`30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் டார்கெட்!’ – நாசா விஞ்ஞானி என 14 பெண்களிடம் திருமணம் செய்வதாக பண மோசடி

  • 4

திருமண தகவல் இணைய தளங்களில் கிடைக்கும் தகவல்களை எடுத்து பெண்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை அருகில் உள்ள கல்யாண் என்ற இடத்தை சேர்ந்த 35 வயது பெண் திருமணத்திற்காக தனது தகவல்களை திருமண தகவல் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதனை பார்த்த ஆதித்யா மாத்ரே என்பவர் 35 வயது பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினார். தான் இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார். அதோடு தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அப்பெண்ணும் அவரை நம்பினார். அடிக்கடி அவர்கள் போனில் பேசிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் தனக்கு சிறிய பணப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்து உதவினால் திரும்ப கொடுத்துவிடுவதாக ஆதித்யா அப்பெண்ணிடம் தெரிவித்தார். அப்பெண்ணும் தனது திருமணம் மற்றும் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த 14.36 லட்சத்தை மாத்ரேயிடம் கொடுத்தார்.

மோசடி

ஆனால் மாத்ரே அதோடு நிறுத்தாமல் மேலும் 25 லட்சம் கேட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் தனது பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அதன் பிறகு அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து மாத்ரேயை தேடி வந்தனர். மாத்ரே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். இதனால் போலீஸாரால் அவரை கைது செய்வது சிரமமாக இருந்தது. எனினும் அவரின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடைசியாக திருமண தகவல் இணைய தளத்தில் கிடைத்த ஒரு பெண்ணிடம் திருமணம் குறித்து பேசுவதற்காக நவிமும்பை செல்ல இருப்பது தெரிய வந்தது.

உடனே போலீஸார் மாத்ரேயை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் நவுஸ் மாத்ரே, தன்மே மாத்ரே, ஆதித்ய மாத்ரே என வேறு வேறு பெயர்களில் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இவ்வழக்கை விசாரித்து வரும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “திருமண தகவல் இணைய தளத்தில் பதிவு செய்திருக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே குறி வைத்து ஆதித்யா மாத்ரே செயல்பட்டுள்ளார். அப்பெண்களிடம் தான் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசாவில் விஞ்ஞானி என்று கூறி வேறு வேறு பெயர்களில் அறிமுகம் செய்து கொள்வார்.

கைது

அப்பெண்ணின் நம்பிக்கையை பெற்ற பிறகு அப்பெண்ணிடம் தனக்கு தொழில் பிரச்னை அல்லது வேறு எதாவது பிரச்னை என்று கூறி பணம் கேட்பது வழக்கம். அப்படி பணம் கையிக்கு வந்தவுடன் வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார். வேலையில்லாமல் இருக்கும் ஆதித்யாவிற்கு இதுவே முழு நேர வேலையாகும். ஆதித்யா எல்லோரிடமும் தனக்கு திருமணமாகவில்லை என்று தெரிவித்து வந்தார். ஆனால் அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். மும்பை, கல்யான், ராய்கட், தானே போன்ற பகுதியில் இது வரை 15 பெண்களிடம் இது போன்று ரூ.1 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலத்திலும் தனது கைவரிசையை காட்டியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

🔊 Listen to this திருமண தகவல் இணைய தளங்களில் கிடைக்கும் தகவல்களை எடுத்து பெண்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை அருகில் உள்ள கல்யாண் என்ற இடத்தை சேர்ந்த 35 வயது பெண் திருமணத்திற்காக தனது தகவல்களை திருமண தகவல் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதனை பார்த்த ஆதித்யா மாத்ரே என்பவர் 35 வயது பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினார். தான் இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார். அதோடு தனக்கு…

🔊 Listen to this திருமண தகவல் இணைய தளங்களில் கிடைக்கும் தகவல்களை எடுத்து பெண்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை அருகில் உள்ள கல்யாண் என்ற இடத்தை சேர்ந்த 35 வயது பெண் திருமணத்திற்காக தனது தகவல்களை திருமண தகவல் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதனை பார்த்த ஆதித்யா மாத்ரே என்பவர் 35 வயது பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினார். தான் இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார். அதோடு தனக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *