79 ரன் விளாசினார் கோஹ்லி இந்தியா 223 ஆல் அவுட்

79 ரன் விளாசினார் கோஹ்லி இந்தியா 223 ஆல் அவுட்

  • 42

கேப்டவுன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் விராத் கோஹ்லி 79 ரன் விளாசினார். நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. கேப்டன் கோஹ்லிக்கு வழிவிட்டு விஹாரி ஒதுங்கிக் கொள்ள, காயம் அடைந்த சிராஜுக்கு பதிலாக உமேஷ் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்கா மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. கே.எல்.ராகுல், மயாங்க் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ராகுல் 12 ரன், மயாங்க் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இந்தியா 33 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கோஹ்லி – புஜாரா நிதானமாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தனர். புஜாரா 43 ரன் எடுத்து (77 பந்து, 7 பவுண்டரி) ஜான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரகானே 9 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் விக்கெட் கீப்பர் வெர்ரெய்னிடம் பிடிபட்டார்.ஓரளவு தாக்குப்பிடித்த கோஹ்லி – பன்ட் இணை 5வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தது. பன்ட் 27 ரன், அஷ்வின் 2 ரன் எடுத்து ஜான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய கோஹ்லி 158 பந்தில் அரை சதம் அடித்தார். ஷர்துல் 12, பும்ரா (0), கோஹ்லி 79 ரன் (201 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), ஷமி 7 ரப் எடுத்து அவுட்டாக, இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (77.3 ஓவர்).தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 4, ஜான்சென் 3, ஆலிவியர், என்ஜிடி, மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்துள்ளது (8 ஓவர்). எல்கர் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 8, மகராஜ் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

AIARA

🔊 Listen to this கேப்டவுன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் விராத் கோஹ்லி 79 ரன் விளாசினார். நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. கேப்டன் கோஹ்லிக்கு வழிவிட்டு விஹாரி ஒதுங்கிக் கொள்ள, காயம் அடைந்த சிராஜுக்கு பதிலாக உமேஷ் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்கா மாற்றம் ஏதுமின்றி…

Leave a Reply

Your email address will not be published.