21வது உச்சி மாநாடு – இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின்

அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்தடைந்தார்.

இந்தியா – ரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இந்த சந்திப்பில் ராணுவம், தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துறைகளில் இருதரப்பு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், ஆசிய பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிக்கவுள்ளனர். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு உச்சி மாநாடு நடக்காத நிலையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

🔊 Listen to this அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்தடைந்தார். இந்தியா – ரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இந்த சந்திப்பில் ராணுவம், தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துறைகளில் இருதரப்பு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை…