“8 மாதங்களில் திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது” – தங்கமணி தாக்கு!

  • 44

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாளை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான தங்கமணி தலைமை தாங்கினார். அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “இந்த அரசு மக்களின் வெறுப்பை சம்பாதித்துவிட்டது. டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரையில், 2016-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றபோது, 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். அதேபோல, எடப்பாடி பழனிசாமியும், முதலமைச்சராக பதவியேற்ற போது, 500 டாஸ்மாக் கடைகளை மூடினார்.

ஆனால், இப்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க-வினர், ‘படிப்படியாக குறைப்போம்’ என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போது, படிப்படியாக டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, பள்ளிபாளையம் நகராட்சியில் 10 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகள் இல்லாமல் இருந்தன. இப்போது, 2 கடைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே, ‘இங்கு கடைகள் வரக்கூடாது’ என்று போராட்டமும் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

தங்கமணி

Also Read: அடிபம்ப்பை அகற்றாமல் தார்ச்சாலை; வைரலான வீடியோ! – நடவடிக்கை எடுத்த நகராட்சி

அதேபோல, பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டரை அணுகி, ‘இதுபோன்ற கடைகளை அதிகப்படுத்தக்கூடாது’ என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், கலெக்டரும் சரி, மற்றவர்களும் சரி, ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து, இப்போது மதுக்கடைகள் அதிகபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க தலைமை, எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் கொண்டிருக்கிறது. அதனால், மக்கள் தி.மு.க ஆட்சியை வெறுக்க தொடங்கியிருக்கின்றனர்.

அதிமுக – திமுக

வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். அதற்கு பயந்து கொண்டு தான், இப்போது தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே சுப்ரீம் கோர்ட்டை நாடியிருக்கின்றார்கள். யார் அ.தி.மு.க ஆட்சியில், தேர்தல் நடத்த வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்களோ, அவர்களே இப்போது வந்து 4 மாதம் தள்ளிப்போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்களை கண்டு அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. 8 மாத காலத்திலேயே இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்ததற்கு இது ஒரு உதாரணம். தி.மு.க மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்கத் தொடங்கிவிட்டது” என்றார்.

Also Read: “தேர்தலில் அதிமுக வெற்றியைத் தடுக்கவே திமுக அரசு ரெய்டு நடத்துகிறது” – ஜெயக்குமார் தாக்கு!

AIARA

🔊 Listen to this நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாளை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான தங்கமணி தலைமை தாங்கினார். அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “இந்த அரசு மக்களின் வெறுப்பை சம்பாதித்துவிட்டது. டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரையில், 2016-ம்…

AIARA

🔊 Listen to this நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாளை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான தங்கமணி தலைமை தாங்கினார். அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “இந்த அரசு மக்களின் வெறுப்பை சம்பாதித்துவிட்டது. டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரையில், 2016-ம்…

Leave a Reply

Your email address will not be published.