68 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி; ஆஷஸ் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா: அறிமுக வேகம் போலண்ட் அசத்தல்

68 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி; ஆஷஸ் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா: அறிமுக வேகம் போலண்ட் அசத்தல்

மெல்போர்ன்: இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா, 3-0 என முன்னிலை பெற்றதுடன் ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் 2 டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் மெல்போர்னில் கடந்த 26ம் தேதி ‘பாக்சிங் டே’ போட்டியாக தொடங்கியது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 267 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ஹாரிஸ் அதிகபட்சமாக 76 ரன் எடுத்தார். இதைத் தொடர்ந்து, 82 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்திருந்தது.கேப்டன் ரூட் 12, ஸ்டோக்ஸ் 2 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டோக்ஸ் 11 ரன், ரூட் 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இங்கிலாந்து அணி 27.4 ஓவரில் வெறும் 68 ரன் மட்டுமே எடுத்து 2வது இன்னிங்சை இழந்தது. பட்லர் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் அறிமுக வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் மைக்கேல் போலண்ட் (32 வயது) 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார்.ஸ்டார்க் 3, கிரீன் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 14 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய ஆஸ்திரேலியா, 3-0 என முன்னிலை பெற்றதுடன் ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியது. போலண்ட் ஆட்ட நாயகன் விருதுடன் பெருமை மிகு ‘ஜானி முல்லா’ பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். இவர் ஆஸி. பழங்குடியின வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜன.5ம் தேதி தொடங்குகிறது.

🔊 Listen to this மெல்போர்ன்: இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா, 3-0 என முன்னிலை பெற்றதுடன் ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் 2 டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் மெல்போர்னில் கடந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *