48-வது நினைவு நாளையொட்டி பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.சென்னை சிம்சன் பகுதியிலுள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

image

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தந்தை பெரியார் பிறந்த தினமாகிய செப்டம்பர் 17-ஐ அரசின் சார்பில் சமூக நீதி நாளாக கொண்டாட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

AIARA

🔊 Listen to this பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று – திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம்…