`74 சென்ட்டில் 250 கிலோ கேரட் சாகுபடி!’ – கவனம் ஈர்க்கும் ஈஷா இயற்கை விவசாய இயக்கம்
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோவை செம்மேடு பகுதியில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகின்றனர். பொதுவாக கேரட் சாகுபடி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரேதசங்களில்தான் நடைபெறும். இந்நிலையில், செம்மேடு மாதிரி பண்ணையில் கேரட் சாகுபடி, வெற்றிகரமாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர்.
கேரட்
Also Read: ஓட்ஸ் சங்கு சக்கரம், கேரட் ஆட்டம்பாம், மிளகாய் சரம்… செலிபிரிட்டீஸின் தீபாவளி ஸ்பெஷல்
இதுகுறித்து அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமுகா கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை வழங்கி வருகிறோம். கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் 60 ஏக்கர் பரப்பளவில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம்.
கோவை செம்மேடு கிராமத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த இடம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலைப்பகுதியில் இருந்து 3-5 கி.மீ தொலைவுதான். இயற்கை விவசாயம் என்பதால் ஊடுபயிர் போடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
ஸ்ரீமுகா
இங்கு வெண்டை, தக்காளிதான் முக்கிய பயிர். வெண்டைக்கு ஊடுபயிராக முள்ளங்கி, கொத்தமல்லி போடுவோம். பயிரிட்டு 45-வது நாளில் வெண்டை பூ வரும்போது, முள்ளங்கி அறுவடைக்கு வந்துவிடும். 80 சென்டில் விதைத்ததில், 4 டன் முள்ளங்கி, 800 கிலோ கொத்தமல்லி கிடைத்தது.
முள்ளங்கி, கேரட் எல்லாம் ஒரே வகைதானே என்று யோசித்துதான் இந்த முயற்சியில் இறங்கினோம். தட்பவெப்ப சூழ்நிலையும் சாதகமாக இருந்தது. பொதுவாக வெண்டை பூ வந்தவுடனே, அருகில் உள்ள வயலில் வெண்டை விதை போட்டுவிடுவோம். முன்பு, 4 அடி இடைவெளியில் இரண்டு முள்ளங்கி விதைகளை போடுவோம்.
கேரட் சாகுபடி
அதில் நிறைய இடைவெளி இருந்தது. இந்த முறை 1 அடிக்கு முள்ளங்கியும், அதற்கு அரை அடி இடைவெளியில் கேரட்டும் விதைச்சோம். செப்டம்பர் மாத மத்தியில் தொடங்கினோம். அப்போதிருந்தே நல்ல மழை.
கிட்டத்தட்ட 120 நாள்களுக்கு பிறகு நாங்கள் எதிர்ப்பார்த்தை விட நல்ல பருமனாமாகவும் நீளமாகவும் கேரட் விளைந்தது. பொதுவாக காய்கறி கடைக்கு சென்று 1 கிலோ கேரட் வாங்கினால் 12 முதல் 13 கேரட் பிடிக்கும். ஆனால், நாங்கள் எந்தவித ரசாயனங்களையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விளைவித்ததன் காரணமாக 6 அல்லது 7 கேரட்களிலேயே ஒரு கிலோ கிடைக்கிறது.
கேரட்
நல்ல அளவு, நிறம், சுவை எல்லாவற்றிலும் கேரட் சிறப்பாக இருக்கிறது. அடுத்தமுறை ஆடிப்பட்டத்தில் அரை ஏக்கர், புரட்டாசி பட்டத்தில் அரை ஏக்கர் கேரட் போடலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
ஊடு பயிரிலேயே (74 சென்ட்) சுமார் 250 கிலோ கேரட் கிடைத்தது. அடுத்தமுறை கேரட்டை இன்னும் நெருக்கமாக, மேட்டுப்பாத்தியை சற்று உயரமாக அமைத்து தனிப்பயிராகவே போடலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதேபோல, பாரம்பர்ய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியையும்,
ஈஷா மாதிரி பண்ணை
நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு இரண்டே கால் டன் விளைச்சல் கிடைத்துள்ளது. இதுதவிர பவானி என்கிற நெல் ரகம், முட்டைகோஸ் போன்றவையும் பயிரிட்டுள்ளோம்.
பரிசோதனை செய்து வெற்றி பெற்ற இயற்கை விவசாய தொழில்நுட்பங்களை, விவசாயிகளுக்கு களப் பயிற்சியாக சொல்லி கொடுக்கிறோம். இதுவரை 12,000 விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம். அதில் நிறைய பேர் வெற்றிகரமாகவும் லாபகரமாக விவசாயம் செய்து முன்னோடி விவசாயிகளாக மாறி உள்ளனர்.
ஈஷா மாதிரி பண்ணை
Also Read: `தொண்டை மண்டலத்தை இயற்கை வேளாண் மண்டலமாக்கு வதுதான் இலக்கு!’ – THOFA நடத்தும் வேளாண் திருவிழா
பின்னர், அவர்களுடைய தோட்டத்திலேயே புது விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் கற்றுக்கொடுத்து வருகிறோம்” என்றார்.

🔊 Listen to this ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோவை செம்மேடு பகுதியில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகின்றனர். பொதுவாக கேரட் சாகுபடி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரேதசங்களில்தான் நடைபெறும். இந்நிலையில், செம்மேடு மாதிரி பண்ணையில் கேரட் சாகுபடி, வெற்றிகரமாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர். கேரட் Also Read: ஓட்ஸ் சங்கு சக்கரம், கேரட் ஆட்டம்பாம், மிளகாய் சரம்… செலிபிரிட்டீஸின் தீபாவளி ஸ்பெஷல் இதுகுறித்து அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமுகா கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும்…
🔊 Listen to this ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோவை செம்மேடு பகுதியில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகின்றனர். பொதுவாக கேரட் சாகுபடி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரேதசங்களில்தான் நடைபெறும். இந்நிலையில், செம்மேடு மாதிரி பண்ணையில் கேரட் சாகுபடி, வெற்றிகரமாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர். கேரட் Also Read: ஓட்ஸ் சங்கு சக்கரம், கேரட் ஆட்டம்பாம், மிளகாய் சரம்… செலிபிரிட்டீஸின் தீபாவளி ஸ்பெஷல் இதுகுறித்து அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமுகா கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும்…