சட்டத்தின்படி மாநில அரசுகள் தமது அதிகாரத்தின் கீழ் உள்ள பல்வேறு காவல் பொறுப்பை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து, இதில் பணியாற்றுபவர்களுக்கான சிறப்பான பெயர்ப்பட்டியல் மூலம் செயல்பட்டு வருகிறது.

காவல் துறையின் செயல்பாடுகளை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கு.வி.மு.வி உடன் மேற்கண்ட காவல் தொடர்பான சட்டங்களையும், நிலையாணைகளையும் சேர்த்து படிக்க வேண்டியிருக்கும்.

காவல் துறைப் பணியாளர்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறார்கள்.

  • 1. கீழ் நிலை காவலர்கள்
  • 2. காவல் நிலையப் பொறுப்பு அலுவலர்கள்,
  • 3. மேல் நிலை காவலர்கள்.

இதில் காவல் நிலையத்தில் பணியாற்ற கூடியவர்களை எடுத்து கொண்டால் முதல் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் காவலர் மற்றும் தலைமைக் காவலர் என்ற தகுதியில் உள்ளவர்கள் கீழ் நிலை காவலர் ஆவார்கள். தலைமைக் காவலர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் எழுத்தராக அதாவது ரைட்டர் ஆக இருப்பார்.

இவர்கள் தவிர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் என்ற வகையில் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரத்தில் ஒருவர் இருப்பார். அதாவது அந்த காவல் நிலையத்தைப் பொறுத்த வரை இவர்கள் தான் பொறுப்பாளிகளாக இருப்பார்கள்.

மற்றவர்கள் எல்லாம் மேல்நிலைக் காவலர்கள் என்ற தகுதியில் உள்ளவர்கள். அதாவது ஆய்வாளருக்கு மேல் துணைக் கண்காணிப்பாளர், உதவிக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், இணைக் கண்காணிப்பாளர், காவல் துறைக் கண்காணிப்பாளர், காவல் துறை துணைத் தலைவர், காவல் துறைத் தலைவர், காவல் துறைத் தலைமை இயக்குநர் என்ற வகையில் மேல் நிலை காவலர்கள் செயல்படுகிறார்கள்.

1/33. காவல் துறை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 

33. காவல் துறை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

நாட்டில் அமைதியான சூழல் உருவாவதற்கு அடிப்படைத் தளமே காவல் துறைதான் என்றாலும், பொதுவாகக் காவல் துறையைப் பற்றி மக்களிடையே நல்ல அபிப்பிராயம் கிடையாது. இதற்கு காரணம் அவர்களின் செயல்பாடுகளில் உள்ள சட்டத்துக்கு புறம்பான, வேண்டியவர் வேண்டாதவர் என வேறுபடுத்திப் பார்க்கிற மற்றும் முரட்டுத்தனமான அணுகு முறை தான்.

“நாட்டில் குற்றங்கள் நடை பெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் ஊதியம் இல்லாத கடமையாக இருக்கிறது. ஆனால் காவல் துறையினருக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய கடமையாக இருக்கிறது”

ஒவ்வொரு காவல் அலுவலரும் குற்றம் நிகழாமல் தடுக்கும் பொருட்டு தமது திறமைகள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என கு.வி.மு.வி. 149 காவலர்களுக்கு அறிவுறுத்துகிறது.

அதே போல் உயர்மட்டக் காவலர்களும் அதாவது ஆய்வாளர் தகுதிக்கு மேல் உள்ளவர்களும் செயல்பட வேண்டும் என கு.வி.மு.வி 36 பணிக்கிறது. இதன் படி, ஆயிரத்தில் ஒரு காவலர் செய்கிறாரா ஏன்றால் சந்தேகமே!

காவல் நிலையம் இருபத்தி நாலு மணி நேரமும் இயக்கும் பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமாகும். ஒரு காவல் நிலையத்தில் கட்டாயம் இரண்டு விதமான பிரிவுகள் இருக்கும். அதில், ஒன்று குற்றப் புலனாய்வுத் துறை மற்றொன்று சட்டம் மற்றும் ஒழுங்கு துறை. மேலும், தற்போது, நகரங்களில் நிர்வாக வசதிக்கென போக்குவரத்துக் காவல் துறையையும் சேர்த்து அமைத்து உள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறை என்பது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், கூட்டுக் கொள்ளை, கொள்ளை, திருட்டு,பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி, கள்ள நோட்டுகள், போலியான ஆவணங்கள்…. போன்ற இதர கடுமையான குற்றம் குறித்து புலனாய்வு செய்யும் துறையாகும் இது போன்ற புகார்கள் வரும் போது அதை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்வார்கள்.

சட்டம் மற்றும் ஒழுங்கு துறை என்பது சண்டை, சச்சரவு, சமுதாய சீர்கேடுகளை உண்டாக்குதல் போன்ற குற்றங்கள் பற்றி புகார் வரும் போது அவற்றை சமுதாய நல பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு அதற்கான ரசீதை வழங்குவார்கள்.

இதை விட முக்கியமாக உண்ணாவிரத போராட்டம், மறியல் தர்ணா போன்ற பொது மக்களுக்கு தொந்தரவு தரக்கூடிய செய்கைகளை புகார்கள் வரப்பெறாமலே கட்டு படுத்துவதும் ஆகும்.

இதை விட மிக முக்கியமாக குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் பிரபலங்களின் வழி காவலர்களாகவும், பாதுகாவலர்களாகவும், சிறை கைதிகளை சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று திரும்ப ஒப்படைப்பவராகவும் செயல்படுகின்றனர்.

தமிழ் நாட்டில் காவல் துறையினர் அதிவிரைவாகச் சென்று குற்றத்தை தடுக்க உதவும் பொருட்டும், குற்றத்தில் ஈடுபடுவர்களை கண்டு பிடிக்க உதவும் பொருட்டும் செய்து கொடுக்கப்பட்ட வாகனங்களை இந்த காரணத்திற்காக சில சமயங்களில் பயன்படுத்தினாலும், பல சமயங்களில் சாலை ஓரத்தில் நடக்கும் வியாபாரத்தில் சும்மா சர்..சர்…னு சென்று மாமூல் வசூலிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

தமிழ் நாட்டில் அனைத்து காவல் நிலையங்களையும் சேர்த்து மொத்தம் 1414 காவல் நிலையங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இது தவிர, புதிதாக தேசிய நேடுஞ்சாலையில் 20 காவல் நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன மற்றும் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க 20 இடங்களில் கேமராக்கள் அமைக்கும் திட்டம் உள்ளது என்ற தகவல் 03-02-2007 அன்றைய நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.

1/32. சட்டத்துக்கும் விதிக்கும் என்னவித்தியாசம்?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.

32. சட்டத்துக்கும் விதிக்கும் என்னவித்தியாசம்?

ட்ட”த்திற்கும், “விதி”க்கும் என்ன வித்தியாசம் என்பது அவ்வளவு எளிதாக நீதிபதிகளுக்கு கூடப் புரிந்ததாக தெரியவில்லை. இது எனக்கு புரிய சுமார் மூன்று வருடங்கள் ஆயிற்று. சட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் என்றும், விதி தெரிந்தவன் வில்லங்கமானவன் என்றும் சமுதாயம் பார்க்கின்ற நிலைக்கு சட்டத்தை பயன்படுத்தியவர்கள் தவறாக பயன்படுத்தி விட்டார்கள். உண்மையில் சண்டைப் போடவா சட்டம்?

‘நாட்டில் நடக்கும் செயல்கள் அனைத்தும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்ட தொகுப்புதான் சட்டம்’

இதன் நோக்கத்திற்காக, “சட்டம் என்பது எதை, எதை எல்லாம் செய்ய கூடாது. எதை, எதை எல்லாம் செய்யணும், இதை செய்வதால் அல்லது செய்யாமல் இருப்பதால் அது எந்த விதத்தில் குற்றமாகும்” என விளக்கம் தருவதுடன் அதற்கு என்ன தண்டனை என சொல்வதுமாகும். இப்படி செய்யப்பட்டதாக சொல்லப்படும் செயல் குற்றமா, தண்டனைக்கு உரியதா என்பதை விசாரணை செய்வதற்காக, அதாவது “புகாரைப் பதிவு செய்தல், சாட்சிகளை விசாரித்தல், குற்றம் சாட்டபட்டவரை பிணையில் விடுவித்தல், தண்டனை கொடுத்தல் அல்லது விடுதலை செய்தல் போன்ற பல வேறான செய்கைகளை செய்ய ஏற்படுத்தப்பட்டது தான் விதிகள்”

இன்னும் புரியிற மாதிரி சொல்லனும்னா சட்டம் என்பது நமது உடம்பு. இந்த உடம்பு வேலைகளை செய்ய வேண்டும். என்றால் ஐம்புலன்கள் உட்பட அனைத்து உறுப்புகளும் தேவை அல்லவா? இது தான் விதிகள். உடம்பு இயங்குவதற்கு எப்படி உறுப்புகள் தேவையோ அதே போல் சட்டத்திற்கு இயக்கம் கொடுப்பது விதிகள் தான். இப்ப புரியுதா?
எனவே “எப்படி ஒரு உறுப்பை உடம்பு என சொல்ல மாட்டோமோ அதே போல் தான் விதிகளை சட்டம் என சொல்ல கூடாது”. இதன் அடிப்படையில் தான் அதை சட்டப்படி சரியானதாக “குற்ற விசாரணை முறை விதிகள்” என பெயர் மாற்றம் செய்து உள்ளேன்.

1/31. குற்றம்னா, குற்ற வழக்குன்னா என்ன?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 36

31. குற்றம்னா, குற்ற வழக்குன்னா என்ன?

நீங்கள் ஒரு செயலை சட்டபடி செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க வேண்டும். செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாததை செய்வதும் குற்றமாகும் என இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 2 குறிப்பிடுகிறது. இது சரியல்ல. இது “குற்றத்துக்கான இலக்கணமும் அல்ல“.

நீங்க, “செய்ய கூடாததை செய்வதாலும், செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதாலும், அது அடுத்தவருக்கு எந்த வகையிலாவது உடல் ரீதியாக அல்லது  மனரீதியாக அல்லது உரிமை ரீதியாக துன்பத்தை ஏற்படுத்துகிறதா” என்பதை பார்க்க வேண்டும்.

இதை எனது முதல் நூலான “ஜாமின் எடுப்பது எப்படி?” நூலில் வலியுறுத்தி இருந்தேன். அதன் பிறகு தான் அறிந்தேன். நான் சொன்ன கருத்தே “துன்பம்” என்பதற்கு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.

ஆம்! இந்திய தண்டனை சட்டம் 1860 – ன் பிரிவு 44 ஆனது துன்பம் என்பதற்கு, ‘சட்டத்திற்கு முரணாக ஒருவருடைய மனம், புகழ் அல்லது சொத்துக்கு இழைக்கப்படும் தீங்கை குறிக்கும்” என விளக்கம் தருகிறது.

   ஆனால், இவைகளை எல்லாம் சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் பல தண்டனை சட்டங்கள் தேவையில்லாமல் இயற்றப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் அரசாங்கத்தின் “கைச் செலவை” சமாளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் என்று சொன்னால் மிகையல்ல.

இதன் காரணத்தால் தான் இது போன்ற குற்றங்களை விசாரிக்கும் போது சிறை தண்டனை வழங்காமல் அபராதம் மட்டுமே விதிக்கின்றன. இது போன்ற சட்டங்கள் இந்திய சாசன கோட்பாடு 13-இன்படி செல்லதக்கதல்ல என வாதம் செய்து நீக்க முடியும் என்றாலும் இதனை செய்ய இது வரை யாரும் முன் வந்ததாக தெரியவில்லை.

ஏனெனில் அரசாங்கம் எப்படி கைச்செலவை சமாளிப்பதற்காக இந்த சட்டங்களை வைத்திருக்கிறதோ அதே போல் அபராதம் செலுத்துபவர்களும் கைசெலவு பண்ணுற தொகை தானே என கருதி செலுத்தி விடுகின்றனர்.

இது போன்ற தண்டனை வழங்கத்தக்க சட்டங்களின் கீழ் செய்த குற்றத்துக்காக உங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஒரு நபரோ அல்லது காவல் அலுவலரோ அல்லது நீதிமன்றமோ எடுக்கும் நடவடிக்கைதான் குற்ற வழக்கு என்பதாகும்.

குற்றத்தை வரையறை செய்வதற்கு என பல சட்டங்கள் உள்ளன. இவைகளில் “எந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக கருதினாலும் அதற்காக நடவடிக்கை எடுக்க பயன்படுவதுதான் குற்ற விசாரனை முறை சட்டம் 1973 என்று தவறாக பெயரிடப்பட்டுள்ள குற்ற விசாரணை முறை விதிகள் 1973”. இதில் 1973 என்பது அது இயற்றப்பட்ட ஆண்டை குறிக்கும்.