4-வது முறையாக 142 அடியைத் தொட்ட முல்லைப்பெரியாறு அணை; மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ளது. இந்த அணையின் மூலம் ஏறக்குறைய 2,12,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.‌ தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் துவக்கத்தில் 152 அடி நீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால் கேரளா அரசின் விஷம பிரசாரத்தால் 1979-ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

மீண்டும் 152 அடி உயர்த்த 35 ஆண்டு காலமாக தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கிடையே பல்வேறு நிபுணர் குழுக்களின் ஆய்வுகளின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை ‌142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் 2014 மே 7-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் அணையை கண்காணிப்பதற்கு மத்திய நீர்வள ஆணைய அமைப்பின் தலைவர் தலைமையில் மூவர் குழுவையும் நியமித்தது.

142 அடியை எட்டிய வைகை அணை

Also Read: இளைஞர்களின் முயற்சியால் சீரமைக்கப்பட்ட குளம்; 50 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வந்ததால் மகிழ்ச்சி!

அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு நவம்பர் 21, 2015-ம் ஆண்டு டிசம்பர் 7, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டி அதன் உறுதித் தன்மையை நிரூபித்தது. ஆனால் முல்லைப் பெரியாறு அணை பலம் இழந்துவிட்டதாக தொடர்ந்து கேரள அரசு தவறானக் கருத்துக்களை பரப்பியது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் முழுகொள்ளளவைத் தேக்கவிடாமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் நிகழாண்டின் தொடக்கம் முதல் பெய்துவரும் கோடை மழை மற்றும் தென்கிழக்கு, வடகிழக்கு பருவமழையினால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் ஜூன் முதல் வாரத்தில் அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் அக்டோபரில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 136 அடியை கடந்தது.

இதனால் விரைவில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டிவிடும் என்பதால், கேரளாவைச் சேர்ந்த தனிநபர் தொடர்ந்த வழக்கால் அணையில் ரூல் கர்வ் முறை அமல்படுத்தப்பட்டு 139.50 அடியாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நவம்பர் 30-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

அணை

Also Read: `இது எங்களோட வெற்றி!’- 58-ம் கால்வாயில் 58 பானை பொங்கல் வைத்து வைகை நீரை வரவேற்ற அதிமுகவினர்

அதன்படி அக்டோபர் 29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ச்சியாக கேரளாவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்ட போதிலும் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் குறையவே இல்லை.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.55 மணியளவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனால் மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் 1682.46 கனஅடி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக வல்லக்கடவு, வண்டிப் பெரியாறு, சப்பாத்து, உப்புத்தர உள்ளிட்ட கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாற்றின் வழித்தடப் பகுதி மக்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

AIARA

🔊 Listen to this கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ளது. இந்த அணையின் மூலம் ஏறக்குறைய 2,12,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.‌ தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் துவக்கத்தில் 152 அடி நீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால் கேரளா அரசின் விஷம பிரசாரத்தால் 1979-ம் ஆண்டு அணையின் நீர்மட்டம்…

AIARA

🔊 Listen to this கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ளது. இந்த அணையின் மூலம் ஏறக்குறைய 2,12,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.‌ தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் துவக்கத்தில் 152 அடி நீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால் கேரளா அரசின் விஷம பிரசாரத்தால் 1979-ம் ஆண்டு அணையின் நீர்மட்டம்…